ஆளுமைகளுடனான அனுபவம்
தமிழகத்தின் முதல் பெண் விமானி காவியா அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
தமிழகத்தின் முதல் பெண் விமானி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பின்வருமாறு பள்ளியை பற்றி பாராட்டி எழுதிய வரிகள் :
Today 06/11/2019, I would like to thank Mr. Chokkalingam for this golden opportunity. I was so overwhelmed to see each and every student so talented and disciplined. In fact, I have learned a lot of things from the students today. I was too happy to be part of this school far today. I really admire the way students treated the teachers and other fellow beings. Especially I enjoyed the தமிழ் தாய் வாழ்த்து sung by one of the students Nandana. I wish all the happiness prosperity and good well for the Chairman Manikca Vasagam School students and teachers. Thank you somuch for the golden opportunity.
With the love,
Regards,
Kavya R
ஆளுமையை அழைப்பதற்கான முயற்சி எடுத்த தருணம் :
தமிழகத்தின் முதல் பெண் விமானி காவியா அவர்களை தொடர்பு கொண்ட விதம் மறக்க முடியாதது. மதுரை வானொலி நிலையத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரி ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது ஆளுமைகளை தாங்கள் பள்ளிக்கு அழைத்து வருவது மகிழ்ச்சிக்குரியது . பெண் விமானி காவியாவையும் நீங்கள் பள்ளிக்கு அழையுங்கள் என்று கூறி உடனடியாக அவருடன் பேசி எனக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இவை அனைத்துமே சில நிமிடங்களில் மிக இயல்பாக நடைபெற்றது.இன்றும் பசுமையான நிகழ்வாக மனதில் உள்ளது . தொடர்ந்து ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் பெண் விமானி அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். அப்பொழுது அவர்கள் தான் பெங்களூருவில் இருப்பதாகவும்,மதுரையில் தனது தாய் தந்தை இருப்பதாகவும், மதுரைக்கு வரும் பொழுது தான் தங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்கள் . அவர்கள் சொன்னபடி மதுரை வந்த பொழுது, ஒருநாள் மாலை என்னை அழைத்து நாளை உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று தெரிவித்து இருந்தார்கள், மறுநாள் அவர்கள் அவருடைய தாய் தந்தையருடன் எங்கள் பள்ளிக்கு வந்தார்கள்.
மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திய பள்ளி - பெண் விமானி பெருமிதம் :
அன்னாருக்கு ஜலதோஷம் அதிகமாக இருந்த நிலையிலும், தான் கொடுத்த தேதியில் சரியாக செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எங்கள் பள்ளிக்கு வந்ததாக தெரிவித்தார்கள். தலைமை ஆசிரியர் அறையில் என்னிடம் பேச சிரமப்பட்டார்கள். இருந்தாலும் மாணவர்களை சந்தித்த பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரணமாக படித்து பெண் விமானி ஆனது எப்படி என்பதை மாணவர்களிடம் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் என்னவாக வேண்டும் என்று குறிக்கோள் சொல்லச் சொல்லிக் கேட்டார்கள். அந்த குறிக்கோளை எல்லாம் நீங்கள் கண்டிப்பாக அடைய வேண்டும் என்று கூறி அதை ஜெயித்து விட்டு பேசுங்கள். ஜெயிச்சுட்டு பேசுங்க, அப்பதான் கெத்து அப்படின்னு மிக அருமையாக விளக்கம் கொடுத்து விவரித்தார்கள். அதற்கு உதாரணமாக தானே ஜெயித்து விட்டு தற்பொழுது பெண் விமானி யாகி ஜெயித்ததாக மாணவர்களிடம் கூறினார்கள். மாணவர்களும் மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டார்கள். விமானி ஆவது, அதிலும் பெண் ஒருவர் விமானி ஆவது என்பது பல முயற்சிகள் எடுத்த பிறகுதான் என்றும், பல லட்ச ரூபாய் செலவு செய்து படிக்க வேண்டும் என்றும், பாதியில் ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார்கள், தொடர்ந்து படிக்க முடியாது என்பதையும், அதையெல்லாம் கடந்து மிக ஆர்வத்துடன் தான் படித்து பெண் விமானியாக ஆனதாகவும் தெரிவித்தார்கள். உண்மையில் பெங்களூரில் இருந்து மதுரை வந்து, அவருடைய பொன்னான நேரத்தை எங்கள் பள்ளிக்கும் வந்து மாணவர்களுடன் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடி சென்றது மாணவர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகும்.இப்பள்ளிக்கு வந்தது தங்களுக்கும் மறக்க முடியாத அனுபவம் என விமானியின் தாயும் ,தந்தையும் தெரிவித்தார்கள்.
ஜெய்ச்சிட்டு பேசுங்க , அதான் கெத்து ! பெண் விமானியின் நம்பிக்கை பேச்சு
தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா மாணவர்களிடம் பேசும்போது, உங்களை பார்த்து ஏளனம் செய்பவர்களை கண்டு கோபப்படாதீர்கள்.அவர்கள் முன்பாக நீங்கள் என்னவாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதுவாக மாறி காண்பியுங்கள்.உலகம் உங்களை திரும்பி பார்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும்.அதற்கு படிப்பு இருந்தால் போதும்.வாழக்கையை எளிதாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் . என்னை சிறு வயதில் கிண்டல் செய்தவர்கள் இன்று எனது சாதனையை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.விமானி ஆவதற்கு 12ம் வகுப்பு படித்தால் போதும்.பிறகு ஐந்து வருட கோர்ஸ் படித்தால் விமானி ஆகிவிடலாம். நான் இப்போது விமானம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக உள்ளேன்.சிறு வயதில் உங்களை போன்று வானில் சத்தம் கேட்டால் உடனே நீண்ட நேரம் மேலே பார்த்து கொண்டு இருப்பேன்.இன்று அந்த மேகக்கூடத்தின் இடையில் கீழிருந்து 45,000 அடி மேலே சென்று தைரியமாக விமானம் ஓட்டுகிறேன் .அரசு பேருந்து ஓட்டுநராக உள்ள எனது தந்தை வருமானத்தில் , நடுத்தர குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடிந்தபோது உங்களால் கண்டிப்பாக ஏதாவது ஒரு துறையில் சாதிக்க முடியும்.முயற்சி செய்து கொண்டே இருங்கள் வெற்றி வசப்படும் என்று பேசினார்.
பெண் விமானியின் தாய்,தந்தைக்கும் மகிழ்ச்சி :
பெண் விமானி அவர்கள் எங்கள் பள்ளியில் பேசும்பொழுது , இதுபோன்று பள்ளி கிடைத்திருந்தால் நான் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருப்பேன் என்று தெரிவித்தார்கள் . மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பொறுமையாக விடையளித்தார்கள். பெண் விமானி அவர்களின் தாயாரும் தந்தையாரும் எங்கள் பள்ளியை நன்றாக உள்வாங்கி புரிந்து அனுபவித்து வாழ்த்து தெரிவித்து பேசினார்கள் . இந்த வாய்ப்பை தனக்கு ஏற்படுத்தி கொடுத்ததற்காக பெண் விமானி என்னிடம் நன்றி தெரிவித்தார்கள். எங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில அகராதி கொடுத்து விட்டு ,கண்டிப்பாக அனைவரும் அதனைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் .விமானத்தை பற்றி அவர்கள் கூறிய தகவல்களை கேட்க,கேட்க எங்களுக்கு விமானத்தில் சென்று பயிற்சி பெற்றது போன்று இருந்தது.மிக எளிமையாக, மிக அன்பாக, கர்வம் இல்லாமல் மாணவர்களுடன் அன்பாக பழகியது மகிழ்ச்சியானது. பல்வேறு போட்டிகளுக்கிடையில் பெண் விமானியாக தேர்ச்சி பெற்று விமானி ஆவது என்பது மிகப்பெரிய விஷயம். அதனை அடைந்து சாதனை செய்த பெண் விமானி அவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் மிகப் பெரிய உயரங்களை அவர்கள் எட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
நன்றிகள் பல :
இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி கலந்த அன்புடன்
லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம். 8056240653
தமிழகத்தின் முதல் பெண் விமானி காவியா அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியதை பள்ளி வலைதளத்தில் காணலாம் :
https://kalviyeselvam.blogspot.com/2019/11/blog-post_6.html#more
தமிழகத்தின் முதல் பெண் விமானி காவியா அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியதை பவீடியோவாக காணலாம் :
https://www.youtube.com/watch?v=_ovKREmK-5o
https://www.youtube.com/watch?v=8CW6ztkSkmo
https://www.youtube.com/watch?v=o57qh2_iHEE

No comments:
Post a Comment