மாணவர்களுக்கான சேமிப்பு விழிப்புணர்வு முகாம்
வங்கியில் மாணவர்கள் பத்து ரூபாயில் கணக்கு ஆரம்பிக்கலாம்
பத்து வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களும் பத்து ரூபாயில் கணக்கு துவக்கலாம்
தொலைபேசி மூலம் யார் கேட்டாலும் எ .டி .எம்.எண்ணை கொடுக்க வேண்டாம் - வங்கி மேலாளர் அறிவுரை
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பாரத ஸ்டேட் வங்கியின் தேவகோட்டை கிளை துணை மேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பாரத ஸ்டேட் வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் வேல்முருகன் மாணவர்களிடம் பேசும்போது,சேமிப்பில் சிறுகுழந்தைகளுக்கு பத்து வயதுக்கு கீழ் உள்ளவர்களும்,பத்து வயதுக்கு மேல் உள்ள மாணவர்களும் பத்து ரூபாய் கொடுத்து கணக்கு துவங்கி கொள்ளலாம். பத்து வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு எ .டி .எம்.அட்டை வாங்கி கொள்ளலாம்.மாணவர்களுக்கு குறைந்த பட்ச தொகை என்று எதுவும் கிடையாது.வங்கியில் இருந்து யாரும் ,யாரையும் தொடர்பு கொள்வது கிடையாது.வங்கியிலிருந்து பேசுவதாக கூறி
தொலைபேசி மூலம் யார் கேட்டாலும் எ .டி .எம்.எண்ணை கொடுக்க வேண்டாம்.இதனை உங்கள் பெற்றோரிடமும் சென்று சொல்லுங்கள் என்று பேசினார்.மாணவர்கள் கோட்டையன் ,சந்தியா,காயத்ரி ,வெங்கட்ராமன்,ஜெனிபர் ,ராஜேஷ்,அஜய் பிரகாஷ் உட்பட பல மாணவர்கள் வங்கி தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.மாணவர்களின் பெற்றோர்கள் மஹேஸ்வரி,புவனேஸ்வரி,ராணி,கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டு வங்கி தொடர்பாக தங்களின் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சேமிப்பு விழிப்புணர்வு முகாம் தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கி சார்பாக நடைபெற்றது.முகாமில் கணக்கு துவக்குவதற்காக படிவங்களை மாணவர்களுக்கு வங்கி மேலாளர் வேல்முருகன்,துணை மேலாளர் சிவக்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உடன் உள்ளார்.

No comments:
Post a Comment