மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா
தேவகோட்டை -
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி மாணவர்கள் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட செடிகளை நட்டனர்.விழாவில் அனைத்து
மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.வீடுகளில் சென்று அவற்றை
பாதுகாப்பாக வளர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.கன்றுகள் வளர்ப்பதை இரண்டு
வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்களே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று
பார்வையிட்டு ,நன்றாக மரம் வளர்க்கும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள்
வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.கஜா புயல் பாதிப்பின்போது பள்ளியில் இருந்த சில மரங்கள் சாய்ந்தன.அதனை சரி செய்யும் விதத்தில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பட
விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள்
அனைவருக்கும் மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.பள்ளி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட செடிகள் மாணவர்களால் நடப்பட்டன.
No comments:
Post a Comment