1,77,000 அரசு
பள்ளி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்கியவருக்கு பாராட்டு விழா
நிகில் அறக்கட்டளை மூலம் திரு.நாகலிங்கம் மற்றும் அவரது மனைவி மலர்க்கொடி இருவரும் இணைந்து நிகில் அறக்கட்டளை ஆரம்பித்து தொடர்ந்து இது வரை சுமார் ஒரு லட்சத்து எழுபத்து ஏழாயிரம் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கே சென்றே ஒரு நாள் முழுவதும் வாழ்வியல் திறன் பயிற்சி ( 50 மாணவர்களுக்கு ஒரு பயிற்றுனர் என்கிற விகிதத்தில் ) உன்னையே நீ அறிதல்,இலக்கு நிர்ணயித்தல் ,தகவல் தொடர்பு ,நினைவாற்றல் பயிற்சி என்கிற தலைப்புகளில் பயிற்சி இலவசமாக 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி உள்ளனர் ..பயிற்சியின் நிறைவாக இந்த தலைப்புகளில் உள்ள தகவல்கள் அடங்கிய புத்தகம் மற்றும் சான்றிதழ் அனைத்து மாணவர்களுக்கும் பரிசாக வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலை,மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.ஆர்வமுள்ள பள்ளிகள் நிகில் திரு.நாகலிங்கம் ( ,9443117132,7010963642,9003659270) அவர்களை தொடர்பு கொள்ளலாம் .சனிக்கிழமைகளில் மட்டுமே இந்த பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேசி சர்வதேச பயிற்சியாளர் மற்றும் ஜி எஸ் டி மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையர் எஸ். நாகலிங்கம் கடந்த 30ம் தேதியன்று பணி நிறைவு பெற்றார்கள்.அந்நிகழ்வில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைக்கப்பெற்றது.ஜேஸிசில் மிகப்பெரும் ஆளுமைகள் லியோ என் ஏ என் நாராயணன், பேராசிரியர் ஆர். ராஜா கோவிந்தசாமி, பேராசிரியர் ஆர் எம் ராமநாதன்ஆகியோரை சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.பணி நிறைவுக்கு பிறகு இன்னும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் கிராம புற மாணவர்களை சந்திக்கும் உள்ளனர் என்பது பாராட்டத்தக்கது.இன்னும் பல லட்சம் மாணவர்களை இந்த பயிற்சி சென்று அடைய வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை,உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதே எங்களின் ஆவலாகும்.
இந்த முயற்சி இன்னும் பல லட்சம் மாணவர்களை சென்று அடைய வாழ்த்துக்கள்.
அன்புடன் லெ .சொக்கலிங்கம் ,நிகில் அறக்கட்டளை உறுப்பினர்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.
பின்குறிப்பு : தமிழகத்தின் எந்த பள்ளிக்கும் இந்த பயிற்சி தேடி வரும் நீங்கள் தொடர்பு கொண்டால் இலவசமாக வரும்.

Excellent sir
ReplyDeleteCongratulations