Monday, 13 April 2026

 

பலூன்கள் பறக்க… சித்திரை திருநாளை உற்சாகமாக வரவேற்ற தேவகோட்டை மாணவர்கள்




தேவகோட்டை:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சித்திரை திருநாளை முன்னிட்டு வண்ணமயமான பலூன்களை ஆகாயத்தில் பறக்கவிட்டு  உற்சாகமாக வரவேற்றனர்.

                                                      சித்திரைத் திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே கொண்டாட்டம் நிறைந்த சூழல் காணப்பட்டது. “திகட்டும் வரை தித்திக்கட்டும் சித்திரை திருநாளே  வருக! வருக!” என்ற முழக்கத்துடன் மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் முத்துலெட்சுமி, முத்துமீனாள்  உட்பட ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு, சித்திரை திருநாளின்  முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும், பாரம்பரிய பண்பாட்டை பேணும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக , அனைவரும் ஒன்றிணைந்து இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

வீடியோ :

https://www.youtube.com/watch?v=0LkO8stXe9Q

 https://www.youtube.com/watch?v=oc2zFBN3nCM






No comments:

Post a Comment