Sunday, 18 October 2026

 [10/08, 6:02 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்…


⭕நாள் : 10.08.2026


⭕முக்கிய அறிவிப்புகள் :


⭕காலை வழிபாட்டு கூட்டத்தை பொறுத்தவரையில் பள்ளி நேர், பள்ளி ஓய்வு, உறுதிமொழி, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை பள்ளி மாணவர் தலைவர் அல்லது காலை வழிபாட்டு கூட்டத்தை நடத்துபவர் மட்டுமே கூற வேண்டும் மற்றவர்கள் சேர்ந்து கூறக்கூடாது.


⭕பெரும்பாலான பள்ளிகளில் இதனை அனைத்து மாணவர்களும் சேர்ந்து கூறுகிறார்கள். இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளும் மாற்றிக் கொள்ள வேண்டும்.


⭕அதேபோல் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பள்ளிக்கு வர வேண்டும். ஒரு சில பள்ளிகளில் 10 மணி வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். அதனை தவிர்த்து சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.


⭕இந்த கல்வியாண்டின் பள்ளி ஆய்வானது அக்டோபர் 21 முதல் அனைத்து ஒன்றியங்களுக்கும் தொடங்க உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


⭕7.8.2026 வெள்ளிக்கிழமை அன்று 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆய்வு எப்படி இருக்கும் என்பதை ஐந்து பள்ளிகளில் மாதிரி ஆய்வு நடத்தப்பட்டு அது அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதனை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதே முறையில் தான் முழு அளவில் ஆய்வு நடைபெறும். 


⭕6,7, மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆய்வு எவ்வாறு நடைபெறும் என்பதை இந்த வாரத்திற்குள் மாதிரி ஆய்வு அனுப்பப்படும்.


⭕இதுவரை ஆய்வு செய்த வரையில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் மாணவர்கள் சற்று பின்தங்கியுள்ளனர்.


⭕ஆங்கில பாடத்தை பொருத்தவரையில் நடத்திய பாடங்களை வாசிக்க தெரிய வேண்டும். ஆனால் பல மாணவர்களுக்கு நடத்திய பாடங்களையே வாசிக்க தெரியவில்லை. எனவே இதை தனி கவனம் செலுத்தி அனைத்து மாணவர்களும் நடத்திய பாடங்கள் வரை ஆங்கிலத்தில் வாசிப்பதை உறுதி செய்ய வேண்டும்.


⭕அக்டோபர் 21 ஆய்வு தொடங்கும் போது இரண்டாம் பருவம் ஆரம்பித்து விடும் என்பதால் முதல் பருவ புத்தகங்களையும் மாணவர்களுக்கு வாசிக்க தெரிய வேண்டும். அதனால் பள்ளிகளில் முதல் பருவ புத்தகங்களையும் வைத்திருக்க வேண்டும்.


⭕ஐந்தாம் வகுப்பை பொறுத்தவரையில் கணிதத்தில் வகுத்தல் செய்வதில் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அனைத்து மாணவர்களும் வகுத்தல் பிழையின்றி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.


⭕ஒவ்வொரு வாரமும் மாணவர்களை ஆய்வு செய்து அதில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நான் சனிக்கிழமை தோறும் கூறுவதை கவனித்து அதனை சரி செய்ய வேண்டும்.


⭕இந்த முறை போட்டி கடுமையானதாக இருக்கும். ஏனெனில் இந்த முறை 6 வகையாகப்பிரித்து Shield கொடுக்கப்படும். எனவே மாணவர்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்து இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


⭕நேரடியாக சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..., பாராட்டுக்கள்…, நன்றி… வணக்கம்...


-மாவட்டக் கல்வி அலுவலர்,

( தொடக்கக் கல்வி ),

 தேவகோட்டை.

[17/08, 6:16 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்…


⭕நாள் : 17.08.2026


⭕முக்கிய அறிவிப்புகள் :


⭕Noon Meals Updation இல் நமது கல்வி மாவட்டம் பின்தங்கி உள்ளது.14.08.2026 நிலவரப்படி, 1473 மாணவர்களுக்கு Update செய்யவேண்டும் என தெரியவருகின்றது. ஏற்கனவே அறிவுறுத்தியபடி, Attendance போதே Noon Meals Updation செய்யப்படவேண்டும். இது சார்பாக எந்த ஒரு புகாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


⭕SMC மறுகட்டமைப்பு - Tentative (தற்காலிக) Schedule வழங்கப்பட்டுள்ளது: 29.08.2026 அன்று இது சார்பாக All Parents Meeting நடத்தப்படவேண்டும். 50% தொடக்கப்பள்ளிகளுக்கு 12.09.2026 இல் மறுகட்டமைப்பு செய்யப்படவேண்டும். மீதமுள்ள 50% பள்ளிகளுக்கு 19.09.2026 இல் செய்யப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் 10.10.2026 இல் தேர்தல் வைத்து உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவேண்டும். அரசாணை வெளியிட்ட பிறகு மேற்படி அறிவுரைகள் வழங்கப்படும். இதற்கு தயாரான நிலையில் அனைவரும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


⭕ செப்டம்பர் 17 முதல் காலை உணவு திட்டம் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. கடந்த வியாழக்கிழமை மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உதவி பெறும் பள்ளிகளின் சமையலறை இதற்கு ஏற்றவாறு உள்ளதை அப்பள்ளிகளின் மேலாண்மை உறுதி செய்தல் வேண்டும்.


⭕Survey - தமிழ் பொறுத்தவரையில் 70% மாணவர்கள் திறம்பட உள்ளனர். ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் 40% மட்டுமே வந்துள்ளனர். ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும். கணிதத்தில், வாய்பாடு வகுத்தல் மற்றும் பெருக்கல் பயிற்சி அளிக்கவும். 


⭕நேரடியாக சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..., பாராட்டுக்கள்…, நன்றி… வணக்கம்...


-மாவட்டக் கல்வி அலுவலர்,

( தொடக்கக் கல்வி ),

 தேவகோட்டை.

[24/08, 6:04 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்…


⭕நாள் : 24.08.2026


⭕முக்கிய அறிவிப்புகள் :


⭕மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 2 தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 


⭕1. மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவாக முடிக்கப்பட வேண்டும். அதாவது ஒரு சில இடங்களில் பணி வேகமாக நடைபெறுவதாகவும் ஒரு சில இடங்களில் மிக மெதுவாக நடைபெறுவதாகவும் தெரிவித்தார்கள்.


⭕நான் அவர்களிடம் கூறும் பொழுது உரிய காலத்திற்குள் எங்களுடைய ஆசிரியர்கள் பணியை முடித்து விடுவார்கள் என்று கூறியுள்ளேன். எனவே உரிய காலத்திற்குள் பணியினை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


⭕2. காலை உணவு திட்டமானது செப்டம்பர் 17 முதல் 6, 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஏற்கனவே 1 முதல் 5 குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் ஆரம்பிக்கும் பொழுது தட்டு மற்றும் டம்ளர் ஏற்பாடு செய்யப்பட்டது போல் தற்போது 6, 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 1ம் தேதிக்குள் தட்டு மற்றும் டம்ளர் ஏற்பாடு செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.


⭕பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தொடர்பான அரசாணையை அனைவரும் பார்த்திருப்பீர்கள் அதில் ஒரே ஒரு தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 ஏற்கனவே உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டது தற்போது வந்துள்ள அரசாணையின்படி செப்டம்பர் 26 அன்று நடுநிலைப் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


⭕ஆகஸ்ட் 29 அன்று பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். செப்டம்பர் 12 அன்று 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கும், செப்டம்பர் 19 மீதமுள்ள 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26 ஆம் தேதி அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.


⭕கடந்த ஒரு வாரத்திற்குள் சிவகங்கை மாவட்டத்தில் தினமும் பள்ளிகள் சம்பந்தமான எதிர்மறையான செய்திகள் நாளிதழ்களில் அதிகமாக வந்து கொண்டுள்ளன. 


⭕சென்ற வாரம் மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் கூட்டத்தில் கூறும் பொழுது அதிக அளவில் பிரச்சனைகள் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதால் ஒரு சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.


⭕ஆனால் நமது தேவகோட்டை கல்வி மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலும் அது போன்ற செய்திகள் இல்லை. இதேபோல் பத்திரிகைகளில் எதிர்மறை செய்திகள் வராதவாறு அனைத்து பள்ளிகளும் பார்த்துக் கொள்ள வேண்டும்


⭕அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் ஒற்றுமையாக இருந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.


⭕இந்த வாரம் நமது ஆய்வை பொருத்தவரையில் சென்ற வாரம் கூறியதைப் போலவே ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் சற்று பின்னங்கியுள்ளனர்.


⭕ஆகையால் ஆங்கிலத்தில் தினமும் 15 வார்த்தைகள் அவர்களுடைய புத்தகத்தில் குறித்து கொடுத்து அதை படிக்கச் செய்து மறுநாள் அவர்களுக்கு Dictation கொடுப்பதன் மூலம் மாணவர்களை ஆங்கில வார்த்தைகளை எளிமையாக வாசிக்கவும் எழுதவும் வைக்க முடியும்.


⭕ஆறு ஏழு எட்டு குழந்தைகளில் ஒரு சில பள்ளிகளில் வாய்ப்பாடுகள் கூறுவதில் கூட சிரமப்படுகிறார்கள்.


⭕எனவே எந்த மாணவன் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் பின் தங்கியுள்ளார்களோ அவர்களை தனியாக பிரித்து பயிற்சி கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும்


⭕நேரடியாக சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..., பாராட்டுக்கள்…, நன்றி… வணக்கம்...


-மாவட்டக் கல்வி அலுவலர்,

( தொடக்கக் கல்வி ),

 தேவகோட்டை.

[31/08, 6:57 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்…


⭕நாள் : 31.08.2026


⭕முக்கிய அறிவிப்புகள் :



⭕மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை பொறுத்தவரையில் அனைவரும் நிறைவு செய்திருப்பீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.


⭕SMC பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் 29.8.2026 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளிலும் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தி இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.


⭕காலை உணவு திட்டமானது செப்டம்பர் 17 முதல் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமைக்குள் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


⭕அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் தயார் நிலையில் உள்ள கிச்சன் மற்றும் தட்டு டம்ளர் ஆகியவற்றுடன் புகைப்படம் எடுத்து சார்ந்த வட்டார கல்வி அலுவலர்களுக்கு தயார் நிலையில் உள்ளது என்று அனுப்ப வேண்டும்.


⭕அடுத்ததாக நம்முடைய ஆய்வை பொறுத்தவரையில் இந்த வாரமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. எடுத்துக்காட்டாக ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை நம்மிடம் படித்த குழந்தைகள் ஐந்தாம் வகுப்பில் எழுத்துக்கள் தெரியாமல், வாசிக்க தெரியாமல் உள்ளார்கள். இது அனைத்து ஒன்றியங்களுக்கும் பொருந்தும்.


⭕நான் மீண்டும் மீண்டும் கூறுவது இந்த ஆண்டின் இலக்கு 100% IED குழந்தைகளை தவிர்த்து அனைத்து குழந்தைகளும் அடிப்படைத் திறனில் முழுமை அடைந்திருக்க வேண்டும்.


⭕உதாரணமாக நான்காம் வகுப்பு வாசிப்பை பொறுத்தவரையில் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் அனைத்து பாடங்களையும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் இது பொருந்தும்.


⭕இந்த மாதம் அனைத்து ஒன்றியங்களில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கும் google meet நடைபெறும். அந்த கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் மொத்தம் எத்தனை மாணவர்கள் உள்ளார்கள் அதில் எத்தனை குழந்தைகள் அடிப்படைத் திறனை நிறைவு செய்திருக்கிறார்கள் இன்னும் எத்தனை குழந்தைகள் அடிப்படைத் திறனில் பின்தங்கி உள்ளார்கள் என்ற விவரங்களையும், மேலும் இன்னும் எத்தனை நாட்களில் அந்த குழந்தைகளை முன்னேற்றம் அடைய செய்ய முடியும் என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.


⭕நம்மிடம் படித்த அனைத்து குழந்தைகளும் 100% அடிப்படைத் திறனை முடித்திருக்க வேண்டும். மேலும் வேறு பள்ளியில் இருந்து வந்த குழந்தைகளை தமிழ் மட்டுமாவது வாசிக்க வைத்திருக்க வேண்டும்.



⭕நேரடியாக சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..., பாராட்டுக்கள்…, நன்றி… வணக்கம்...


-மாவட்டக் கல்வி அலுவலர்,

( தொடக்கக் கல்வி ),

 தேவகோட்டை.

[07/09, 7:59 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்…


⭕நாள் : 07.09.2026


⭕முக்கிய அறிவிப்புகள் :


⭕பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பானது 12.9.26, 19.9.26 மற்றும் 26.9.26 ஆகிய நாட்களில் அரசு வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடத்தி முடித்திட கேட்டுக்கொள்கிறேன்.


⭕உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நமது பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நபர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

 

⭕இந்த வார பள்ளி ஆய்வின் போது 6,7, மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களில் ஒரு சில மாணவர்கள் வாசிப்பில் பின்தங்கியுள்ளனர்.


⭕ஐந்தாம் வகுப்பு குழந்தைகளும் ஒரு சிலர் வாசிக்கத் தெரியாமல் உள்ளனர் எழுத்துக்களை ஆய்வு செய்யும் பொழுது ஒரு சில குழந்தைகள் எழுத்துக்களும் தெரியாமல் உள்ளனர்.


⭕நாம் ஏற்கனவே கூறியது போல் எழுத்துக்கள் தெரியவில்லை என்றால் அந்த மாணவன் வாசிக்க முடியாது. பல பள்ளிகளில் மாணவர்கள் எழுத்துக்கள் தெரியாமல் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.


⭕எனவே எழுத்துக்கள் தெரியாத மாணவர்களை காலை மற்றும் மதிய நேரங்களில் நன்றாக வாசிக்கக்கூடிய மாணவர்களிடம் பிரித்துக் கொடுத்து பயிற்சி கொடுக்கச் செய்தால் விரைவாக வாசிக்க வைக்க முடியும்.


⭕என்னுடைய எதிர்பார்ப்பு வாசிப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் தமிழாவது வாசிக்க வேண்டும்.


⭕ஆய்வு தொடங்குவதற்கு முன்பாக தமிழை அனைத்து மாணவர்களும் வாசிக்க வைத்து விட்டால் நான் ஆய்விற்கு வருவதற்குள் கணிதத்திலும் முன்னேற்றம் அடைய செய்ய முடியும். எனவே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு செல்லும் பொழுது தமிழ் மற்றும் கணிதத்திலாவது முன்னேற்றத்துடன் செல்ல வேண்டும்.


⭕செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாக அனைத்து ஒன்றியங்களில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கும் google meet நடைபெறும். அந்த கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் மொத்தம் எத்தனை மாணவர்கள் உள்ளார்கள், அதில் எத்தனை குழந்தைகள் அடிப்படைத் திறனை நிறைவு செய்திருக்கிறார்கள், இன்னும் எத்தனை குழந்தைகள் அடிப்படைத் திறனில் பின்தங்கி உள்ளார்கள் என்ற விவரங்களையும், மேலும் இன்னும் எத்தனை நாட்களில் அந்த குழந்தைகளை முன்னேற்றம் அடைய செய்ய முடியும் என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.


⭕இந்த மாதம் முதல் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும். நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் முழு நேரத்தையும் பயன்படுத்தி தேர்வு எழுதி முழு மதிப்பெண் பெற முயற்சிக்க வேண்டும்.


⭕வாசிப்பில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள் என்றால் அவர்கள் எவ்வளவு நேரம் தேர்வு எழுதுகிறார்களோ அதாவாது கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் அதில் அவர்களுக்கு தெரிந்ததை எழுதி கொடுத்துவிட்டு மீதியுள்ள நேரத்தை அவர்கள் வாசிப்பதற்கான பயிற்சியை கொடுத்து அந்த நேரத்தையும் வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் முழு இரண்டு மணி நேரத்தையும் தேர்வு எழுத வைக்க வேண்டாம்.


⭕இந்த முறை 7 ஒன்றியங்களுமே சிறந்த ஒன்றியங்களாக வரவேண்டும். இந்த கல்வியாண்டில் நாம் 100% அனைத்து மாணவர்களையும் வாசிக்க வைக்க வேண்டும். அதே சமயம் நம்முடைய முதல் இலக்கு நான் ஆய்வுக்கு வருவதற்கு முன் தமிழை மட்டுமாவது வாசிக்க வைத்திருக்க வேண்டும்.

 

⭕நேரடியாக சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..., பாராட்டுக்கள்…, நன்றி… வணக்கம்...


-மாவட்டக் கல்வி அலுவலர்,

( தொடக்கக் கல்வி ),

 தேவகோட்டை.

[15/09, 8:11 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்…


⭕நாள் : 15.09.2026


⭕முக்கிய அறிவிப்புகள் :


⭕சாக்கோட்டை ஒன்றியத்தை தவிர்த்து மற்ற ஒன்றியங்களுக்கு Google Meet நடைபெற்று முடிந்து விட்டது. சாக்கோட்டை ஒன்றியத்திற்கு இந்த மாதம் தேர்வு முடிவதற்குள் ஏதாவது ஒரு நாள் Google Meet நடைபெறும்.


⭕8.9.2026 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி நடுநிலைப் பள்ளியாக இருந்தால் எட்டாம் வகுப்பும், தொடக்கப் பள்ளியாக இருந்தால் ஐந்தாம் வகுப்பும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். அந்த வகுப்புகளில் ஆய்வு திருப்தியாக இருந்தால் மட்டுமே மற்ற வகுப்புகள் ஆய்வு செய்யப்படும் இல்லையெனில் அந்த பள்ளிக்கு மதிப்பெண் வழங்கப்படாது. 


⭕பொதுவாக ஒவ்வொரு வருடமும் நாம் இரண்டு ஆய்வுகள் மேற்கொள்வோம். ஆனால் இந்த வருடம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஒரே ஒரு ஆய்வு மட்டுமே செய்ய இருக்கிறோம்.


⭕முதலில் நம்மிடம் இருந்து வெளியே செல்லக்கூடிய ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளை நாம் அடிப்படைத் திறனில் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். அதற்காகத்தான் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.


⭕இதுவரை ஆய்வு செய்த வரையில் பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஒரு சில பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சற்று பின் தங்கிய நிலையில் உள்ளது. அந்த பள்ளிகளில் மட்டுமே சரி செய்ய வேண்டி உள்ளது.


⭕அதேபோல் 11.9.2026 அன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆய்வு செய்யக்கூடிய மாதங்களை தெரிவித்திருக்கிறோம். அதன்படி 1 முதல் 99 வரை அக்டோபர் மாதமும், 100 முதல் 150 வரை நவம்பர் மாதமும், 151 முதல் 200 வரை டிசம்பர் மாதமும், 200 க்கு மேல் உள்ள பள்ளிகள் ஜனவரி மாதமும் ஆய்வு நடைபெறும்.


⭕நம்முடைய இலக்கு 100 சதவீதம் அனைத்து மாணவர்களும் அடிப்படை திறனில் தேர்ச்சி அடைய வேண்டும். அதற்காகத்தான் இவ்வாறு திட்டமிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


⭕ஏற்கனவே தெரிவித்தபடி தேர்வு நேரங்களை பின்தங்கிய குழந்தைகளுக்கு தேர்வு எழுதுவதற்கு முழுமையாக பயன்படுத்த வேண்டாம். அவர்கள் தேர்வு முடித்தவுடன் அவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


⭕ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு வழக்கம் போல் முதல் பருவத்தில் இருந்து Full Scape Paper பயன்படுத்தி தேர்வு எழுத வைக்க வேண்டும்.


⭕ஒரு பள்ளி என்றால் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் இணைந்தது தான். எனவே தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் குழுவில் பெறக்கூடிய தகவல்கள், வட்டார கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறக்கூடிய தகவல்கள், BRC மூலமாக பெறக்கூடிய தகவல்கள், என்னிடமிருந்து பெறக்கூடிய தகவல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து விட வேண்டும்.


⭕ஏனெனில் பள்ளி சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமே உங்களுக்கு பகிரப்படுகிறது. அதனை உடனுக்குடன் நீங்கள் பகிர்வதன் மூலம் உங்களுடைய வேலைகளை விரைவாக முடிக்க முடியும்.


⭕எனவே இன்றிலிருந்து அனைத்து தலைமை ஆசிரியர்களும் நீங்கள் பெறக்கூடிய அலுவலக சம்பந்தப்பட்ட, பள்ளி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்கள் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு பகிர வேண்டும்.


⭕நான் பள்ளி ஆய்விற்கு வரும் பொழுது உங்கள் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் கேட்கும் பொழுது அவர்கள் அந்த தகவல்களை சரியாக சொல்ல வேண்டும்.

 

⭕நேரடியாக சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..., பாராட்டுக்கள்…, நன்றி… வணக்கம்...


-மாவட்டக் கல்வி அலுவலர்,

( தொடக்கக் கல்வி ),

 தேவகோட்டை.

[16/09, 3:02 pm] BEO 2 SURIYA DVK: 16.9.2026 இன்று ஒரு நடுநிலை பள்ளியில் தமிழ் தேர்வு முடிந்த பின் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது அவர்கள் எழுதிய தமிழ் வினாத்தாளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 8ஆம் வகுப்பில் மொத்தம் 16 குழந்தைகள் இருந்தனர் மூன்று குழந்தைகள் மட்டும் பின் தங்கிய நிலையில் இருந்தனர் அந்த குழந்தைகளை அந்த வகுப்பில் நன்கு படிக்க கூடியவர்களை வைத்து ஒரு குழு உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறி வுறுத்தப்பட்ட நிகழ்வு

[19/09, 10:57 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர் கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 

⭕நாள் : 19.09.2026

⭕ 21.10.2026 முதல் தொடங்கவுள்ள நமது ஆய்விற்கு இரண்டாம் வகுப்பிற்கு பாடத்திட்டம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.. 


தமிழ்: 247 எழுத்துக்களும் சொல்ல, எழுத தெரிந்து இருக்க வேண்டும். 


English: Able to read and write 26 Alphabets, and able

 to say phonics sounds . 


கணிதம்: 1 முதல் 99 வரை எண்கள் சொல்ல, எழுத தெரிந்து இருக்க வேண்டும். 


⭕அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. பாராட்டுகள்... நேரடியாக சந்திப்போம்.. நன்றி வணக்கம்.. 


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், 

தேவகோட்டை.

[21/09, 5:31 am] BEO 2 SURIYA DVK: ⭕அன்பார்ந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் SMC ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்…


⭕நாள் : 21.09.2026


⭕முக்கிய அறிவிப்புகள் : 


⭕மிக மிக முக்கிய அறிவிப்பு : இன்று நடைபெறக்கூடிய ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான ஆங்கில தேர்விற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வினாத்தாளை வைத்து தேர்வு நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக இன்று காலை சார்ந்த வட்டார கல்வி அலுவலர் மூலமாக உங்களுக்கு வழங்கப்படும் புதிய வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும். 


⭕மற்ற தேர்வுகள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்ட வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதேபோல் இனி வரக்கூடிய அனைத்து தேர்வுகளையும் கவனமாக எந்த பிரச்சனைகளும் வராதவாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.


⭕சிங்கம்புணரி ஒன்றியத்தை பொறுத்தவரையில் இன்று காலை 8.45 மணிக்கு ஒன்றாம் எண் பள்ளியில் நானே வந்து அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாள் வழங்கி விடுவேன். அதற்கு ஏற்றார் போல் தயார் நிலையில் வரவும்.


⭕மற்ற ஒன்றியங்களை பொறுத்தவரையில் சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு ஏற்ப வினாத்தாளை பெற்றுக் கொள்ளலாம்.


⭕தற்பொழுது தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. தேர்வு என்கிற முறையில் நாம் ஆய்வு செய்யும் பொழுது மாணவர்கள் எழுதக்கூடிய பதில் சரியோ தவறோ அவர்கள் வினாத்தாளை வாசித்து பதில் எழுதக்கூடிய அளவிற்கு தயார் நிலையில் உள்ளனர். நன்கு பயிற்சி கொடுத்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


⭕18.9.2026 வெள்ளிக்கிழமை சுற்றறிக்கையின் படி ஆங்கில பாடத்தில் ஐந்தாம் வகுப்பில் மாணவர்களை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அதேபோல் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் நாம் கூறக்கூடிய தகவல்களின்படி மாணவர்களை தயார் செய்ய வேண்டும்


⭕இந்த முறை தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களுக்கும் Book மற்றும் Note ஆகியவை அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு வந்து வழங்கப்படும்.


⭕ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் Book மற்றும் Note ஆகியவை அந்தந்த பள்ளிகளுக்கு வந்து தான் வழங்கப்படுகிறது. ஒரு சில பள்ளிகளுக்கு விடுபட்டு இருந்தால் அது இந்த முறை சரி செய்யப்பட்டு முழுமையாக அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு விடும்.


⭕நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் வட்டார கல்வி அலுவலர் கூறும் தேதியில் உங்கள் பள்ளிக்குரிய Book மற்றும் Note ஆகியவற்றை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றபடி சாக்குகளில் உங்களது பள்ளி பெயரை எழுதி ஒரு சாக்கு என்றால் 1/1 என்றும் இரண்டு சாக்கு என்றால் 1/2 , 2/2 என்றும் மூன்று சாக்கு என்றால் 1/3, 2/3, 3/3 என்றும் எழுதி கட்டி வைத்து விட்டால் நாங்கள் உங்கள் பள்ளிக்கு லாரி மூலமாக கொண்டு வந்து கொடுத்துவிடுவோம்.


⭕எந்த பள்ளிக்காவது புத்தகம் மற்றும் நோட்டு ஆகியவை பள்ளிக்கு நேரடியாக வந்து இறங்கவில்லை என்றால் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம்.


⭕அனைத்து ஒன்றியங்களுக்கும் google மீட் நடைபெற்று முடிந்து விட்டது அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டு விட்டது. இந்த முறை நம்முடைய இலக்கு 100% அதற்கான முயற்சிகளில் அனைத்து பள்ளிகளும் ஈடுபட வேண்டும்.


⭕அதேபோல் தேர்வு நேரங்களில் மாணவர்களை ஆய்வு செய்யும் பொழுது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நன்கு பயிற்சி கொடுத்துள்ளீர்கள். ஒன்று இரண்டு குழந்தைகளை மட்டுமே நாம் இன்னும் பயிற்சி கொடுத்து கொண்டு வர வேண்டி உள்ளது. 


⭕விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்க வேண்டும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு வாட்ஸ் அப் குழு மூலம் பயிற்சி கொடுக்க வேண்டும்.

 

⭕நேரடியாக சந்திப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..., பாராட்டுக்கள்…, நன்றி… வணக்கம்...


-மாவட்டக் கல்வி அலுவலர்,

( தொடக்கக் கல்வி ),

 தேவகோட்டை.

[28/09, 6:22 am] BEO 2 SURI

No comments:

Post a Comment