Monday, 20 April 2026

கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் முயற்சி: மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி பரிசு அறிவித்த தேவகோட்டை பள்ளி








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. கோடை விடுமுறையை பயனுள்ளதாக பயன்படுத்த மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

                              பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம், ஒவ்வொரு மாணவரும் விடுமுறையில் குறைந்தது நான்கு புத்தகங்கள் படிக்க வேண்டும் என அறிவுறுத்தி, அந்த புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், தமிழக அரசு ஊரகப் பகுதிகளில் பல நூலகங்களைத் திறந்து, அரியவகை புத்தகங்களையும் வழங்கி வருவதை குறிப்பிட்டு, மாணவர்கள் நூலகங்களைப் பயன்படுத்தி தங்கள் அறிவை விரிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த முயற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள்  மற்றும் முத்துலெட்சுமி மேற்கொண்டனர். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் போது, மாணவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றி கேள்விகள் கேட்டு, சிறப்பாக பதிலளிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய முயற்சி, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பெரிதும் பாராட்டப்படுகிறது.

பட விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.


வீடியோ : https://www.youtube.com/watch?v=vuTZw7JtJKA

No comments:

Post a Comment