Monday, 3 December 2018

 சர்வதேச மாற்று திறனாளிகள் தின விழா

போலியோ பாதிப்பு இல்லாத தமிழகம்  உருவாக்கி அரசு சாதனை 

கல்லூரி முதல்வர் பாராட்டு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின விழா  நடைபெற்றது.






                                      நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியை முத்தமீனாள் வரவேற்றார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர்  மாணவர்களிடம் பேசுகையில் , நீங்கள் அனைவரும் மாற்று திறனாளிகளுக்கு உதவ வேண்டும்.மாற்று திறனாளிகள் பல பேர் வாழ்க்கையில் பல எண்ணற்ற சாதனைகளை படைத்து உள்ளனர்.நீங்கள் சிறு வயதிலேயே மாற்று திறனாளிகளை நல்ல எண்ணத்துடன் அணுகி அவர்களுக்கு உதவி செய்து ஊக்கபடுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.மாற்று திறனாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு,அதற்கு காரணமான தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.என்று பேசினார்.முன்னதாக பள்ளியில்  நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கார்த்திகேயன்,கிருத்திகா ,காயத்ரி,சிரேகா ,சந்தியா,பாக்கியலட்சுமி ஆகியோர் பரிசுகளை பெற்றனர் .நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின விழாவில்   ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன்  பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment