Saturday, 10 October 2026

  1. தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி!

    1. நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்









    2.  

    3. தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

    4. மாணவி ரித்திகா வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினார்.

      அவர் பேசுகையில், “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே, மாணவர்கள் அனைவரும் உடல் நலத்துடன் இருக்க வேண்டும். நிலவேம்புக் குடிநீர் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைத் தடுக்க, மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். மேலும், டெங்கு தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

      தேவகோட்டை நகராட்சி சார்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சிவரஞ்சனி, முத்துமீனாள் மற்றும் நகராட்சிப் பணியாளர் ஜெகன் ஆகியோர் செய்திருந்தனர்.

      பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம். அருகில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

    5.  வீடியோ : https://www.youtube.com/watch?v=SFChdhN2EhA





No comments:

Post a Comment