விடுமுறைக்கால பயிற்சி நிறைவு விழா மற்றும் பரிசு வழங்கும் விழா
உங்கள்மீது நம்பிக்கை வைக்கும்போது வாழ்க்கையில் வெற்றிகிட்டும்
தேவகோட்டை – தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச
பயிற்சி முகாமின் நிறைவு நாள்விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ராமன் விஜயன் பயிற்சியில் பங்கேற்ற 60க்குமேற்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி பேசுகையில் , படிப்பறிவு பத்து சதவீதம் மட்டுமே பயன்படும். பட்டறிவுதான் தொண்ணுறு விழுக்காடு வாழ்க்கைக்கு உதவும். உங்கள்மீது நம்பிக்கை வைக்கும்போது வாழ்க்கையில் வெற்றிகிட்டும் என்று பேசினார்.மாணவர்கள் பயிற்சியில் தயாரித்த நியூஸ் பேப்பர் ஆல்பம்,வரைந்த ஓவியங்கள்,வண்ண களிமண்ணால் உருவாக்கிய அழகிய உருவங்கள் ஆகியவை பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது.நிறைவு நாள் நிகழ்வில் மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச
பயிற்சி முகாமின் நிறைவு
நாள்விழாவில் இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ராமன் விஜயன் பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
உங்கள்மீது நம்பிக்கை வைக்கும்போது வாழ்க்கையில் வெற்றிகிட்டும்
விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ராமன் விஜயன் பயிற்சியில் பங்கேற்ற 60க்குமேற்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி பேசுகையில் , படிப்பறிவு பத்து சதவீதம் மட்டுமே பயன்படும். பட்டறிவுதான் தொண்ணுறு விழுக்காடு வாழ்க்கைக்கு உதவும். உங்கள்மீது நம்பிக்கை வைக்கும்போது வாழ்க்கையில் வெற்றிகிட்டும் என்று பேசினார்.மாணவர்கள் பயிற்சியில் தயாரித்த நியூஸ் பேப்பர் ஆல்பம்,வரைந்த ஓவியங்கள்,வண்ண களிமண்ணால் உருவாக்கிய அழகிய உருவங்கள் ஆகியவை பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது.நிறைவு நாள் நிகழ்வில் மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment