Tuesday, 17 May 2016

மரம் நடுவோம் ,மழை பெறுவோம்

கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கும் பள்ளி





தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு மரம் நாடு விழா நடைபெற்றது.பள்ளியின் உள்ளேயும் ,வெளியிலும் நல்ல நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் செல்வம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர் மரங்களை நட்டனர்.மரங்களை வெளியில் நட்டத்துடன் அதனை பாதுகாக்கவும் சில ஏற்பாடுகளை செய்தோம்.காரைக்குடி சென்று கம்பி வலை வாங்கி வந்து அதனை ஆடு,மாடு போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக காப்பற்றுவதற்காக முள்  செடிகளை சுற்றி நட்டு பாதுகாத்தோம்.

                              அவை நன்றாக வளருவதற்காக தினசரி தண்ணீர் ஊற்றினோம்.கடுமையான வெயில் இருந்தும் கூட மரங்கள் சிறிது  வளர்ந்துவிட்ட நிலையில்  அவை பள்ளியின் வெளியில் இருப்பதால் அவற்றை மேலும் பாதுகாப்பாக காப்பற்றவும், பள்ளி கோடை விடுமுறை நாட்களிகளிலும் ஒரு ஆள் நியமித்து தொடர்ந்து தண்ணீர் ஊற்றி அதனை நல்ல முறையில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறோம்.கோடை வெயிலிலும் எப்படி மரங்கள் சந்தோசமாக வளர்ந்து வருகின்றன என்று பாருங்கள்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment