Wednesday, 26 December 2018

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கால இலவச பயிற்சி 
மாணவர்கள் இளம் வயதில் உண்மை,நேர்மை கடைபிடித்தால் வாழ்க்கை வசப்படும் 
கல்லூரி முதல்வர் பேச்சு 






                        பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது,மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள பயிற்சிகள் அவசியம்.மாணவர்கள் இது போன்ற பயிற்சி முகாம்களை பயன்படுத்தி தங்களது தனி திறனை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டி சாதனையாளராக வர முயற்சி எடுக்க வேண்டும்.வாழ்க்கையில் உண்மை,நேர்மை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு  பேசினார்.பயிற்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.அகஸ்தியா நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் ராஜ்கமல்,அய்யப்பசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள்  நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  இலவச விடுமுறை கால பயிற்சி முகாமை தேவகோட்டை  ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் தொடங்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

1 comment: