ஆளுமைகளுடனான அனுபவங்கள்
டிஎஸ்பி கருப்பசாமி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
இன்று 21 /6 / 2016 ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றஉலக யோகா தினத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் திரு .எல் .சொக்கலிங்கம் அவர்களது அழைப்பின் பேரில் தேவகோட்டை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கருப்பசாமி ஆகிய நான் கலந்து கொண்டேன் .
யோகா பற்றிய குழந்தைகளின் விழிப்புணர்வு அறிவு மெச்சத் தகுந்ததாகும். பாராட்டத்தக்கதாகும் இருந்தது. குழந்தைகளின் பல்வேறு தலைப்பிலான திறமையின் வெளிப்பாடு பாராட்டத்தக்கதாகும்.
பல்வேறு இறுக்கமான சூழ்நிலையில் பள்ளி விழாவில் கலந்துகொண்டது மன இறுக்கத்தை போக்கி சந்தோசமான சூழல் உருவாக்கியது.
வாழ்த்துகளுடனும் , அன்புடனும்
த .கருப்பசாமி,
டிஎஸ்பி ,
தேவகோட்டை.
டிஎஸ்பி கருப்பசாமி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி மாணவர்களைப் பற்றி பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.
முதல் சந்திப்பு - கருத்துக்களை அருமையாக கூறிய டிஸ்பி
தேவகோட்டை டிஎஸ்பி கருப்பசாமி அவர்களை முதல் முறையாக சந்தித்து யோகா தினத்திற்கு அழைப்பு விடுத்தேன். அப்போது அவர்கள் நான் பல்வேறு பணி சூழ்நிலையில் இருப்பதால் வாய்ப்பை பொறுத்து வருகின்றேன் என்று கூறினார்கள். நிகழ்வு நடைபெற்ற அன்று இறுக்கமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தபோதிலும், எங்களின் அன்பான அழைப்பை ஏற்று பள்ளிக்கு வருகை தந்தார்கள். மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளையும், பல்வேறு தகவல்களையும் கண்டு ரசித்தார்கள்.
இளம் மாணவர்களுக்கு பாராட்டு :
இளம் மாணவர்கள் பாடல்கள் பாடுவதையும் ,யோகா செய்து காண்பித்ததும் ஆர்வமுடன் பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள். தான் அரசுப்பள்ளியில் படித்ததாகவும் , பிறகு ஒவ்வொரு நிகழ்வாக தான் முன்னேறி வந்ததாகவும், காவல் துறையில் பல்வேறு பணி சூழல் இடையில் பணியாற்றி வருவதாகவும் மாணவர்களிடம் தெரிவித்தார். மாணவர்கள் கல்வியை என்பதை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு விளக்கமாக விவரித்தார். காவல்துறை உங்கள் நண்பன் என்கிற கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
இறுக்கமான மன நிலையை மகிழ்ச்சியாக்கிய மாணவர்கள் :
மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு என்னுடைய அறைக்கு வந்தபோது தான் காலையில் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் இருந்ததாகவும், பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். பள்ளி நிகழ்வுக்குப் பின்னர் பலமுறை அவரை சந்தித்து இருக்கின்றேன். பல நிகழ்வுகளில் அன்னார் அவர்களுடன் பேசி உள்ளேன்.
வாழ்க்கையில் முக்கிய நாட்களை மறக்கக்கூடாது :
வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களையும் மறக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். முக்கியமான கட்டங்களை மறக்கவே கூடாது என்று தெரிவிப்பார் . தான் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதி ரிசல்ட் வந்த நாளையும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்ட் வந்த நாளையும், அது போக இன்னும் திருமண நாள், பிறந்த நாள் என்று அனைத்து நாள்களையும் முக்கியமான நாட்களை தேதி வருடம் மாதத்துடன் மிகச் சரியாக நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியவர். எந்த நாள் எல்லாம் நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கொடுத்ததோ அந்த நாட்களை நாம் கண்டிப்பாக மறக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். பல்வேறு வாழ்த்துக்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். கருத்துக்கள் அனைத்துமே மிக அருமையானவை .
ஏடிஸ்பி யாக பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள் :
டிஎஸ்பி என்கிற பதவியில் இருந்தாலும் எங்களிடம் மிக அன்பாக பழகியது குறிப்பிடத்தக்கது. அன்னார் அவர்கள் பதவி உயர்வு பெற்று ஏடிஎஸ்பியாக நாகப்பட்டினம் சென்றபோது நன்றி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தோம். தொடர்ந்து இன்று வரை என்னுடன் தொடர்பில் இருந்து வருகின்றார். பல்வேறு முற்போக்கு சிந்தனை உள்ள கருத்துக்களை மிக அழகாக பகிர்ந்து கொள்வதில் வல்லவர். உலகம் இப்படித்தான் இருக்கும் என்பதை மிகத் தெளிவாக அறிந்துகொண்டு, புரிந்துகொண்டு அது தொடர்பாக பேசக்கூடியவர் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
காவல் பணி பொறுப்புள்ள பணி :
காவல்துறையில் பணியாற்றிய ஒருவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்கிற தகவலை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டார் . மேலும் 60 வயதிற்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்த அவர்கள் எந்தவிதமான உடல் உபாதையும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது என்பது மிகச் சிரமமானது என்றும் தெரிவித்தார். மற்ற பணிகளிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் 80 வயது வரை 90 வயதுவரை வாழ்க்கை நடத்துவார்கள். ஆனால் காவல் துறையில் இருந்து பணி ஓய்வு பெறுபவர்கள் கூடிய சீக்கிரம் அவர்களுடைய வாழ்க்கை முடிந்துவிடும். காரணம் பல்வேறு பணி சூழ்நிலைகளுக்கு இடையில் அவர்கள் பணியாற்றுவதால் இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். அன்னார் அவர்களுடைய நட்பு மறக்க முடியாதது . மாணவர்களுக்கும் மிகப் பெரிய உந்துதல் சக்தியை ஏற்படுத்துவதாக அவருடைய நட்பு அமைந்திருந்தது.
காவல் நிலையத்துக்கு களப்பயணம் :
எங்கள் பள்ளியில் மாணவர்களிடம் உரையாற்றும் பொழுது நீங்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு களப்பயணம் வாருங்கள் என்று முதலில் எங்கள் பள்ளி மாணவர்களை அவர்தான் அழைத்திருந்தார். காவல் நிலையத்துக்கு மாணவர்கள் களப்பயணம் அழைத்துச் சென்றோம்.காவல் நிலையத்துக்கு வெளியே மிக பெரும் கூட்டங்கள் இருந்த போதிலும் கூட எங்கள் பள்ளி மாணவர்களை அன்புடன் வரவேற்று இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தை முழுவதுமாக சுற்றிக் காண்பித்தார். சிறை எப்படி இருக்கும், துப்பாக்கிகள் எப்படி இருக்கும், மாணவர்களுக்கு எவ்வாறெல்லாம் காவல் நிலையத்தில் வந்து முதல் தகவல் அறிக்கை கொடுக்கலாம் என்று பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.
ஒரே துப்பாக்கியில் 50 பேரை சுட முடியுமா ? சினிமாவில் காண்பிப்பது உண்மையா? விளக்கம் கொடுத்த டிஸ்பி
அதில் விஜய் என்கிற மாணவர் டிஎஸ் பி அவர்களிடம், ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு சினிமாவில் 50 பேரை படத்தில் ஹீரோ சுடுகிறாரே ? அப்படி எல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்டார். அதற்கு டிஎஸ்பி அவர்கள் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் , அதற்கான பதிலை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். பிறகு மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கும் பல்வேறு தகவல்களை விரிவாக விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். மகளிர் காவல் நிலையத்தில் என்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது ,என்னவெல்லாம் அங்கு செயல்பாடு செய்யப்படுகிறது என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார் .
காவல் நிலையம் சென்றது மறக்கமுடியாத அனுபவம் :
மாணவர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவத்தை ஏற்படுத்தினார் டிஎஸ்பி கருப்பசாமி அவர்கள். எங்கள் ஆசிரியைகளும் கூட இதுவரை காவல் நிலையம் சென்றதில்லை, முதன்முறையாக காவல் நிலையம் சென்று வந்தோம் என்று தெரிவித்தார்கள். காவல் நிலையத்தை கண்டாலே பயப்படும் நிலையை மாற்றி, காவலர்கள் உங்கள் நண்பன் என்று எடுத்துக்கூறி மிக அருமையாக மாணவர்களுக்கு காவல் நிலையம் தொடர்பாக விளக்கிக் கூறியதற்காக டிஎஸ்பி அவர்களுக்கு இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களுடனான நட்பு மறக்கமுடியாதது. அன்னார் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்களுடைய குடும்பம் இன்னும் சிறப்பாக, அவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். அன்னார் அவர்கள் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்கள். அன்னார் அவர்களது எழுத்தும் அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல :
காவல் நிலையத்தை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு முதன்முறையாக விரிவாக விளக்கி காட்டியதற்கும், எங்கள் பள்ளிக்கு வருகை தந்ததற்கும் அன்னார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி கலந்த அன்புடன்,
லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம். 8056240653
டிஎஸ்பி கருப்பசாமி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வலைதளத்தில் காணலாம் :
https://kalviyeselvam.blogspot.com/2016/06/blog-post_82.html#more
காவல் நிலையத்துக்கு களப்பயணம்
https://kalviyeselvam.blogspot.com/2016/07/fir.html#more

No comments:
Post a Comment