Saturday, 7 May 2016

                              சுற்றுலா பயணத்தின் அனுபவங்கள் (மார்ச் மாதம் சென்றது )

நண்பர்களே ,சமீபத்தில் திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம் வழியாக மஞ்சூர் எனது குடும்பத்தினருடன் காரில் வரை சென்றேன்.இது ஒரு நல்ல பயணமாக அமைந்தது.இரவு 12.30 மணி அளவில் திருப்பூர் கடந்து அவினாசி வழியாக அன்னூர் செல்லும் வழியை தவறவிட்டோம்.அப்போது திரு.சுந்தர மகாலிங்கம் அய்யா மூலம் பழகிய நண்பர் திரு.முத்து  குமரன் என்பவர்க்கு இரவு 12.30 மணி அளவில் தொடர்பு கொண்டபோது உடனடியாக உதவினார்கள்.நான் அப்போது தான் அவரை முதன் முதலாக சந்திக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த இரவு நேரத்திலும் முகம் சுழிக்காமல் எனக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார். மேலும் அன்று இரவு திரு.திரு முருகன் ஆசிரியர் (மூலந்துரை ) அவர்கள் தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டில் வந்து தங்கி கொள்ள சொன்னார்கள்.எங்களால் செல்ல இயலவில்லை.அவர்களுக்கும் நன்றி.ஆசிரியர் திரு.பிராங்க்ளின் அவர்களும் எங்களுக்கு ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் சரியான வழியை தொலை பேசி வழியாக மிக சரியாக சொல்லி உதவினார்கள்.




                                               அவினாசியில் இருந்து காரமடை சென்று அங்கிருந்து வெள்ளியங்காடு வழியாக முள்ளி பிரிவு சென்று பல கொண்டை  ஊசி வளைவுகளை தாண்டி மஞ்சூர் முன்பு இருக்கும் அன்னமலை என்கிற அருமையான இடத்தை  அடைந்தோம்.எங்களுக்கு வழிகளில் பல்வேறு கிளைகள் பிரிந்த போதும் ஆசிரியர் நல்லமுத்து அவர்கள் பல உதவிகளை தொலை பேசி வழியாக தெரிவித்து உதவினார்கள்.அன்னமலை முன்பாக கெத்தை மின் தாயரிப்பு நடைபெறும் இடம் உள்ளே சென்று அனைத்தையும் பார்வையிட்டோம்.என்ன அருமையான இடம் குழாய்கள் வழியாக மலை மீதிருந்து தண்ணீர் கொண்டு வந்து அதனை மின்சாரமாக மாற்றுகின்றனர்.பார்க்க வேண்டிய இடம்.மஞ்சூர் செல்லும் வழியில் யானைகள் நடமாட்டம் இருக்கிறது.எனவே மிகவும் கவனமாக செல்ல  வேண்டும்.
                             நங்கள் மஞ்சூரில் BELLUCKS என்கிற இடத்தில தங்கினோம்.நல்ல மனிதர்கள்.நல்ல குளிரான பகுதி.அங்கு இருந்து குந்தா மின் பகிர்மான இடத்திற்கு சென்றோம்.அங்கும் குழாய்கள் மூலம் எப்படி தண்ணீர் வருகிறது,எப்படி தண்ணீர் வெளியே செல்கிறது என்கிற தகவல்கள் திரு.முருகேசன் என்பவரால் எங்களுக்கு அன்பாக சொல்ல பட்டது. அங்கிருந்து மாலை சின்ன கோரை என்கிற நல்ல  காட்டுக்குள் இருக்கு கூடிய ஊருக்கு தாய் சோலை எஸ்டேட் வழியாக சென்றோம்.அருமையான இயற்கை சூழ்ந்த இடம்.நல்ல குளிரான பகுதி.அங்கிருந்து மேல் பவானி சென்றோம்.மாலை 5 மணி ஆகி விட்டதால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.ஆனால மேல் பாவனி செல்லும் வழியில் அடர்ந்த காட்டு பகுதி ஆகும்.அங்கு சர்வ சாதரணமாக மான்களின் கூட்டம் பக்கத்தில் காண முடிகிறது.
                                       மீண்டும் மறுநாள் காலை வனத்துறை அனுமதி பெற்று கோரகுந்தா எஸ்டேட் வழியாக மேல் பவானி சென்றோம்.கோரகுந்தா எஸ்டேட் அருமையான எஸ்டேட்.தண்ணீரும்,இயற்கை சுழலும்,நல்ல குளிரும் உள்ள இடம். பார்க்க வேண்டிய ,ரசிக்க வேண்டிய இடம்.அங்கிருந்து மேல் பவானி சென்றோம்.இங்கு கீழ் பகுதியில் உள்ள தண்ணீரை குழாய்கள் வழியாக மேல் பகுதியில் உள்ள டேமுக்கு பம்ப் செய்கிறார்கள்.பார்க்க வேண்டிய இடம் ஆகும்.மேல் பகுதியில் உள்ள அணை கடல் மாதிரி உள்ளது.மிகப் பெரிய அணை  ஆகும்.பார்த்து கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.இங்கிருந்து தான் பவானி அணைக்கு மின்சாரம் தயாரித்த தண்ணீர் போக மீதல் உள்ள தண்ணீர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு செல்கிறது.வழியில் மான்கள் கூட்டம்,காட்டு எருமைகள் கூட்டம் ஆகியவை பார்க்க முடிந்தது.நல்ல வனபகுதி .மிக கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும்.

                          அங்கிருந்து  மஞ்சூர் வழியாக அவிலாஞ்சி அணை பகுதிக்கு சென்றோம்.இங்கு முன்பே சென்று அனுமதி வாங்கினால்தான் வனத்துறை வாகனத்தில் நம்மை காட்டு பகுதியான சோலை காடுகள்,பவானி ஆற்றுக்கு  தண்ணீர் உற்பத்தி ஆகும் இடம், லக்கடி என்ற மிகப்பெரிய அணை பகுதி ஆகியவற்றை தலைக்கு 150 ரூபாய் பெற்று கொண்டு வனத்துறை அழைத்து செல்கிறது.சோலை காடுகள் பகுதியில் காலி பிளவர் பூ போன்று அடர்த்தியான காட்டு பகுதி.அவசியம் பார்க்க வேண்டிய பகுதி.இந்த காட்டு பகுதிக்குள் வனத்துறையின் வாகனம் மட்டுமே அனுமதி உண்டு.எங்களுக்கு காலையில் வெகு சீக்கிரமே வந்து ஆசிரியர் நண்பர் இளங்கோ அவர்கள் வனத்துறை வாகனத்துக்கு முன்பதிவு செய்து உதவினார்.எங்களை அழைத்து சென்ற வாகன ஓட்டுனர் திரு.மகாலிங்கம் அவர்கள் நல்ல முறையில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.சோலை காடுகளுக்கு அடுத்ததாக பவானி ஆற்றின் ஊற்று மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறிய பவானி அம்மன் கோவில் ஆகியவற்றை பார்த்தோம்.பிறகு மிகபெரிய அளவில் அமைந்துள்ள லக்கடி என்கிற அணை பகுதியை பார்வையிட்டோம்.மிக அருமையான இடம்.மீண்டும் அங்கிருந்து கிளம்பி சிறப்பு அனுமதி பெற்று அவிலாஞ்சி உள்ளே உள்ள மின் பகிர்மான இடத்தை பார்வையிட்டோம்.இங்கு மாறுதலாக அனைத்து இயந்திரங்களும் கீழ் பகுதியில் அமைந்து இருந்தது.( குந்தா ,கெத்தை போன்ற இடங்களில் இயந்திரங்கள் அனைத்தும் மேல் பகுதியில் உள்ளன). இந்த பகுதியில் சிறுத்தை இருப்பதாக தெரிவித்தனர்.நாங்கள் செல்லும் வழியில் மான்கள்,காட்டு எருமை கூட்டம் ஆகிவைற்றை பார்த்தோம்.மீண்டும் அவிலாஞ்சியில் கிளம்பி எமரால்டு அணை வழியாக ஊட்டி செல்லலாம் என கிளம்பி எமரால்டு அணை  சென்றோம். அதுவும் மிக பெரிய அணை ஆகும்.இரவு ஆகி விட்டதால் அங்கிருந்து கிளம்பி மசினகுடி செல்லலாம் என திட்டமிட்டோம்.ஆனால் இரவு நேரம் என்பதால் மீண்டும் அவிலாஞ்சியில் சென்று தங்கினோம்.அடேங்கப்பா என்ன குளிர் என்கிறீர்கள்.மிக நல்ல குளிர்.

                                               திரு.செல்வராஜ் அவர்கள் நல்ல உதவி செய்தார்கள்.மீண்டும் காலை மிக சீக்கிரமாக கிளம்பி அவிலாஞ்சியில் இருந்து மசினகுடி நோக்கி சென்றோம்.அவிலஞ்சியில் காலை 6 மணிக்கெல்லாம் அதிகமான காட்டு எருமைகளை  மிக அருகில் கூட்டமாக கண்டோம். பிறகு செல்லும் வழியில் அதிகமான கேரட்,பீன்ஸ்,முள்ளங்கி தோட்டங்களையும்,அவற்றிக்கு தண்ணீர் பாய்ச்சும் இடங்களையும் பார்த்து ரசித்தோம்.ஊட்டி சென்று அங்கிருந்து மசினகுடிக்கு 36 கெண்டை  ஊசி வளைவுகளை மிக சிரமமபட்டு ,ஜாக்கிரதையாக கடந்து மசினகுடியில் காலை உணவு சாபிட்டோம். கெண்டை ஊசி வளைவுகளை கடந்து மசினகுடி அருகே செல்லும்போது அதிக அளவில் பாதையில் வேகத்தடைகள் உள்ளன.அந்த வேக தடைகள் எதற்காக என்றால் நடு ரோட்டில் அதிக அளவில் மான்கள் கூட்டம் செல்கிறது.நாங்களும் பார்த்தோம்.அவற்றின் பாதுகாப்புகாக இந்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது.மசினகுடியில் இருந்து சிங்கார-பைக்கார மின் நிலையம் நோக்கி சென்றோம்.அங்கு திரு.கருப்பையா அண்ணன் அவர்கள் நன்றாக உதவி செய்தார்கள்.பைக்கார மின் நிலையத்தில் அனைத்து பிரிவுகளையும் பார்த்து விட்டு , அங்கிருந்து 1932ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த மின் நிலையதிருக்கு சுமார் 64 வளைவுகள் தாண்டி இரண்டாவது விஞ்ச் இருக்கும் இடத்தில இருந்து எவ்வாறு டனல் வழியாக தண்ணீர் வருகிறது என்பதை பார்த்தோம்.மொத்தம் 4 விஞ்சுகள் வழியாக அதன் பராமரிப்பு நடைபெறுகிறது.அங்கு அடிக்கடி கரடி வரும் என்றும் தெரிவித்தனர்.மீண்டும் அதன் வழியாக வந்து 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள குகைக்குள் மின்சாரம் தயாரிக்கும் இடத்தை அனுமதி பெற்று பார்த்தோம்.அருமையான வாய்ப்பு.

                                 மீண்டும் பைக்கராவில்  இருந்து மோயார் சென்றோம்.செல்லும் வழியில் எராளமான மான்கள்,கட்டு எருமைகளை பார்த்தோம். திரு . கோவிந்தராஜ் என்பவர் உதவியுடன் மோயார் மின் நிலையத்தில் வித்தியாசமாக 640 அடியில் விஞ்ச் வழியாக சென்று ( அருமையான பயணம் ) நம்மை கீழ் நோக்கி தலைகீல்தாக விஞ்ச் அழைத்து செல்கிறது.அங்கு விஞ்ச் வழியாகதான் அனைவரும் தினசரி வேலைக்கு செல்கின்றனர்.அவ்வளவு அடியில் தான் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.அங்கு சென்றும் மின்சாரம் தயாரிப்பதை பார்த்தோம்.நல்ல பயணம்.மீண்டும் திரு.கருப்பையா அவர்களின் இல்லதிருக்கு வந்து அங்கு நல்ல உணவை சாப்பிட்டு இரவோடு வீடு திரும்பினோம்.

                                        நண்பர்களே ,ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்றாலும் நாம் எவ்வளவு கஷ்டபடுகிறோம்.ஆனால் அந்த மின்சாரம் தயாரிக்க மலைக்குள்ளும் ,காட்டுக்குள்ளும் எத்தனையோ பேர் தங்கள் குடும்பங்களை ஊரில் விட்டு,விட்டு தனியாக அங்கு இருந்து நமக்கு மின்சாரம் தயார் செய்து கொடுக்கின்றனர்.அதனில் முக்கியம் அடிக்கடி யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே நமக்காக அணைத்து உதவி செய்து வரும் மின்வாரிய ஊழியர்களுக்கும் வாழ்த்து சொல்வோம்.

லெ .சொக்கலிங்கம்,



 
 

                                     

No comments:

Post a Comment