Sunday, 27 September 2026

 

கேளுங்கள்… கேளுங்கள்! AIR மதுரை பண்பலை 103.3-லும் , ராமேஸ்வரம் பண்பலை 100.9 ல்  தேவகோட்டை பள்ளி தலைமையாசிரியரின் பேட்டி


தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சொக்கலிங்கம், அகில இந்திய வானொலி மதுரை பண்பலை 103.3-ல் ஒலிபரப்பாகும் “விருந்தினர் பக்கம்” நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய வானொலி மதுரை வானொலியின் “விருந்தினர் பக்கம்” நிகழ்ச்சியில் எனது பேட்டி நாளை 28ஆம் தேதி காலை 10 மணிக்கும், 29ஆம் தேதி காலை 10 மணிக்கும் ஒலிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பெற்றுள்ள பல்வேறு கல்வி அனுபவங்கள், பள்ளி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பணி தொடர்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இனிமையான பாடல்களுடன் கல்வி சார்ந்த பல்வேறு தகவல்களும் இடம்பெறுகின்றன.

கல்வியின் பல்வேறு செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் அனுபவங்கள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியை அறிவிப்பாளர் தமிழ்ச்செல்வி ஒருங்கிணைத்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சியை மொபைல் போன் மூலமாகவும் நேரலையில் கேட்டு மகிழலாம். அதற்காக கீழ்க்கண்ட இணைப்பைப் பயன்படுத்தலாம்:

https://radiosindia.com/maduraifm.html

பள்ளியின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களை அறிந்துகொள்ள அனைவரும் நிகழ்ச்சியை கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment