Monday, 14 September 2026

 *🛑🟢🔴இஸ்ரோ சாதனை: மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு*




தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், இஸ்ரோ சார்பில் புவி கண்காணிப்பு பணிகளுக்காக ஜூசாட்-1ஏ (EOS-05) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைப் பாராட்டி மாணவர்கள் வண்ண பலூன்களைப் பறக்கவிட்டனர்.


இஸ்ரோவின் இந்த சாதனை குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மாணவர்களுக்கு விளக்கினார். ஜூசாட்-1ஏ செயற்கைக்கோள் மூலம் வானிலை, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்தியாவின் விண்வெளி சாதனைக்காக பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியை சிவரஞ்சனி  செய்திருந்தார்கள் .






படம் விளக்கம் : இஸ்ரோவின் ஜூசாட்-1ஏ செயற்கைக்கோள் வெற்றியைப் பாராட்டி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்களைப் பறக்கவிட்ட காட்சி.

No comments:

Post a Comment