Saturday, 2 May 2020

ஆளுமைகளுடனான அனுபவம்

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . ஜெ.ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி பற்றி எழுதிய வரிகள்:

                         இந்தப் பள்ளி ஆசிரிய பெருமக்கள் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் கண்தானம், உடல்தானம் போன்றவற்றை செய்வதனால் உண்மையான சேவையினை அவர்கள் கல்விப் பணிக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாக தமிழகத்திற்கே முன்மாதிரியாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி செயல்படுவதை பாராட்டுகிறேன், உங்களது சேவை மனிதநேயத்துடன் தொடரவும் பல வெற்றிகள் அனைவருக்கும் கிடைத்திட இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன்.

ஜெ. ஜெயகாந்தன் இ.ஆ.ப.
 மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை .




மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

                           
                                      சிவகங்கை  மாவட்ட ஆட்சியர்  ஜெ. ஜெயகாந்தன் இ.ஆ.ப. அவர்களை முதன் முதலாக தேவகோட்டை நகராட்சி சார்பாக   தேவகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமில்  எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற நிகழ்வில் சந்தித்தேன்.எங்கள் பள்ளி மாணவர்கள் கை  கழுவும் முறைக் குறித்து மிகத் தெளிவாக அந்த நிகழ்வில் டெங்கு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அப்போதே பாராட்டினார்கள். 

மாணவர்களுடன் கலந்துரையாட அன்பான அழைப்பு :

      அதிலிருந்து எங்கள் பள்ளியை நன்றாக நினைவு வைத்திருந்தார்கள். பிறகு   இரண்டு தனியார் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் பார்த்து அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு எங்கள் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருந்தேன். அதன் பிறகு ஒரு நாள் மாலை சிவகங்கைக்கு சென்று ஆட்சியர் அவர்களை இரவு எட்டே முக்கால் மணியளவில் சந்தித்து எங்கள் பள்ளியில் உடல் தானம் மற்றும் கண் தானம் வழங்கிய ஆசிரியர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை தங்கள் கையால் வழங்க வேண்டும் என்றும், மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துரையாட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொண்டேன் .மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்   எங்கள் பள்ளி மீது நல்ல ஆர்வமாக இருந்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நேரில் சந்தித்த பொழுது, என்னிடம் ஏற்கனவே தாங்கள் இரண்டு முறை என்னை அழைத்து உள்ளீர்கள். எனவே நான் கண்டிப்பாக உங்கள் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்  என்று தெரிவித்து இருந்தார்கள். 

அசத்திய மாவட்ட ஆட்சி தலைவர் :

             மாவட்ட ஆட்சி தலைவர் ஜெ. ஜெயகாந்தன் இ.ஆ.ப. அவர்கள் நிகழ்ச்சிக்கு எங்கள் பள்ளிக்கு வருவதாக ஒப்புதல் அளித்திருந்த நாளுக்கு  அடுத்த நாள் மிக முக்கியமான நாள் . எனவே அந்த நாளில் அவர்கள் வருவார்களா என்று எனக்கு லேசாக சந்தேகம் இருந்தது .இருந்தபோதிலும் மாவட்ட ஆட்சியரின் அவர்களின் தனி உதவியாளர் அவர்கள் கண்டிப்பாக உங்கள் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் வருவதாக சொல்லி உள்ளார்கள். எனவே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தார்கள். மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் எனக்கு தேவகோட்டை வட்டாட்சியர் அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது .உங்கள் பள்ளியில் உள்ள நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வருகை தர இருக்கிறார்கள் .நாங்களும் வருகிறோம் என்று தெரிவித்தார்கள். பிறகு நகராட்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்கள் பள்ளிக்கு வர இருக்கிறார்கள் .நாங்களும் உங்கள் பள்ளிக்கு வருகிறோம் என்று தெரிவித்தார்கள் . அனைவரும் எங்கள் பள்ளிக்கு காலை 10 மணிக்கு வந்தார்கள். சரியாக 10 30 மணிக்கெல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிவகங்கையில் கிளம்பி எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.. 

மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் பாராட்டு :

                  உடல் தானம்,  கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்த எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்கள் .பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தார்கள். மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மாணவர்களிடம் பேசும்போது,நாட்டிற்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டும், மாணவர்களாகிய உங்களுடைய பங்கு என்ன என்பது குறித்தும் மிகத் தெளிவாக பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு  மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சித் தலைவர் எப்படி இருப்பார், அவருடைய பதவி எப்படி என்றெல்லாம் எண்ணி பார்த்து மாணவர்கள் வியந்தார்கள். 

இரண்டரை மணி நேரம் - மாணவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சி தலைவர் :


                நான் படிக்கும்போதெல்லாம் மாவட்ட ஆட்சி தலைவர் காரில் செல்வதை தொலைக்காட்சியில்,சினிமாவில் பார்த்துள்ளேன். அருகில் சென்று பார்த்தது கிடையாது.சில ஆண்டுகளுக்கு முன்பு பல நாளிதழ்களில் சில மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாணவர்களுடன் ஒரு நாள் என்கிற முறையில் பழகியதை பார்த்து படித்துள்ளேன். அது போன்று நிகழ்வுகளை பார்த்ததும், எனக்கும் நம் பள்ளி மாணவர்கள் அனைவரையும்  மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுடன் கலந்துரையாட செய்ய வேண்டும் என எண்ணம் வந்தது.அதன் தொடர்ச்சியாக , மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை அணுகி,தொடர் முயற்சி செய்து , மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் எங்கள் பள்ளியில் படிக்கும்   இளம் வயது மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்ய முயற்சி செய்தேன்.மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து  பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்திய விதம் மிகவும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.மாவட்ட ஆட்சி தலைவரை மிக அருகில் பார்த்து ,சந்தேகங்கள் கேட்டு இரண்டரை  மணி நேரத்தை எங்கள் பள்ளி மாணவர்களுடன் பயணித்தது   மறக்க முடியாத நிகழ்வு. 

நன்றிகள் பல :

                      எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பதவி என்றால் என்ன,அந்த பதவிக்கு செல்ல என்ன படிக்க வேண்டும் , அதற்கான முயற்சிகள் எவ்வாறு எடுப்பது போன்ற தகவல்களை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மிகவும் அன்பாக, கனிவாக, பண்பாக எங்கள் பள்ளி மாணவர்களுடன் பழகி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்ததற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அருமையான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்  பள்ளிக்கு வருவதற்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் . 

நன்றி கலந்த அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வலைதளத்தில் காணலாம் :
 
 https://kalviyeselvam.blogspot.com/2019/10/blog-post_31.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2019/11/blog-post_8.html#more

 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வீடியோவாக  காணலாம் :

 https://www.youtube.com/watch?v=Bin3vrnNyWo

 https://www.youtube.com/watch?v=38iLR9iiT9g

 https://www.youtube.com/watch?v=YU9voUo7iQE





No comments:

Post a Comment