Monday, 19 October 2026

 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது!




































தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாக நடத்தினர்.

விழாவையொட்டி பள்ளியில் உள்ள கல்வி உபகரணங்கள் மற்றும் பணிக்குப் பயன்படும் பொருட்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காளாஞ்சி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இவ்விழா பள்ளியில் மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் நடைபெற்றது.

No comments:

Post a Comment