மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி கையேடுகள் வழங்கல்
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான “எண்ணும், எழுத்தும்” பயிற்சி கையேடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் தேவகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினர். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், வகுப்பறைக் கற்றலை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றவும் இப்பயிற்சி கையேடுகள் உதவும் என தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் ஆர்வத்துடன் கையேடுகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை முறையாகப் பயன்படுத்தி கற்றல் திறனை மேம்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=O6p6iORL9Uw
No comments:
Post a Comment