Sunday, 3 May 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சொ . சுப்பையா அவர்களுடன் பழகிய அனுபவம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையா அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்: 

சொ . சுப்பையா 
முன்னாள் துணைவேந்தர் 
அழகப்பா பல்கலைக்கழகம் 
காரைக்குடி 
05/07/2018

                           இன்று இந்தப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக்  கருதுகிறேன். ஏனெனில் கிராமத்து மாணவர்களிடம் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு . L . சொக்கலிங்கம் ஏற்படுத்தித் தந்தார். இப்பள்ளியின் செயல்பாடுகள் ,மாணவர்களை வழி நடத்தும் விதம், வாழ்க்கையில் சாதித்தவர்களையும், உயரிய பதவியில் உள்ளவர்களையும்  அழைத்து மாணவர்களிடம் கலந்துரையாட வைப்பது மிகச்சிறந்த நடைமுறையாகும். மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகளை இப்பள்ளியில் நடத்துவதோடு மட்டுமின்றி, பிற நிறுவனங்களில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளுக்கும், போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க வைப்பது மிகவும் சிறப்பான அம்சம் ஆகும். ஒரு அரசு உதவி பெறும் பள்ளியை தனியார் பள்ளியை விட சிறப்பாக தலைமையேற்று நடத்துகிறார் தலைமையாசிரியர் அவர்களையும் துணையாக அவருக்கு துணையாக செயல்படுகிற ஆசிரியர் பெருமக்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பள்ளி, இன்னும் பல சிறப்புகளையும், பெருமைகளையும் இத் தலைமை ஆசிரியரின்  தலைமையில் அடையும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
                                                                                        வாழ்த்துக்களுடன் 
                                                                                       சொ .சுப்பையா 






எதிர்பாராத அழைப்பை வழங்கிய துணைவேந்தர் :

                                                     காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையா அவர்களை இரண்டு முறை பல்கலைக்கழகத்திற்குச் சென்று எங்கள் பள்ளியில் நடைபெறும் நிகழ்வுக்கு அழைத்திருந்தேன் . ஆனால் பல்வேறு பணி சூழல் காரணமாக அவர்கள் எங்கள் பள்ளிக்கு வர இயலவில்லை.   எனக்கெல்லாம் கல்லூரிப் படிப்பு முடிந்து அதற்குப் பிறகுதான் துணைவேந்தர், பல்கலைக்கழகம் போன்ற விவரங்களை தெரியவந்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவரை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாட செய்ய வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆவலாக இருந்தது. அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் துணைவேந்தர் அவர்களை முன்பு அழைத்த நிலையை ஞாபகப்படுத்தி மீண்டும் எங்கள் பள்ளிக்கு வருமாறு அழைப்பு அழைப்பு கொடுத்து இருந்தேன். திடீரென்று ஒரு நாள் மாலை  துணைவேந்தர் அவர்கள், என்னை தொடர்பு கொண்டு நாளை வருகிறேன் என்று தெரிவித்திருந்தார் . 

கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆனது எப்படி ?:


                   எங்கள் பள்ளியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்களுடன் கலந்துரையாடியதோடு, தனது பள்ளி வாழ்க்கை அனுபவத்தை மிக எளிதாக எடுத்துக் கூறினார். தான் அரசு பள்ளியில் படித்ததையும், கிராமத்தில் அரசுப் பள்ளியில்  ஒரே ஒரு திருக்குறளை பத்தாம் வகுப்பு படிக்கும்போது மனப்பாடம் பண்ணி ஒப்புவித்து முதல் முறையாக பரிசு பெற்றதையும்,  ஆனால் இப்  பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேவாரத்தையும், திருவாசகத்தையும், ஆத்திச்சூடி மிக அழகாக எடுத்துரைத்து பரிசுகளை பெற்றுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள். துணைவேந்தர் பதவி தொடர்பாகவும், பல்கலைக்கழகம் தொடர்பாகவும், எவ்வாறெல்லாம் பல்கலைக்கழகத்திற்கு தனது  பணி தொடர்பாகவும், பல்கலைக்கழக துணைவேந்தராக தான் குறிக்கோள் வைத்து எப்படி வெற்றி பெற்றேன் என்பதையும் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார். அரசுப்பள்ளியில் படித்து அதனால் தான் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் .ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உடைய துணைவேந்தரை எங்கள் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாட செய்வது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

மாணவர்களின் உள்வாங்கும் திறனை பார்த்து ஆச்சிரியப்பட்ட துணைவேந்தர் :


                     துணைவேந்தர் கூறிய கருத்துக்களை உள்வாங்கிய மாணவர்கள் அதனை அப்படியே எடுத்து தங்களின் கருத்துக்களாக கூறினார்கள்.இதனை கேட்டு ஆச்சிரியப்பட்ட துணைவேந்தர் அவர்கள், என்னிடம் மாணவர்களுக்கு சில விஷயங்கள் புரியுமா என்று எண்ணிக்கொண்டே பேசினேன். ஆனால் , அவர்கள் அதனை உள்வாங்கி பேசிய விதம் என்னை ஆச்சிரியப்பட வைத்தது.மிக அருமை.மாணவர்களின் உள்வாங்கும் திறன் பாராட்டுக்குரியது என்று கூறினார்கள். பிறகு மூன்று முறை அவர்கள் பள்ளிக்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளார்கள். 

நான்கு முறை பள்ளிக்கு வந்த அனுபவத்தை வெளிப்படுத்திய துணைவேந்தர் :

              அப்பொழுது கூட சொன்னார்கள், நான் ஒரு பள்ளிக்கு ஒரு முறை தான் செல்வேன், பொதுவாக கல்லூரிகளுக்கு தான் செல்வதும் ஒருமுறை தான் செல்வேன். ஆனால் உங்கள் பள்ளிக்கு தான் நான்கு முறை வந்துள்ளேன் என்று பெருமையாக தெரிவித்தார்கள். அவ்வாறு அவர்கள் கூறியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .எங்கள் பள்ளிக்கு வந்த தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் முதல்வர்திரு.ஜான் வசந்த் அவர்கள் , எங்கள் பள்ளி விழாவில் பேசும்போது தெரிவித்த தகவல் எங்களை ஆச்சிரியப்படவைத்தது , அவர் கூறியது : நாங்களெல்லாம் மிகவும் ஆவலுடன் ஆர்வமாக எதிர்பார்க்கும் துணைவேந்தர் அவர்கள் உங்கள் பள்ளிக்கு வந்து பல்வேறு நிகழ்வுகள் கலந்துகொண்டது மிகப் பெரிய விஷயம் என்று பாராட்டு தெரிவித்தார்கள் . 

மாணவர்களுடன் எளிமையாக பழகிய துணைவேந்தர் :

               பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்தபோது மிக எளிமையாக மாணவர்களுடன் பழகினார்கள்,பேசினார்கள். எங்களுக்கும் ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு தகவல்களை எடுத்து கூறினார்கள். அவர்களுடனான நட்பு பழக்கம் என்பது மறக்க முடியாதது. மாணவர்களுக்கும் மறக்க முடியாத பல்வேறு தகவல்களை கூறி சென்றார்கள். இந்தியாவிலேயே மிகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக அழகப்பா பல்கலைக்கழகத்தை  உருவாக்கியதில் அவர்களுக்கு மிகுந்த பங்கு  உண்டு.அழகப்பரின் கனவை நினைவாக்கியவர் என்று சொல்லலாம். அந்த வகையில் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்ததற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கள் பள்ளியின் ஒளியேற்றுதல் நிகழ்வில் பங்கேற்ற  பிறகு துணைவேந்தர் அவர்கள் எழுதிய வரிகள் :

               இன்று இப் பள்ளியில் நடைபெற்ற "ஒளியேற்றுதல்" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் மட்டுமல்லாது, CO- CURRICULAR மற்றும் EXTRACURRICULAR செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குவது ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.இப்  பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சொக்கலிங்கம் அவர்கள் இப்பள்ளியை சிறப்பாக வழி நடத்துகிறார்.
 வாழ்த்துக்கள் 
சொ .சுப்பையா,
 முன்னாள் துணைவேந்தர்
 அழகப்பா பல்கலைக்கழகம்
 காரைக்குடி.

எங்கள் பள்ளி  மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கு வந்த பொழுது பள்ளி பற்றி பாராட்டி எழுதிய வரிகள்:

                          இன்று இந்த பள்ளியில் நடைபெற்ற மாணவ  சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆக இருந்தது, காரணம் என்னவென்றால், சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்க மாணவ  சட்டசபை தேர்தலை நடத்தி மாணவ முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள்  தாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட  வாய்ப்பளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும் . சிறந்த தலைமை இருந்தால் பள்ளி சிறப்பாக செயல்படும் என்பதற்கு உதாரணமாக இப்பள்ளியின் முதல்வர் திகழ்கிறார்.

இப்பள்ளி  மேலும் வளர வாழ்த்துக்கள் 

சொ .சுப்பையா,
 முன்னாள் துணைவேந்தர்
 அழகப்பா பல்கலைக்கழகம்
 காரைக்குடி. 

துணைவேந்தரின் நிதானமான செயல்பாடு :
    
                                  துணைவேந்தர் குறித்து குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில்,   துணைவேந்தர் அவர்கள் ஒவ்வொரு முறை எழுதிய விஷயங்களை மீண்டும் ஒருமுறை ஆழமாகப் படித்து அதில் ஏதேனும் சிறு மாற்றம் இருந்தாலும் அதனை சரி செய்து முடித்த பிறகுதான் அதை திருப்தியாக படித்துவிட்டுத்தான் கிளம்பி சென்றார்கள். அது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒரு விஷயம் .அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

துணைவேந்தர் பதவி குறித்து மாணவர்களுக்கு விளக்கிய விதம் அருமை :
                              அரசு பள்ளியில் படித்து முடித்த பிறகு தனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஒரு ஆவல் இருந்தது என்றும் ,ஏனென்றால் அன்றைய நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே டாக்டர்,என்ஜினீயர் என்றுதான் குறிக்கோள் சொல்வார்கள்.அதனால்தான் அந்த குறிக்கோள் இருந்தது என்றும்,ஆனால் பிற்காலத்தில் தான் பல்வேறு சூழ்நிலைகளில் படித்து , இன்று பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் பட்டதாரிகளுக்கும் ,முதுகலை பட்டதாரிகளுக்கும் ,முனைவர் பட்டம் பெற்றோருக்கும் கையெழுத்து இட்டு சான்றிதழ் அளிக்கும் நிலையில் உள்ளதை எண்ணி பெருமைபடுவதாகவும், மருத்துவர் ஒருவரை பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கும் பதவிக்கு  வந்ததையும் நினைவுபடுத்தி பெருமை கொண்டார். 

உச்சியின் நுனி வரை சென்ற திரு.சொ .சுப்பையா   :

                  நான் காந்திகிராமம் ஆசிரிய பயிற்சி கல்லூரியில் படித்த காலத்தில் எங்களது கல்லூரி செயலரும் , காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பங்கஜம் மேடம் அவர்கள் ,எங்கள் கல்லூரியில் நடந்த விழாவில் வந்து பேசும்போது, எந்த பணியில் இருந்தாலும் அதன் உச்சியை தொடவேண்டும்.அதுவே குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்று கூறியதோடு, தான் அதனை அடைந்து விட்டதாக கூறினார்.அதாவது, ஆசிரியர் பணியில் மிக பெரிய உச்சி என்பது துணைவேந்தர் பதவி ஆகும்.அந்த துணை வேந்தர் பதவியை ஆசிரியராக இருந்து அடைந்த திரு.சொ .சுப்பையா என்கிற மிகப்பெரியஆளுமையாகிய அன்னாரிடம் இருந்து எங்கள் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும்  நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 நன்றி கலந்த அன்புடன்,

 லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம்.
8056240653 

 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சொ . சுப்பையா அவர்கள் எங்கள் பள்ளியில் பங்குபெற்ற நிகழ்வுகளை வலைத்தளத்தில் காணலாம் :

 https://kalviyeselvam.blogspot.com/2019/04/blog-post_62.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2019/08/blog-post_27.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2019/05/blog-post_64.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2019/04/blog-post_41.html#more

 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சொ . சுப்பையா அவர்கள் எங்கள் பள்ளியில் பங்குபெற்ற நிகழ்வுகளை வீடியோவாக  காணலாம் :

 https://www.youtube.com/watch?v=-Uhv6aflX5s

 https://www.youtube.com/watch?v=9i0OH02sdA8

 https://www.youtube.com/watch?v=EZz1pCST1Ls

 https://www.youtube.com/watch?v=mHcwMsV2KpI

 https://www.youtube.com/watch?v=rmZii2VcsuQ

 https://www.youtube.com/watch?v=VFjFtXeQcD8

 https://www.youtube.com/watch?v=iEMg-GLd5uo

 https://www.youtube.com/watch?v=nAiNd5mxFdU

 https://www.youtube.com/watch?v=T9bc2AZH_WY













No comments:

Post a Comment