Tuesday, 29 September 2026

 

விடுமுறையில் வாசிக்க மாணவர்களுக்கு புத்தகங்கள் – படித்ததை கூறுவோருக்கு பரிசு





தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், முதல் பருவ விடுமுறையை பயனுள்ளதாக பயன்படுத்த பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு தலா நான்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம், விடுமுறை நாட்களில் மாணவர்கள் புத்தகங்கள் மற்றும் நூலகங்களைப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு, சிறப்பாக பதிலளிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், சிவரஞ்சனி, ஆர்த்தி  ஆகியோர் செய்திருந்தனர்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையில் வாசிப்பதற்காக புத்தகங்கள் வழங்கப்பட்டன.




வீடியோ : 
https://www.youtube.com/watch?v=P3TO-fVQnRc

No comments:

Post a Comment