Monday, 20 November 2017

மாணவர்களுக்கு பாராட்டு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.



                                                 விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.விழாவில்   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்குகொண்டு பரிசுகளை பெற்ற கிஷோர்குமார்,ரஞ்சித் ,காயத்ரி ,ராஜேஷ்,அஜய்பிரகாஷ் ,சக்திவேல்,ஐயப்பன்,கோட்டையன் ,சிரேகா ,தனுதர்ஷினி,கிருத்திகா ,காவியா,ஹரிஹரன்,திவான் உட்பட 14 மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விடுமுறை நாளன்று ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காரைக்குடியில் நடைபெற்ற போட்டியில் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார். 

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.மாணவர்கள் பங்குபெற்றதற்கான புத்தக பரிசுகளுடன் உள்ளனர்.
                               

No comments:

Post a Comment