ஆளுமைகளுடனான அனுபவம்
நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்களுடன் பழகிய அனுபவம்
நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி அனுபவம் குறித்து எழுதிய வரிகள் :
Bala'zs Gulya's
Professor, Nanyang Technological University,
Lee Kongchian School of Medicine,
Singapore:
Professor, Karoliuska Institute, Stockholm, Sweden.
I was honoured by the invitation and flattened by the friendly and giatious reception. Your students are very promising young people. Who will become Good doctors, police Officers,teachers, Nurses,
tradesmen,Housemakers Fireman, officers,, Engineers artists and the like. Your Teachers are very inspirational And you are HeadMaster is a good leader.
God bless you in all you are activities!
Balazs Gulyas
நோபல் பரிசு குழு உறுப்பினரை சந்திக்க காரணமானவர் :
கடந்த 2019 வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்திலிருந்து இணை இயக்குனர் பரசுராமன் பத்மநாபன் என்கிற பேராசிரியர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதாகவும், செல் உயிரியல் தொடர்பான தகவல்களை, அவருடைய பேட்டியை பத்திரிக்கைகளில் கண்டேன். பல்கலைக்கழத்தில் உள்ள நண்பர்கள் மூலமாக அன்னாரின் என்னை பெற்று அன்னாரை பள்ளிக்கு வருமாறு அன்புடன் அழைத்து இருந்தேன். அப்பொழுது அவர்கள் திருச்சியிலிருந்து தான் தற்பொழுது வந்து கொண்டிருப்பதாகவும் தன்னுடைய பாஸ் நோபல் பரிசு குழு உறுப்பினர் பலாஸ் அவர்களுடன் காரைக்குடி தாபா கார்டன் நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும், சரியாக 10 நிமிடத்துக்குள் வந்தால் ஐந்து நிமிடம் நேரில் சந்திக்கலாம் என்றும், தனக்கு அவசரமாக ஒரு கூட்டம் இருப்பதாகவும்,தற்போது சந்திக்க இயலவில்லை என்றால் இரவு 9 மணிக்கு சந்திக்கலாம் என்று கூறினார்.நான் வாய்ப்பை தவறவிடமால் ,உடனடியாக அன்னாரை சென்று சந்தித்தேன். அப்போது அவர் மட்டும் மறுநாள் எங்கள் பள்ளிக்குவ வருவதாக கூறினார்.
எண்ணம்போல் நடந்த சந்திப்பு :
அப்பொழுது என்னுள் ஒரு எண்ணம் ஓடியது.அடுத்தநாள் அவரது பாஷையும் அழைக்கலாம் என்று எண்ணினேன். திரு பரசுராமன் பத்மநாபன் அடுத்த நாள் மதியம் பள்ளிக்கு வருவதாக தெரிவித்து இருந்தார் .அன்று இரவு 9 மணி அளவில் மீண்டும் ஒருமுறை அண்ணார் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து தேவகோட்டையில் பழமையான இடங்கள் இருக்கிறது அவற்றையும் பார்க்கலாம். நீங்கள் அவசியம் வாருங்கள் என்று அன்புடன் அழைப்பு விடுத்தேன். பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துமாறும் அன்பு அழைப்பு விடுத்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள், அப்படி என்றால் தான் தனது பாஸ் நோபல் பரிசுக் குழு உறுப்பினர் பலாஸ் அவர்களை உடன் அழைத்து வருகின்றேன் என்று தெரிவித்தார்கள் . சொன்னபடி மறுநாள் மதியம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு வந்து அங்கிருந்து அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு எங்கள் பள்ளிக்கு சென்றோம் .
நோபல் பரிசு குழு உறுப்பினருடன் மாணவர்கள் கலந்துரையாடல் :
அப்போது நோபல் பரிசுக் குழு உறுப்பினர் பலாஸ் அவர்கள் மிக அழகாக மாணவர்களுடன் ஆங்கிலத்தில் பேசினார்கள். அந்த ஆங்கில உரையை பரசுராமன் அவர்கள் தமிழ் மொழி பெயர்த்தார்கள். பலாஸ் அவர்கள் மாணவர்களிடம் பேசும்பொழுது, மாணவர்களே எனக்கு 63 வயது ஆகிறது. 55 வருடத்திற்கு முன்னால் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த ஞாபகங்கள், சிறு கிராமத்தில் பள்ளியில் படித்த நினைவுகள் உங்களை சந்திக்கும் போது எனது நினைவுக்கு வருகிறது. ஹங்கேரி நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து ஆசிரியர்களின் சொல்படி படிப்பின் அவசியத்தை உணர்ந்து நான் படித்ததால், பல ஆயிரம் மைல் தொலைவு கடந்து பயணம் செய்து வந்து உங்கள் முன் இப்போது பேசும்போது அதனை மனப்பூர்வமாக உணர்கிறேன். ஒவ்வொருவரும் பள்ளிக்கு செல்லுதல்,படித்தல் போன்றவற்றை வாழ்க்கை முழுவதும் தொடருங்கள் .ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் நல்ல நிலைக்கு உயர முடியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம் ஆவேன் .உங்களை சுற்றி உள்ளவர்களையும் , உறவினர்களையும் ,அப்பா ,அம்மா ,தாத்தா, பாட்டி ஆகியோரையும் மதித்து அவர்கள் சொல்படி நடந்தால் வாழ்க்கையில் உயரத்தை தொடலாம் .அது மிகவும் முக்கியம். பணிவு இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக அடையலாம் .பல்வேறு நாடுகளுக்கும் செல்வதற்கு எனக்கு கல்வி மட்டுமே பயன்படுகிறது. கல்வியே உங்கள் சொத்தாகும் என்று மாணவர்களிடம் தன்னம்பிக்கை தரும் விதத்தில் ஆங்கிலத்தில் பேசினார் . சிங்கப்பூர் பல்கலைக்கழக இணை இயக்குனர் பரசுராமன் பத்மநாபன் தமிழில் மொழி பெயர்த்தார்.
தமிழகம் குறித்தும்,கலாசாரம் ,கல்வி குறித்தும் விசாரித்தல் :
அன்னார் அவர்கள் காரில் வரும் பொழுதும் , பள்ளியிலும் பல்வேறுதகவல்களை நமது கல்வித் துறை தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டார் . மிக ஆர்வமுடன் மாணவர்கள் குறித்தும், பெற்றோர்கள் குறித்து ஆர்வமாக கேட்டுக் கொண்டார். பள்ளியின் அருகே உள்ள சிவன்கோயில் குறித்தும் பல்வேறு தகவல்களை கேட்டுக் கொண்டார் .அவர் பிறந்த நாட்டில் எல்லாம் மக்கள் அனைவரும் மொத்தமாக ஓரிடத்தில் கூடி வழிபடுவதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வருகிறார் என்பதை அறிந்து இவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற விவரத்தை பதிவு செய்தார். மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற ஆசிரியர்களையும், பள்ளியையும் பயன்படுத்தி வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி அடையலாம். அவ்வாறு வெற்றி அடைந்ததற்கு நானே ஒரு உதாரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஹங்கேரி கல்வியாளரை பார்த்தது மறக்கமுடியாத அனுபவம் :
அவருடனான அனுபவம் மறக்க முடியாது. மதியம் 2 மணி முதல் மாலை 7 மணிவரை சுவையான அனுபவம்.மிகப்பெரிய ஆளுமையை,நேர்மையானவரை அருகில் இருந்து பார்த்து மகிழ்ந்த அனுபவம்.மீண்டும் அவரை காரைக்குடி கொண்டு வந்த அவருடைய இடத்தில் விட்டு விட்டோம். தேவகோட்டையில் உள்ள வள்ளி ஆட்சி அவர்களின் வீட்டை ஆர்வமுடன் , அன்புடன் பார்த்தார். அங்கு பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். ஆச்சரியப்பட்டு பேசினார்.இந்த வீட்டை பார்த்ததும்,எங்கள் பள்ளிக்கு வந்ததும் ,வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்று என்று கூறினார். நோபல் பரிசு குழுவில் உள்ள ஒருவரை பார்ப்பதே பெரிய விஷயம். ஆனால் அவரை பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாட செய்தது மிகப் பெரிய விஷயம் என்று அனைவரும் தெரிவித்தார்கள்.
நன்றிகள் பல :
உண்மையிலேயே அதற்கான வாய்ப்பை அழகப்பா பல்கலைக்கழகமும் , அங்கு உள்ள நண்பர்களும், பரசுராமன் பத்மநாதன் அவர்களும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நோபல் பரிசுகுழு உறுப்பினர் இந்தியாவில்எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்றது வாழ்வில் மறக்கமுடியாத வாய்ப்பு. .உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி கலந்த அன்புடன்,
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம்.
8056240653
நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ
https://www.youtube.com/watch?v=f3quI4-BqSQ
https://www.youtube.com/watch?v=FD5mRLNQuzA
நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடியதை வலைதளத்தில் காணலாம் :
https://kalviyeselvam.blogspot.com/2019/12/blog-post_54.html#more

No comments:
Post a Comment