Thursday, 16 November 2017

தமிழக அரசையும் ,பள்ளியையும் பாராட்டிய மலேசிய நாட்டின் கல்வியாளர் 




தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு இன்று வருகை புரிந்த மலேசிய நாட்டின் ஆங்கில பயிற்சியாளர் திரு.நல்ல பெருமாள் ராமநாதன் அவர்கள் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு மிகவும் அருமையாக இருந்தது என்று தெரிவித்ததுடன் ,அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் சுத்தமாக நன்றாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்ததுடன் ,உணவு சாப்பிட்ட மகிழ்ச்சியை பள்ளியின் சத்துணவு பார்வை நோட்டிலும் பதிவு செய்து சென்றார்கள்.
                                 சில மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்து சென்ற மலேசிய நாட்டில் வசித்து வரும் திரு.நல்ல பெருமாள் ராமநாதன் அவர்கள் ,பயிற்சியின்போது மிக அழகாக பதில் சொன்ன ராஜேஸ்வரி என்கிற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்க பள்ளிக்கு வந்தவர் .அப்போது மாணவர்கள் பள்ளியில் தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் அழகாக,அமைதியாக ஆர்வத்துடன் உணவினை சாப்பிடுவதை பார்த்து விட்டு தானும் அதனை சாப்பிடுவதாக சொல்லி சாப்பிட்டு விட்டு தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தினையும் , அதனை நல்ல முறையில் செயல் படுத்தி வரும் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியினையும் பாராட்டினார்.அருகில் வைக்கப்பட்டிருந்த குடிநீரும் நல்ல நிலையில் குடிக்க அருமையாக இருந்ததாகவும் சொன்னதுடன் ,அதனை பள்ளியின் சத்துணவு பார்வை நோட்டிலும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்கள்.





No comments:

Post a Comment