Friday, 3 November 2017

இன்றைய நிகழ்ச்சி ( 04/10/2017)

புகைப்படம் - ஓர் அறிமுகம் 

புகைப்படம் எடுப்பது எப்படி ? பயிற்சி முகாம் 

இடம் ; சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

நாள் ; 04/10/2017

நேரம் ; காலை 9.30 மணி 


 

பயிற்சி அளிப்பவர்கள் ; 1) ஜெயக்குமார் வெங்கடேசன் ,கற்பனை புகைப்பட கலைஞர்,பெங்களூரு .
2) கரு.அண்ணாமலை ,திரைப்பட உதவி இயக்குனர் .

தலைமை ; லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

அனுமதி இலவசம் .அனைவரும் வருக.

சிறு அறிமுகம் ; 
கடந்த ஒன்றரை வருடமாக முயற்சி செய்து தற்போது நடைபெற உள்ள இந்த நிகழ்வு குறித்து : பயிற்சி அளிக்கும் திரு.ஜெயா வெங்கட் அவர்கள் புகைப்படம் எடுக்கும் துறையில் பல ஆண்டுகளாக ஆர்வத்துடன் கற்பனை கலந்த புகைப்படங்களை எடுத்து வருகிறார்.தற்போது விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் புகைப்படங்களை ஓய்வு நேரத்தில் ஆர்வத்துடன் படம் பிடித்து வருகிறார்.FOOD AND PRODUCT PHOTOS எடுப்பதில் கை தேர்ந்தவர்.பள்ளி மாணவர்களுக்காக புகைப்படம் எடுக்க கற்று தருவதற்கு சேவை மனப்பான்மையுடன் ஆர்வத்துடன் பெங்களூருவில் இருந்து தோழர் கரு.அண்ணாமலை ஏற்பாட்டில் கிளம்பி வருகிறார்.நன்றிகள் பல.அனைவரும் வரலாம்.அனுமதி இலவசம்.

 

No comments:

Post a Comment