தேவகோட்டையில் பள்ளி மாணவர்கள் வீதிகளில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் – 100% வாக்களிக்க அழைப்பு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்களுடன் இணைந்து வீதிகளில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிறப்பாக நடத்தினர்.
“100% வாக்களிக்கவும்”, “ஜனநாயகத்தை காக்க ஒருவிரலை பயன்படுத்துங்கள் ” போன்ற கோஷங்களுடன் மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல்வேறு செயல் முறைகளின் மூலம், வீதிகளில் சென்ற பொதுமக்களுக்கு தேர்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்புரை வழங்கினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் பெப்பின் இளம்பரிதி முன்னிலை வகித்து, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேர்தல் விழிப்புணர்வின் அவசியத்தை விளக்கிப் பேசினார்.
மாணவர்கள் உரையாடல், நாடகம், கவிதை, பாடல் ஆகிய வடிவங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். மாணவி நித்யா “அரசியலை அறிந்துகொள், ஆட்களை தெரிந்துகொள்” என்ற தலைப்பில் பேசியார். மாணவி ரக்ஷிதா “முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்” என்ற தலைப்பில் தனது கருத்துகளை பகிர்ந்தார். மாணவி ரித்திகா “எனது வாக்கு எனது உரிமை” என்ற தலைப்பில் பேசினார். மாணவி நந்தனா ஒரு விரல் மூலம் நமது தலையெழுத்தை மாற்றுவோம் " போன்ற பாடல்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், மாணவிகள் மாலினி மற்றும் மோனிகா “நமது வாக்கு நமது வலிமை” என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சிகளை கண்ட பொதுமக்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.
இந்த நிகழ்வில் தேவகோட்டை தோட்டக்கலை பண்ணை உதவி அலுவலர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியை வள்ளிமயில் நன்றி உரை வழங்கினார்.
படவிளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பாடல்,கவிதை, நாடகம், உரையாடல் மூலம் அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்களுடன் இணைந்து வீதிகளில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் பெப்பின் இளம்பரிதி முன்னிலை வகித்து, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேர்தல் விழிப்புணர்வின் அவசியத்தை விளக்கிப் பேசினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=5KgpzenyBSM
https://www.youtube.com/watch?v=pUlN5MtG3h0





No comments:
Post a Comment