*துபாயில் புகழ் பெற்ற பள்ளி இந்தியன் பள்ளி
*துபாய் நாட்டில் உள்ள பள்ளி கல்வி முறை இந்திய பள்ளி கல்வி முறை - இந்திய பாட திட்டம்
* வருமான வரி உட்பட வரியே இல்லாத இல்லாத நாடு துபாய் நாடு
*துபாய் நாட்டில் அரசு பேருந்துகள் மட்டுமே உள்ளன - தனியார் பேருந்துகள் கிடையாது
*அரசு பேருந்துகளில் ஓட்டுனர் மட்டுமே உள்ளனர்- நடத்துனர் கிடையாது
* வாரத்தின் முதல் வேலை நாள் ஞாயிற்றுகிழமை
* வெள்ளிகிழமை,சனிக்கிழமை விடுமுறை நாள்
*துபாய் அரசு பள்ளிகளில் துபாய் நாட்டினர் மட்டுமே படிக்கலாம் - வெளிநாட்டினர் தனியார் பள்ளிகளில் மட்டுமே படிக்கலாம்
துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் தகவல்
தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் நாட்டில் புகழ்பெற்ற பள்ளி இந்தியன் பள்ளி என்று துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் ஹிதயதுல்லா தகவல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் ஹிதயதுல்லா மாணவர்களுடன் துபாய் நாடு குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தும்போது , துபாயில் புகழ் பெற்ற பள்ளி இந்தியன் பள்ளி என்றும்,சுமார் 200 சீட்டுக்கு 1000 பேர் குழுக்கள் முறையில் கலந்து கொண்டு தேர்ந்துடுக்கபடுவார்கள் என்றும் , அந்த பள்ளியில் சீட்டு கிடைக்க கடுமையான போட்டி இருக்கும் .இந்தியன் பள்ளியில் படிப்பதை பெருமையாக நினைப்பார்கள் .துபாய் நாடு முழுவதுமே இந்திய வழியான சி. பி.எஸ்.சி கல்வியே நடைமுறையில் உள்ளது . தமிழ்நாடு ஆங்கில வழி கல்வி பள்ளியும் உண்டு .பள்ளிகள் அனைத்துமே நீண்ட விடுமுறை ஜூலை முத்த செப்டம்பர் வரை விடப்படும்.அதாவது மார்ச் மாதம் பள்ளி புதியதாக ஆரம்பித்து பிறகு ஏப்ரல் ,ஜூன் வரை நடைபெற்று முதல் பருவ விடுமுறையாக கோடை கால விடுமுறை விடபடுகிறது.அரசு பள்ளிகள் உண்டு.அவற்றில் துபாய் நாட்டு மாணவர்கள் மட்டுமே படிக்க இயலும்.
ஜூன் முதல் வெயில் செப்டம்பர் வரை வெயில் கடுமையாக இருக்கும்.அப்போது மதியம் 12 மணி முதல் வரை 3 மணி வரை வெயில் நேரத்தில் வேலை செய்யகூடாது.வேலை வாங்கினால் அபராதம் விதிக்கப்படும்.விவசாயம் மிகவும் குறைவு.பொதினா,கொத்தமல்லி,தக்காளி ,கத்திரிக்காய் போன்றவை நடவு செய்யபடுகிறது.இந்தியாவுக்கும் துபாய்க்கும் 1 1/2 மணி நேரம் வித்தியாசம்.அனைத்து கோவில்களும் உண்டு..ஆனால் பொது இடங்களில் மாற்று மதத்தினர் கூம்பு வடிவ குழாய் போன்ற ஒழி பெருக்கிகளின் வழியாக மதம் தொடர்பான வழிபட்டு பாடல்கள் பாடகூடாது .
அங்குள்ள 1 காசு திர்ஹம் என்று அழைக்கபடுகிறது.இந்திய ரூபாயில் 18 ரூபாய்க்கு சமம் ஆகும்.ஹிந்தி ,அரபி படித்து கொண்டால் மிகவும் நல்லது.நமது இந்தியாவில் இருந்து செல்லும் அனைவரும் துபாயில் நன்றாக பழகி கொள்கிறார்கள்.மற்ற நாட்டு மக்களை காட்டிலும் எளிதாக தொழில் செய்கிறார்கள்.ஏனெனில் இந்தியர்கள் அனைவருக்கும் நன்றாக இந்தி தெரிந்து உள்ளது.துபாய் நாட்டில் இந்தி, உருது அதிகமாக தெரியும்.
உலகத்தில் தரமான,சுத்தமான தங்கம் கிடைக்கும் நாடு துபாய் ஆகும்.வருமான வரி உட்பட வரியே இல்லாத இல்லாத நாடு துபாய் நாடு.எந்த இடத்திலும் வரி கிடையாது.மக்கள் நல்ல தாரளமாக செலவு செய்யலாம்.லஞ்சம் கிடையாது.
துபாய் நாட்டில் அரசு பேருந்துகள் மட்டுமே உள்ளன - தனியார் பேருந்துகள் கிடையாது .அரசு பேருந்துகளில் ஓட்டுனர் மட்டுமே உள்ளனர்- நடத்துனர் கிடையாது . வாரத்தின் முதல் வேலை நாள் ஞாயிற்றுகிழமை .
வெள்ளிகிழமை,சனிக்கிழமை விடுமுறை நாள்ஆகும்.ஹோட்டல் தொழில் தான் துபாய் நாட்டில் மிகவும் அதிகமாக நடைபெற்று வருகிறது.அழகிய கட்டிடங்கள் அதிகமாக உள்ளது.மலைகளும் உள்ளது.
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடு துபாய். 30 க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்கள் உள்ளன.இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலை கழகங்கள் துபாயில் உள்ளன. தமிழ் நாட்டு பெண்கள் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பு விசா மூலம் வேலைக்கு வராமல் விசிட் விசா மூலம் வேலைக்கு வருவதால் பல்வேறு சிரமத்திற்கு உள்ளகின்றனர்.எனவே சரியான வருவதால் வேலை வாய்ப்பு விசா மூலம் வேலைக்கு வந்தால் துபாய் அருமையான நாடு.இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலார்கள் பலர் சேர்ந்துதான் பாலைவனமாக இருந்த துபாயை சோலைவனமாக முனேற்றம் அடைய செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகள் தனம்,பரமேஸ்வரி,சக்தி,சௌமியா ,ஜெனிபர் ,பரத்குமார்,வசந்தகுமார்,கார்த்திகா உட்பட பல்வேறு மாணவ ,மாணவியர் துபாய் நாடு தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் ஹிதயதுல்லா பேசினார்.

No comments:
Post a Comment