Tuesday, 12 May 2020

குவைத் நாட்டிலிருந்து வாட்சப் வீடியோ கால் வழியாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்








தேவகோட்டை - ஊரடங்கு நிலையை   பயனுள்ளதாக்கும்  வகையில் குவைத் நாட்டிலிருந்து வள்ளியம்மை சரவணன்  என்பவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் வழியாக சதுரங்க பயிற்சி வழங்கி வருகிறார்.

                                                குவைத் நாட்டில் வசித்து வருபவர் வள்ளியம்மை சரவணன்.  செஸ் பயிற்சியில் மிகத் தேர்ந்தவர்.குவைத்  நாட்டில் வசிக்கும் பள்ளி  மாணவர்களுக்கு கண்ணை கட்டிக்கொண்டு சதுரங்கம் விளையாடும் பயிற்சி அளித்து அதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிவருபவர். குவைத் நாட்டிலும் ஊரடங்கு ஆரம்பித்த நிலையில் தேவகோட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கத்தை  தொடர்புகொண்டு வாட்ஸ்அப் கால் வழியாக உங்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு கற்றுக் கொடுக்கின்றேன் என்று கூறினார்.இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தெரிவித்ததாவது:
                                      
                              குவைத் நாட்டில் வசித்து வருபவர்  வள்ளியம்மை சரவணன். அவர்களது சதுரங்க சாதனை  பேட்டி  நாளிதழில் வெளிவந்ததை படித்து வாழ்த்து தெரிவித்தேன். அப்பொழுது உங்கள் பள்ளிக்கு விரைவில் வருகை தந்து மாணவர்களுக்கு சதுரங்க  பயிற்சி அளிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் ஊரடங்கு ஆரம்பித்தபோது அண்ணார் அவர்களே என்னை தொடர்புகொண்டு, உங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் வழியாக சதுரங்க பயிற்சி அளிக்கின்றேன்  என்று தெரிவித்தார்.எங்கள் பள்ளியில் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் நிலையில், சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் போன் உள்ளது.அதிலும் ஒரு சில மாணவர்களிடம் மட்டுமே செஸ் போர்டு மற்றும் காயின் உள்ளது.அந்த மாணவர்களை  கண்டுபிடித்து ,ஒருங்கிணைத்து,ரூக் பிரிவு,கிங் பிரிவு,குயின் பிரிவு  என குழுக்களாக மாணவர்களை பிரித்துக்கொண்டு, கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்து வருகின்றார்.    ஒரு நாளைக்கு மூன்று மாணவர்கள் என்கிற விதத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றரை மணி நேரம் வாட்ஸ்அப் வீடியோ கால் வழியாக சதுரங்க பயிற்சி அளித்து வருகின்றார். ஊரடங்கு நிலையில் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.தொடர்ந்து நான்கு வாரங்கள் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.இந்த பயிற்சியின் மூலம் , பிற்காலங்களில் செஸ்  போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம் என்றும் வள்ளியம்மை சரவணன் என்னிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் மாணவர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு கொடுத்து தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றார்கள்.செஸ் பயிற்சியின் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறன் , கூர்ந்து நோக்கும் திறன் அதிகரிக்கும் என்று தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

பட விளக்கம் : குவைத் நாட்டிலிருந்து வள்ளியம்மை சரவணன் என்பவர்   வாட்சப் வீடியோ கால் வழியாக  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  சதுரங்க பயிற்சி வழங்கி வருகிறார் ஊரடங்கு நிலையை  பயனுள்ளதாக்கும்  வகையில்.சதுங்க பயிற்சி  மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.


 

குவைத் நாட்டிலிருந்து வாட்சப் வீடியோ கால் வழியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர் வள்ளியம்மை சரவணன் - வீடியோ

 https://www.youtube.com/watch?v=EkTSP0WkqPQ


 https://www.youtube.com/watch?v=Zo7CJHePx-o


 https://www.youtube.com/watch?v=JMi16VNbfgE



No comments:

Post a Comment