Monday, 11 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. ராஜேந்திரன் அவர்களுடன் பழகிய அனுபவங்கள்  

20/02/2019

 Chairman Manikca vasagam middle school. A great school with humble atmosphere.Brilliant students , sharp, observent.With a mind to enquire into the unknown with humble family background.Dedicated teachers, a H.M. with vision and dediction an out of ordinary person.Great exprience in my life.
                                                   I wish the students and the school a brilliant future.Let god and noble men be with this school.

N.Rajendiran,
Vice Chancellor,
Alagappa University,
Karaikudi.
                                                17/06/2019


                       சிறந்த பள்ளி,சிறப்பான ஆசிரியர்கள்,நல்ல எண்ணம்,சிறந்த முயற்சி இவை அனைத்தும் இப்பள்ளி மாணவர்களை  உலகம் வியக்கும் சாதனையாளர்களாக பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.


N.Rajendiran,
Vice Chancellor,
Alagappa University,
Karaikudi.










அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு ராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு  பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.

சந்தித்த அனுபவம் புதுமையானது :

                    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. ராஜேந்திரன் அவர்களை சந்தித்த அனுபவம் புதுமையானது. பள்ளிக்கு அழைப்பதற்காக அவர்களை சந்திப்பதற்காக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சென்று சில மணி நேரங்கள் காத்திருந்து , அவர் முக்கியமான ஒரு மீட்டிங்கில்  இருந்த காரணத்தினால் சந்திக்க முடியாமல் திரும்பி வந்துவிட்டேன். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து முயற்சி செய்து அவர்களை சந்தித்து எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். 

கருத்துக்களை உள்வாங்குவதில் சிறப்பான மாணவர்கள் :

             அப்பொழுது அவர்கள் என்னிடம் கேட்டார்கள்,  நான் உங்கள் பள்ளிக்கு வந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களோடு என்ன பேசப்போகிறேன், கல்லூரி மாணவர்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும். நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் பேசுவதற்கு எப்படி என்று கேட்டார்கள், நான் பேசுவது அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். அப்பொழுது நான் கூறினேன் ஐயா எங்கள் பள்ளியின் சிறப்பு தாங்கள் கூறும் கருத்துக்களை உள்வாங்கி மாணவர்கள் பதில் சொல்வார்கள் . எனவே தாங்கள் அவசியம் எங்கள் பள்ளிக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். இரண்டு மூன்று முறைகள் அவருடைய நேர்முக உதவியாளர் அவர்களை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.  ஆனால் அவர்கள் பல நேரங்களில் பல கூட்டங்களுக்குச் செல்வதால் வர இயலவில்லை என்று தெரிவித்திருந்தார்கள். ஒருநாள் காலையில் ஹிந்து ஆங்கில நாளிதழ் பார்த்த பொழுது, அதில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்காக துணைவேந்தர் ராஜேந்திரன் அவர்கள் வருவதாக இருந்தது. உடன் துணைவேந்தர் அவர்களை தொடர்பு கொண்டு , தாங்கள் தேவகோட்டை வருவதாக அறிந்தேன்.  எங்கள் பள்ளிக்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன் என்று கூறினேன். ஆறு மாதத்திற்கு முன்பாக தங்களை நேரில் வந்து அழைத்திருந்தேன்  என்பதையும் நினைவுபடுத்தினேன். அவர்கள் இயல்பாக கூறினார்கள், நீங்கள் கல்லூரிக்கு 12 மணி போல் வந்துவிடுங்கள். அங்கு உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து நான் உங்கள் பள்ளிக்கு வருகின்றேன் . எனக்கும் அடுத்தடுத்து மீட்டிங்கில் இருக்கிறது, இருந்தாலும் உங்கள் பள்ளிக்கு வருகை தருகிறேன் என்று தெரிவித்தார்கள்.  கல்லூரிக்கு  12 மணிக்கு நிகழ்வு முடிந்தவுடன் நான் அவர்களைச் சென்று சந்தித்தேன். அவர்களும் சாப்பிட்டு விட்டு உடனே எங்கள் பள்ளிக்கு இன்முகத்துடன் வருகை தந்தார்கள். 

நல்ல மாணவர்களை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி :
 
                பள்ளியின் நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்து விட்டு மாணவர்களிடம் பேசினார்கள். அப்பொழுது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் வழங்கினார்கள். மாணவர்களின் சிறப்புக்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்று தெளிவாக கூறினார்கள். கேள்விகள் கேட்பது தான் ஆராய்ச்சிக்கு அடிப்படை என்கிற கருத்தையும் வலியுறுத்தினார்கள். பல மாணவர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள், அப்பொழுது அவர்கள் கூறினார்கள், நான் இது சாதாரண நடுநிலைப்பள்ளி தான் , இங்கு வந்து நான் என்ன பேசப் போகிறேன், நான் சொல்வது என்ன புரியும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் அனைவரையும் பார்த்த பிறகு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நல்ல பள்ளிக்கு நல்ல இடத்துக்கு தான் வந்துள்ளேன் என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பள்ளிக்கு கல்வி தொடர்பாக  என்ன  வேண்டுமானாலும்  என்னிடம் கேளுங்கள். நான் செய்து தருகிறேன் என்று தெரிவித்தார்கள் .

மாணவியின் கேள்வி - ஆச்சிரியப்பட்ட துணைவேந்தர் :
 
               மேலும் ஒரு மறக்கமுடியாத அனுபவம் என்னவென்றால் , துணைவேந்தர் அவர்கள் தனது பேச்சின்போது கிமு, கிபி தொடர்பாக  ஒரு பெரிய விளக்கத்தை கொடுத்தார்கள்.அப்போது அடுத்து ஏதோ தகவல் காரணமாக அடுத்த விஷயத்துக்கு சென்று விட்டார்கள்.மாணவி காயத்ரி என்பவர்  தனது உள்வாங்கிய கருத்துக்களை சொல்லும்போது மறக்காமல் நினைவு வைத்து , அய்யா , தாங்கள் கிமு,கிபி குறிப்பைச் சொல்ல வரும் பொழுது வேறு ஒரு விஷயத்திற்கும் சென்றுவிட்டார்கள் .அதை நினைவுபடுத்தி  கிமு கிபி தொடர்பான தகவலை தாங்கள் தொடர்ந்து கூறும்போது இந்த இடத்தில் விட்டுவிட்டீர்கள், அதை எனக்கு மறுபடியும் கூற முடியுமா என்று கேட்டார். துணைவேந்தர் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், துணிவேந்தர் அவர்கள் அதற்கான பதிலை சரியாக கூறினார்கள். அடுத்த தகவலுக்காக சென்றுவிட்டதால் இதைக் கூறவில்லை என்றும் கூறினார்கள் .அப்பொழுது கூறினார்கள், மிகச் சரியாக நினைவு வைத்து, முக்கால் மணி நேரம் கழித்து, இந்த தகவலை  தாங்கள் (மாணவி காயத்ரி)  -கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்று தெரிவித்தார்கள். மாணவர்களிடம் பேசும் பொழுது மிக அருமையாக இருக்கிறீர்கள். நல்ல பள்ளி , நல்ல தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக வாருங்கள் . 

நடுநிலைப் பள்ளி மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு வரச்சொல்லி அழைப்பு கொடுத்த துணைவேந்தர் :


                  மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் எங்கள் பல்கலைக் கழகத்திற்கும் ஒருமுறை வருகை தந்து பல்கலைக்கழகத்தை பார்த்து செல்லுங்கள் என்று இயல்பாக தெரிவித்தார்கள். நானும் அதன் பிறகு இரண்டு மூன்று முறை  ஐயா அவர்களை தொடர்பு கொண்டு பல்கலைக்கழக பேருந்தின் மூலமாக எங்கள் பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும்  அழைத்துச் செல்லப்பட்டு , ஆறாவது படிக்கும் மாணவர்கள் இந்த வயதில் பல்கலைக் கழகத்தைச் சென்று பார்த்தார்கள். எனக்கெல்லாம் பல்கலைக்கழகம் என்பது கல்லூரி முடிந்த பிறகுதான் தெரியும். 

பல்கலைக்கழக சிண்டிகேட் அரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடிய துணைவேந்தர் :

              ஆனால் எங்கள் பள்ளி மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு ஐந்தாம் வகுப்பு ,ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மிக இயல்பாக சென்று பார்வையிட்டு, சிண்டிகேட் கூட்ட அரங்கில் துணைவேந்தர் அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடிய நிகழ்வு மறக்க முடியாது. அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு இடங்களையும் பல்கலைக் கழகத்தினரும் மிக அழகாக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு விவரித்து  காண்பித்தார்கள், விளக்கிக் கூறினார்கள். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ,வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது  அந்த நிகழ்வு. 

மூன்றாவது முறையாக பள்ளிக்கு வருகை தந்த துணைவேந்தர் :

               மீண்டும் அடுத்த முறை துணைவேந்தர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு முதல் முறையாக ரோபோ தொடர்பான பயிற்சி கொடுப்பதற்காக தலைமை விருந்தினராக வந்து இருந்தார்கள் .அப்பொழுது ரோபோ தொடர்பான மைக்ரோ கணினி ஒன்றையும் எங்கள் பள்ளியில் வெளியிட்டார்கள். அந்த நிகழ்வுக்காக காரைக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய வாழ்த்து தெரிவித்த சென்றார்கள். மூன்று முறை அய்யா அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்தது எங்களுக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.துணைவேந்தர்  அவர்கள் மிகப்  புகழ் பெற்ற , மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் .அவர்கள் மிக இயல்பாக என்னிடம், மாணவரிடம், ஆசிரியர்களிடம்  பேசினார்கள். நான் பேசும் தகவல்களை உள்வாங்கி பலவிதங்களில் உதவி செய்தார்கள். 

நோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளிக்கு வர உதவிய துணைவேந்தர் :

                நோபல்  பரிசுக் குழு உறுப்பினர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருவதற்கு  துணைவேந்தர் அவர்கள்தான் காரணம். இது போன்று பல்வேறு வழிகளில் துணைவேந்தர் அவருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு இருக்கின்றோம். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தாலும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அன்பாகப் பழகி , எங்கு என்னைப் பார்த்தாலும் பள்ளி மாணவர்களை அன்போடு விசாரிப்பார்கள் ..அது எனக்கு மிகவும் பிடித்து இருக்க கூடிய ஒரு விஷயம் ஆகும் வேறு  கல்வி தொடர்பான எல்லா தகவலுக்கும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறி  வருவார்கள் . துணைவேந்தர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றிகள் பல :

                 நாங்கள் அழைத்த நேரம்  பள்ளிக்கு வந்து சிறப்பித்த ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அவர்களை எங்கள் வாழ்வில் மறக்க முடியாது. இதற்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், துணைவேந்தர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,  பல்கலைக்கழகத்தை கல்லூரி முடித்து கூட பார்க்காத பல நண்பர்கள் இருக்கும்பொழுது ,பல்கலைக்கழகத்தை ஆறாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல.

அறிவு பெட்டகம் - துணைவேந்தர்

             பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களை அருகில் சென்று சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறுவதற்கும், பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கும்,நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த  துணைவேந்தர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நிச்சயமாக நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். துணைவேந்தர் அவர்கள் ஒரு மிகப்பெரிய விஷய ஞானம் உள்ளவர் என்பது உண்மை.  வரலாறு தொடர்பாகவும், பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பல தகவல்களை மாணவரிடம் இயல்பாக பகிர்ந்துகொண்டார்கள். நாம் பேசும் பொழுதும் நம்மிடம்  அன்பாக பேசுவார்கள்.  எவ்வளவு வேலை இருந்தாலும் அந்த நேரத்திலும் நாம் நண்பர்கள் மூலமாக தொடர்பு கொள்ளும் போது நல்ல தகவல்களை கூறி  உதவி செய்வார்கள். துணைவேந்தர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றி கலந்த அன்புடன் ,

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம். 8056240653 

 அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு ராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு வலைத்தளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2019/02/blog-post_20.html#more


அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு ராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு வீடியோவாக  காணலாம் :

 https://www.youtube.com/watch?v=tnJ0C9W2Obs

 https://www.youtube.com/watch?v=HQh9RdNBKEs

 https://www.youtube.com/watch?v=E9BJuQedWCc

 https://www.youtube.com/watch?v=6hPPzbJAyXM

 https://www.youtube.com/watch?v=VP1aCNkv30I





No comments:

Post a Comment