Thursday, 7 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

 ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை மு. தேன்மொழி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை தேன்மொழி  அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு எழுதிய பள்ளி பற்றி எழுதிய வரிகள்:

                        இன்று இந்தப் பள்ளி மாணவர்களின் திறமையைக்  கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். பேச்சு, நடனம், பாட்டு என்று எல்லாவற்றிலும் மிகத் திறமையாக இருக்கிறார்கள். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறார்கள். மேலும் இப்பள்ளி ஒரு முன்மாதிரி (மாடல்) பள்ளியாக உருவாகியுள்ளது.  பல பரிசுகள் பெற பல துறையில் திறமையானவர்களாக உருவாக,  வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

 மு. தேன்மொழி,
 பேராசிரியர்
 ஐஐடி மெட்ராஸ்,
 சென்னை.







திட்டமிட்ட திடீர் சந்திப்பு-  கல்லூரி முதல்வர் மூலம் அறிமுகம் :


                           ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர்  பேராசிரியை தேன்மொழி அவர்களை முதன் முதலாக சேவுகன் அண்ணாமலை கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் அவர்களின் உதவியுடன் சந்தித்தேன். அது ஒரு திடீர் சந்திப்பு ஆகும். ஐஐடி மெட்ராஸ் பேராசிரியை தேன்மொழி அவர்கள் சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவதாக முகநூல் வழியாக அறிந்து கொண்டேன். பட்டமளிப்பு விழா நடைபெறும் அன்று காலை தான் எனக்கு இந்த தகவல் தெரியும். உடன் சந்திரமோகன் சார் அவர்களை  அன்னாரது வீட்டில் சென்று சந்தித்தேன். அப்போது ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர்  பேராசிரியை அவர்களை பள்ளிக்கு வருகை தருமாறு அழைக்கலாமா என்று கேட்டேன்., முதல்வர் அவர்களும் நீங்கள் கல்லூரிக்கு  வாருங்கள்,  அவர்களிடம் பேசிவிட்டு தங்களுக்கு தகவல் தருகிறேன் என்று கூறினார்கள். மதியம் 12 மணியளவில் கல்லூரிக்குச் சென்றேன். முதல்வர் அவர்களை சந்தித்தேன்.முதல்வர்  அவர்கள் பேராசிரியை அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். மதியம்  உணவு முடிந்ததும் 1.20 மணி போல் கிளம்பி எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள். முதல்வர் அவர்கள்  அன்போடு கூறியவுடன், அதை ஏற்றுக்கொண்டு எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள் . அவர்கள் உடன் அவரது கணவர்  இராமசாமி அவர்களும், சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை பேராசிரியை கண்மணி அவர்களும் வந்திருந்தார்கள்.  எங்கள் பள்ளியின் நிகழ்வுகளைப் பார்த்து விட்டு ஆச்சரியமாக பேராசிரியர்கள் என்னிடம் பேசினார்கள். பிறகு மாணவருடன் கலந்துரையாடினார்கள். 

மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் பெண் ஆளுமை கிராமத்து இளம் மாணவர்களுடன் கலந்துரையாடல் :

                        ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர்  பேராசிரியை தேன்மொழி அவர்கள் மாணவர்களிடம் பேசும்போது, வாழ்க்கையில் கல்வி கற்பதன் மூலம் எப்படி  எல்லாம் வெற்றி பெறலாம், அதற்கான முயற்சிகள் என்ன, ஐஐடி என்கிற பல்கலைக்கழகம் எப்படி இருக்கும்  போன்ற தகவல்களை மிக எளிமையாக மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூறினார்கள். அவர்களுடனான சந்திப்பு மாணவர்களுக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். 

முதன் முதலாக ஐ.ஐ.டி .சென்ற அனுபவம் :


               ஐஐடி மெட்ராஸ் என்பது ஒரு மிகப்பெரிய கல்வி சார்ந்த அமைப்பு ஆகும் .அதன் உள்ளே செல்வதற்கு நாம் மிகுந்த சிரமங்கள் உண்டு.எனக்கு விவரம் தெரிந்து முதுகலை வேதியியல் படித்தபோது , தென்மண்டல அளவில் சிறந்த மாணவர்கள் 5 பேரை தேர்ந்தெடுத்து ,ஐ .ஐ.டி க்கு 10 பயிற்சிக்கு அனுப்பினார்கள்.அதில் நானும் ஒருவன். 10 நாட்கள் உயர்கல்வி தொடர்பாக பல தகவல்களை அறிந்துகொண்டேன்.நல்ல வாய்ப்பு.அப்போதுதான் எங்களுக்கே , ஐ.ஐ.டி .பற்றி  தெரியும். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த அதிகமானோருக்கு ஐ.ஐ.டி .பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.அதுபோன்ற சூழ்நிலையில் ஐ.ஐ.டி .மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் மேலாண்மை துறை தலைவர் இளம் வயது கிராமத்து மாணவர்களுடன் கலந்துரையாடுவது மிகப்பெரிய நிகழ்வு.அது போன்ற மிகப்பெரிய கல்வி துறை இடத்திலிருந்து  மேலாண்மை துறை தலைவராக இருக்கக் கூடிய பேராசிரியர் எங்கள் பள்ளிக்கு வந்து  மாணவர்கள்  உடன் கலந்துரையாடி சென்றது மாணவர்களுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் சக்தியாகவே அமைந்திருந்தது. 

நன்றிகள் பல :


                 பெண் ஆளுமைகளில் ஒரு மிகப் பெரிய ஆளுமையாக இருக்கக்கூடிய ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை மு. தேன்மொழி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருவதற்கு அவருடைய கணவர் திரு. இராமசாமி அவர்களும்  முழு ஒத்துழைப்பு கொடுத்து எங்களுக்கு உதவி செய்தார்கள்.கல்லூரி முதல்வர் சந்திரமோகன் அவர்களுக்கும்,தமிழ் துறை பேராசிரியை கண்மணி அவர்களுக்கும், உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 நன்றி கலந்த அன்புடன்,

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
 தேவகோட்டை.
 சிவகங்கை மாவட்டம்.
8056240653

 ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை மு. தேன்மொழி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியதை பள்ளி வலைதளத்தில் காணலாம் :

 https://kalviyeselvam.blogspot.com/2018/03/blog-post_25.html#more

 ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை மு. தேன்மொழி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியதை வீடியோவாக காணலாம் :

 https://www.youtube.com/watch?v=RabtwzQ1o_U





No comments:

Post a Comment