பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்புக்கும் விரிவாக்கம்
தேவகோட்டை: 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியை சிவரஞ்சனி, நகராட்சி பணியாளர் தேன்மொழி, உணவுப் பணியாளர் தமிழ்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். காலை உணவுத் திட்டத்தால் மகிழ்ச்சியடைந்த மாணவ, மாணவியர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=fS3opxRHvJ8
No comments:
Post a Comment