ஆட்டிசம் விழிப்புணர்வு
கருவுற்ற தாய்மார்கள் மன அழுத்தத்தில் இருப்பதும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் உருவாக காரணமாகலாம்
உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள்
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை புறக்கணிக்காதீர்கள் , அரவணையுங்கள்
அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியை பேச்சு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்வில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியைகள் கவிதா மற்றும் செல்ல நாச்சியார் ஆகியோர் மாணவர்களிடம் பேசுகையில், ஆட்டிசம் குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள். ஆட்டிசம் குழந்தைகளில் நடக்க முடியாத குழந்தைகளுக்கு நடக்க முடிந்த குழந்தைகள் உணவு, தண்ணீர் எல்லாம் கொண்டுபோய் கொடுப்பார்கள். அவர்கள் சாப்பிட உதவி செய்த பிறகு இவர்கள் சாப்பிடுவார்கள்.
ஆட்டிசம் என்றால் அறிவு வளர்ச்சி குறைபாடு தான். ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் மற்ற மாணவர்கள் மாதிரி ஒரு இடத்தில் அமர்ந்து கவனிக்க முடியாது.
மற்ற மாணவர்கள் கேள்வி கேட்ட உடனே பதில் சொல்வார்கள். ஆனால் ஆட்டிசம் குழந்தைகள் கேட்ட அரை மணி நேரம் கழித்து தான் பதில் சொல்ல முடியும் .நம் முகத்தைப் பார்த்து பதில் சொல்ல முடியாது .
ஆட்டிஸம் குழந்தைகளில் பலவகையினர் உண்டு.ஆட்டிசம் குழந்தைகளுக்கு எல்லா திறமையும் இருக்காது. ஆனால் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அந்த திறமையை கண்டுபிடித்து அதில் வெற்றி அடைய செய்வதே நோக்கம்.
ஆட்டிஸம் குழந்தைகளுக்கு மற்ற மாணவர்களைப் போல் வெளி உலகம் தெரியாது. நாம் அழைத்துச் சென்றால் வருவார்கள்.
எங்கு வந்துள்ளோம், இது என்ன இடம் என்பதெல்லாம் தெரியாது. வெளி உலகம் தெரியாத அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அவர்கள் படிக்கும் பள்ளி, அங்கு உள்ள ஆசிரியர்கள் மட்டுமே.
அவர்களை சமுதாயத்தோடு ஒன்றிப்போக செய்வதே அனைவரின் நோக்கமாகும். மற்ற குழந்தைகள் அவர்களை வெறுக்க கூடாது. விளையாட சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஆட்டிசம் குழந்தைகளின் சிலபேர் அமைதியாக இருப்பார்கள். எழுத தெரியாது. அவர்களை நார்மல் பள்ளியில் படிக்க வைக்கலாம். சிறு வயதிலேயே ஆட்டிசம் குழந்தைகளை கண்டுபிடித்தால் சரிசெய்யலாம்.
பொதுவாக நடக்கும் வயதில் குழந்தைகள் நடக்க வேண்டும் .இல்லையென்றால் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். ஆட்டிசம் குழந்தைகள் உருவாவதே ஊட்டச்சத்து குறைபாடுகளினால்தான்.
அந்தக் காலத்தில் சத்தான உணவு சாப்பிட்டார்கள். ஆனால் தற்பொழுது பாஸ்ட்புட் அதிகம் சாப்பிடுகிறார்கள் ஆட்டிசம் என்பது மரபணு குறைபாடுதான்.
தாய் கருவுற்றிருக்கும் போது மன அழுத்தத்தில் இருக்கக்கூடாது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆட்டிசம் பாதித்த மாணவர்கள் உருவாக இதுவும் ஒரு காரணம் .
ஆட்டிசம் பாதித்த மாணவர்களுக்காக அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிறப்பு பள்ளி உள்ளது. அங்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுப் பயிற்சி, பிசியோதெரபி உள்ளிட்ட பல வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை நமக்குத் தெரிந்த அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு பேசினார்கள்.
நிகழ்வில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியைகள் கவிதா மற்றும் செல்ல நாச்சியார் ஆகியோர் மாணவர்களிடம் ஆட்டிசம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்..தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=tZwSO8wxwFQ
No comments:
Post a Comment