Monday, 5 October 2026

 

இரண்டாம் பருவம் தொடக்கம்: மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கல்










தேவகோட்டை: முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் ஸ்ரீதர், சிவரஞ்சனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விடுமுறைக்குப் பிறகு உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர். ஏராளமான பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=eVJuZvf2MLo

No comments:

Post a Comment