தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு பெருந்திரள் வாசிப்பு
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான பெருந்திரள் வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது.
முதல் பருவத் தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று பள்ளி நடைபெற்றது. மாணவர்களை நூலகப் புத்தகங்களை வாசிக்க ஊக்குவிக்கும் வகையில், பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் பெருந்திரள் வாசிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்கள் தொடர்ந்து புத்தகங்களை வாசித்து, அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளை எடுத்துக் கூற வேண்டும் என தலைமையாசிரியர் வலியுறுத்தினார். இதையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து, தாங்கள் படித்தவற்றின் கருத்துகளையும் பின்னூட்டங்களையும் எடுத்துக் கூறினர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், சிவரஞ்சனி, ஆர்த்தி, முத்துமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பெருந்திரள் வாசிப்பு நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து கருத்துகளை எடுத்துக் கூறினர்.
video : https://www.youtube.com/watch?v=MfeLN39UWLg
No comments:
Post a Comment