Saturday, 19 September 2026

 

பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம்















தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் தேவகோட்டை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

அஞ்சல்துறையின் தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி வீரபாண்டியன் மாணவர்களை வரவேற்றார். தொடர்ந்து, பாஸ்போர்ட் அலுவலர்கள் ஷர்மிளா மற்றும் நாகவள்ளி ஆகியோர் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நடைமுறை, தேவையான ஆவணங்கள், முகவரி மற்றும் பிறந்த தேதி சரிபார்ப்பு உள்ளிட்ட அலுவலக செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.

மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். நிறைவாக ஆசிரியை சிவரஞ்சனி நன்றி கூறினார். களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியை ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.




பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து பாஸ்போர்ட் அலுவலர்கள்  ஷர்மிளா மற்றும் நாகவள்ளி  ஆகியோர் விரிவாக விளக்கினார்கள். அஞ்சல் நிலைய  தலைமை அதிகாரி வீரபாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.



 

வீடியோ : https://www.youtube.com/watch?v=pQt5xyANPSI

No comments:

Post a Comment