Wednesday, 12 December 2018

  அறிவியல் சோதனை பயிற்சி முகாம் 


 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
                      முகாமிற்கு  வந்தவர்களை மாணவி சந்தியா   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர் ராஜ்கமல் ,பெரியசாமி   அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் நிலைமின்னியல், மின்னூட்டம்,எ ளிய மின்சுற்று,தொடர் இணைப்பு,  பக்க இணைப்பு மின் சுற்று ,மின் கடத்தும் பொருள்,மின்கடத்தாபொருள் போன்றவை தொடர்பான சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர்.  நிறைவாக மாணவர் சபரி நன்றி கூறினார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் விளையாட்டாக அறிவியல் கற்றல்   வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை   செய்து கற்று கொண்டனர்.

1 comment: