Friday, 20 May 2016

                                                       முதலாம் ஆண்டு ஓவிய போட்டி

தேவகோட்டை - தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற  பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவிய போட்டி நடைபெற்றது.


                                   போட்டிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.எல்.கே.ஜி மாணவர்களுக்கு தனியாகவும்,1முதல் 3ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல்  பிரிவாகவும்,4மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம்  பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . இப்போட்டிகளில் தேவகோட்டையில் உள்ள பல்வேறு அரசு,அரசு உதவி பெறும் ,தனியார் பள்ளிகளில் இருந்து  பல நூறு மாணவர்கள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி பிரிவில் ரஞ்சனாவும் , முதல் பிரிவில் மாணிக்கம் நடுநிலைப் பள்ளி மாணவி வேத ஸ்ரீ முதல் பரிசையும்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளி மாணவி ஹரி பிரியா இரண்டாம் பரிசையும்,வைரம் மெட்ரிக் பள்ளி சிவமணி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.இரண்டாம் பிரிவில் செயின்ட் மேரிஸ் பள்ளி மாணவி டேனியல் பிரபா முதல் பரிசையும்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளி ராஜேஸ்குமார் இரண்டாம் பரிசையும்,காரைக்குடி கார்மல் பள்ளி ஸ்ரீ வர்சினி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார்.ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் :  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற  பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவிய போட்டியில் விருது பெற்ற மாணவர்கள் 


No comments:

Post a Comment