Wednesday, 22 November 2017

  ஆளுமை பயிற்சி முகாம் 
 
கல்விதான் என் சொத்து என வீட்டில் எழுதி ஓட்டுங்கள் 
 
மலேசிய நாட்டின் ஆளுமை  பயிற்றுனர் அறிவுரை 



 
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆளுமை பயிற்சி  நடைபெற்றது .
               பயிலரங்கிற்கு வந்தவர்களை மாணவர் கிஷோர்குமார்   வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மலேசியா நாட்டை சார்ந்த நல்ல பெருமாள் ராமநாதன் மாணவர்களிடம் ஆளுமை திறன் தொடர்பான பயிற்சியளித்து பேசுகையில், நீங்கள் அனைவரும் உங்கள் வீடுகளில் கல்விதான் என் சொத்து என பெரிதாக எழுதி ஒட்டி வையுங்கள்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதனை  பார்த்து கொண்டே இருங்கள்.உங்களுக்கு தானாக கல்வியின்மீது ஆர்வம் வந்துவிடும்.ஆங்கிலம் எளிதாக பேசுவதற்கு நீங்கள் தினமும் 60 நிமிடம் ஆங்கிலத்தை  தொடர்ந்து 90 நாட்கள் வாசித்தால் உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை காணலாம்.வாசித்தல் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.ஆரம்பம் அழகாக இருந்தால் முடிவும் அழகாக இருக்கும்.முயற்சித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.தமிழ் என்  ஜீவன்.ஆங்கிலம் எனது உடல் .உடலை பேணுவேன்.ஜீவனை காப்பாற்றுவேன்.அனைத்து விஷயங்களையும் நன்றாக வாசிப்பவர்கள் நாளை நல்ல தலைவன் ஆவர்கள் இவ்வாறு பேசினார்.பள்ளியில் தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் சத்துணவு சாப்பிட்டு மிக அருமையாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார்.
               மாணவர்கள் வெங்கட்ராமன்,ஜெனிபர்,காயத்ரி,சின்னம்மாள்,காவியா,திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ,ராஜேஸ்வரி,சத்யா,அனுசியா,நித்யகல்யாணி,ஐயப்பன்,ரஞ்சித்,ஈஸ்வரன்,கிஷோர்,திவான்,விக்னேஷ்,மாதவன் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக மாணவி திவ்யஸ்ரீ  நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆளுமை பயிலரங்கில் மலேசிய நாட்டை சார்ந்த ஆங்கில   பயிற்றுனர் நல்ல பெருமாள் ராமநாதன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

No comments:

Post a Comment