ஆளுமைகளுடனான அனுபவங்கள்
தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
Krishnaraj R IPS
ASP,Devakottai.
Had a good interaction with the school students, teachers and Principal of the school on the ocaasion of Bhartiar's day.The studnets are very good and disciplined.The School is doing good under the principal & teachers. I am happy to have come here.
All the best! Thank you
Devakottai. 11/12/2019 Krishnaraj R IPS
ASP,Devakottai.
தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPSஅவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.
போலீஸ் IPS உடன் மாணவர்கள் கலந்துரையாடல் :
தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களுடனான சந்திப்பு ஒரு யதார்த்தமானது. ஐபிஎஸ் காவல் அதிகாரி உடன் மாணவர்கள் கலந்துரையாடினால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணத்தில் ஏஎஸ்பி அவர்களை இரண்டு, மூன்று முறை நேரில் சந்தித்து பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடுமாறு அழைத்து இருந்தேன். பல்வேறு பணி சூழ்நிலைகள் காரணமாக மூன்று முறை அவர்கள் பள்ளிக்கு வருவதாக கூறி கடைசியில் வர இயலவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அவர்கள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவருடன் கலந்துரையாடி சென்றார்கள். அதன் தொடர்ச்சியாக பாரதியார் தினமன்று தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி நீண்ட நேரம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள். அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசினார்கள். மாணவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளை நன்றாக உள்வாங்கி, அதற்கு தேவையான பதில்களைத் கூறினார்கள்.
சமுதாயத்திற்கு உதவ வேண்டும் - அதுவே குறிக்கோள் :
தான் வாழ்க்கையில் சமுதாயத்திற்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதற்கான வழியை தேடும்போதுதான் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகள் இருப்பது தெரிந்தது என்றும் ,அதன் பிறகுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதி அதில் வெற்றி பெற்று இன்று ஐபிஎஸ் ஆக பதவியில் வந்திருப்பதாகவும் ,இந்த பதவியின் மூலமாக மக்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் நன்மை செய்ய வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்கள்.
மாணவர்களுக்கு பாராட்டு :
பள்ளி மாணவர்கள் மிக நன்றாக செயல்படுவதாக என்னிடம் பாராட்டு தெரிவித்தார்கள்.தான் பல பள்ளிகளுக்கு சென்று உள்ளதாகவும் , இந்த பள்ளியில் தான் காலை இறைவணக்க கூட்டம் மிக அருமையான முறையில் நடந்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.மாணவர்களின் பங்களிப்பு நன்றாக இருந்தததாகவும் தெரிவித்தார். காலை வழிபாட்டு கூட்டத்திலேயே மாணவர்கள் பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறிய விதம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்கள். இந்த பள்ளிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்கள் . பள்ளியின் எந்த உதவி என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
அரசு கல்லூரியில் படித்து IPS ஆனது பெருமை :
குறிப்பாக ஐஏஎஸ் , ஐபிஎஸ் போன்ற படிப்புகளுக்கு எவ்வாறு படிப்பது என்பன போன்ற தகவல்களையும், என்னிடம் கேட்கலாம் என்றும் தெரிவித்தார்கள். காவல்துறை சார்பாகவும், போக்குவரத்து காவல் தொடர்பாகவும், சாலை விதிகள் தொடர்பாகவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற படிப்புகளுக்கு தயார் செய்வதற்கு உண்டான வழிமுறைகள் என்ன , அதற்கு என்னென்ன படிக்கவேண்டும், குறிக்கோளை நாம் எப்படி எல்லாம் நினைத்து அதனை நோக்கி செயல்படவேண்டும் போன்ற பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்கள். தானும் அரசுப்பள்ளியில் படித்ததாகவும், அதன் பிறகே அரசுப் கல்லூரிகளில் படித்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்கள் . அவர்களது பல்வேறு பணிகளுக்கிடையில் நல்ல நேரத்தை எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி சென்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு நேரடிபோலீஸ் ஐபிஎஸ் பணியில் இருப்பவர் தங்களுடன் அருகாமையிலிருந்து சந்தேகங்களை கேட்க சொன்னதற்கும், தங்களுடன் சிறந்த முறையில் கலந்துரையாடல் நடத்தியதும் மறக்க முடியாத அனுபவத்தை அடைந்தனர்.
நன்றிகள் பல :
மாணவர்களுக்கு மிக அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களுக்கும், உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி கலந்த அன்புடன் ,
லெ . சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம். 8056240653
தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு வலைத்தளத்தில் கேள்வி பதில்களுடன் காணலாம் :
https://kalviyeselvam.blogspot.com/2019/12/blog-post_0.html#more
தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS
அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வுவீடியோவாக காணலாம் :
https://www.youtube.com/watch?v=AYHyUfDl6WM
https://www.youtube.com/watch?v=dcyKj7hhw4s
https://www.youtube.com/watch?v=MOTAJLioxmw
https://www.youtube.com/watch?v=KyZxsqXWCRg
https://www.youtube.com/watch?v=nr6cih4nrcg
https://www.youtube.com/watch?v=oTsI1RfHBKU
https://www.youtube.com/watch?v=6VNszEkL5rY

No comments:
Post a Comment