தீயணைப்பு விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். சமீபத்தில் தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பதிலளித்து வெற்றி பெற்ற மாணவிகள் அபர்ணா, ரித்திகா, நந்தனா மற்றும் மாணவர்கள் யோகின், விஜய்கண்ணன் ஆகியோருக்கு, தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தின் நிலைய அலுவலர் கணேசன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிலைய அலுவலர் கணேசன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
No comments:
Post a Comment