Wednesday, 9 September 2026

 

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்





தேவகோட்டை: தமிழக அரசின் காலை உணவுத் திட்டம், செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்  முன்னாள் முதல்வர் காமராஜர் காலை உணவு திட்டம் என விரிவுபடுத்தப்பட உள்ளது. இதையொட்டி, தேவகோட்டை நகராட்சி சார்பில் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளிக்கு காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நகராட்சி சுகாதார பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும்  பணியாளர்கள்  வள்ளி மற்றும் செல்லம்மாள் ஆகியோர் தளவாடப் பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் சொக்கலிங்கத்திடம் வழங்கினர். திட்டத்திற்கான பெயர் பலகை நாளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விரைவில் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


பட விளக்கம் : தேவகோட்டை நகராட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்,  முன்னாள் முதல்வர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கான தட்டு, டம்ளர் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை தலைமையாசிரியர் சொக்கலிங்கத்திடம் வழங்கிய நகராட்சி சுகாதார பணி  மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும்  பணியாளர்கள்  வள்ளி மற்றும்  செல்லம்மாள்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=xWA1qvhBsiI

No comments:

Post a Comment