தமிழக காவல் துறை நடத்திய ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும்
குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்விற்காக இணைய வழியில் நடைபெற்ற ஓவிய போட்டி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழக காவல்துறை சார்பாக குழந்தைகளுக்காக நடைபெற்ற ஆன்லைன் ஓவிய போட்டியில் பங்கேற்றனர்.
தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்
தடுப்புப் பிரிவு சார்பில் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும்
குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி ஆன்லைனில் நடத்தப்பட்டது .குழந்தைகளுக்கான போட்டியில் 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என
இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது.மாணவர்கள் புகழேந்தி,சண்முகம்,முத்தய்யன்,முகேஷ்,பிரிஜித்,திவ்யஸ்ரீ,மெர்சி,
கிருத்திகா ,திவ்யதர்ஷினி,சுவேதா,மாலினி,ஓவியா ஆகியோர் பங்கேற்றனர்.ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் ஏ-4 சைஸ் அட்டையில் ஓவியம் வரைந்து அதைப் புகைப்படம் எடுத்து அதற்கென உள்ள மின்னஞ்சலில் தலைமை ஆசிரியர் மூலம் அனுப்பினார்கள் . இந்த போட்டி தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார். ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் , முத்துலெட்சுமி, செல்வமீனாள் ஆகியோர் மாணவர்களை ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கேற்க வைத்தனர்.மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்ப்பதால் சில மாணவர்களிடம் மட்டுமே ஆன்ட்ராய்டு மொபைல் உள்ளது.ஆன்ட்ராய்டு மொபைல் மாணவர்களையும்,பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தி ஆசிரியர்கள் ஓவியம் வரைய செய்து போட்டிகளில் பங்கேற்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழக காவல்துறை சார்பாக குழந்தைகளுக்கான நடைபெற்ற ஆன்லைன் ஓவிய போட்டியில் பங்கேற்று ஓவியங்களை வரைந்து அனுப்பினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் , முத்துலெட்சுமி, செல்வமீனாள் ஆகியோர் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

No comments:
Post a Comment