*🛑🔴🟢சதுரங்க பயிற்சி: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாரந்தோறும் தொடர்ந்து இலவசமாக பள்ளி மாணவர்களுக்கு புகழ்பெற்ற சதுரங்க பயிற்சியாளர்களைக் கொண்டு எவ்வித கட்டணமும் இல்லாமல் தொடர்ந்து சதுரங்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது*
Friday, 9 October 2026
ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை!
தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்
சென்னை -
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், ஓய்வுபெற்ற 23 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் லெட்சுமணனுக்கு ஓய்வூதிய ஆணையை மாண்புமிகு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் வழங்கினார்.
இந்நிகழ்வில், லெட்சுமணன் சார்பாக அவரது மகனும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான லெ. சொக்கலிங்கம், ஓய்வூதிய ஆணையைப் பெற்றுக்கொண்டார்.
தனது தந்தையின் பத்திரிகைப் பணியைப் போற்றும் வகையில் தமிழக அரசு ஓய்வூதிய ஆணை வழங்கியிருப்பது மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிப்பதாக லெ. சொக்கலிங்கம் தெரிவித்தார்.
Thursday, 8 October 2026
*🔴🟢🛑தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கும் நிகழ்வில் எனது தந்தையாருக்கு ஓய்வூதிய ஆணை மாண்புமிகு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் வழங்கினார்கள். எனது தந்தையின் சார்பாக அதனைப் பெற்றுக் கொண்ட மகிழ்வான தருணம். தோழமையுடன் லெ. சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*



















































