Wednesday, 22 April 2026

தமிழ்நாட்டில் ஆர்வமுடன் வாக்களித்த இளம் தலைமுறை வாக்காளர்கள்! 


                               முதல் வாக்கு பதிவு – மகிழ்ச்சியை பகிர்ந்த லெட்சுமணன், அனைவரையும் வாக்களிக்க அழைப்பு

காரைக்குடி: காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள சுப்பையா அம்பலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், அண்ணாமலையார் நகரை சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர் லெட்சுமணன் தனது வாக்கை பதிவு செய்தார்.

முதல் முறையாக வாக்களித்த அனுபவம் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். “முதல் தடவையாக வாக்களித்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. இன்று காலையிலேயே வந்து என் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது,” என கூறினார்.

மேலும், அனைவரும் தங்களது வாக்குரிமையை உணர்ந்து, முடிந்தவரை சீக்கிரமாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


No comments:

Post a Comment