Thursday, 26 May 2016

     சதத்தைத்  தாண்டியும் தொடரும் சாதனைகள்       
                                       தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  2015-2016 கல்வி ஆண்டில் சதத்தை தாண்டியும்  "கல்வி  மற்றும் சமுதாயம்" மேம்பாடு  தொடர்பான சுமார் 131 செயல்பாடுகள்  நடை பெற்றுள்ளன.



                               1) கல்வி ஆண்டின் முதல் நிகழ்வாக "கோடை விடுமுறையில் தேவகோட்டை   இறகுசேரி தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் குடியிருப்பு பகுதியில் கல்வியின் அவசியத்தையும்,  மாணவர் சேர்க்கையை வலியுறுத்தியும்" கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள் ,பாட்டுக்கள் வாயிலாக நடத்தப்பட்டது.

2) தேவகோட்டை நகர சிவன் கோவிலில் நடைபெற்ற "சேக்கிழார் விழா"வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் பரிசளிப்பு விழா- திருமுறை பாராயணம்  ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. ( மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தவர் திரு.பாகனேரி திருமுறை காவலர் மு.கண்ணப்ப செட்டியார் ,மங்கையர்க்கரசி நூற்பாலை,மதுரை )

3) "சுட்டி விகடனின் சுட்டி ஸ்டார் போட்டி" தேர்வில் கோடை விடுமுறையில் மே மாதம் காரைக்குடிக்கு 11 மாணவ,மாணவியரை ஆசிரியர் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி அழைத்து சென்று பங்கேற்க வைத்தல் 

4) "தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின்  மாணவர்களுக்கான போட்டி தேர்வான தேசிய வருவாய் வழிதிறன்" தேர்வில் ( மாதம் ரூபாய் 500 கிடைக்கும்) தமிழகம் முழுவதும் 3லட்சம் பேர்  தேர்வு எழுதியதில் 6995 பேர் தேர்வானதில் எம் பள்ளி மாணவர்கள் "நான்கு பேர் வெற்றி பெற்று சாதனை"  

****( ஈரோடு ரயில்வே பள்ளியின் ஆசிரியர் திரு.துரைபாண்டியன் மாதம் ஒரு முறை வந்து சிறப்பு வகுப்பு எடுத்தார்,மேலும் சனிகிழமை உட்பட பல்வேறு நாட்களில் சிறப்பு வகுப்புகளும் ,மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகளும் பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்பட்டது.)


5) கல்வி ஆண்டுக்கான முதல் "பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்"
( தலைமை : பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் )

6) "சுற்றுச் சுழல் மன்ற தொடக்க விழா" ( மரக்கன்றுகள் நடுதல் )  (தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )

7) "மத்திய அரசின் கல்பாக்கம்  முதன்மை அணு விஞ்ஞானி ஜலஜா மதன் மோகன்" அவர்களுடன் அணு மின் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் 

8) "தேவகோட்டை நகரத்தார் பாலதண்டாயுதபாணி சாரிட்டபிள் டிரஸ்ட் "சார்பாக நகர சிவன்கோவிலில் மகா மந்திர உபதேச அலங்கார மண்டபத்தில் நடைபெற்ற விநாடி வினா போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் பெறுதல்

9) "அயர்லாந்தின் டுப்ளிங் மாகாண பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆராய்ச்சியாளர் குமார்" அவர்களுடன் அயர்லாந்து தொடர்பான கல்வி,சுற்று சுழல் உட்பட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் கலந்துரையாடல் செய்தல்  

****(தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )


10) "நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர்"  சென்னையை சார்ந்த அறிவரசன் ஒரு  நாள் முழுவதும் எளிய  சோதனைகள் மூலம்   வாழ்வியல் அறிவியலை பள்ளிகளில் கற்பிக்கும் நிகழ்ச்சி
  
***( தலைமை : திருமதி .சுமித்ரா ரவிக்குமார் ,தலைவர்,நகராட்சி,தேவகோட்டை ,முன்னிலை :பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )

11) "தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் விளையாட்டு துறை சார்பாக" பள்ளி அளவிலான செஸ் (சதுரங்க ) போட்டி நடைபெறுதல் 

12) மாநில அளவில் சுட்டி விகடனின் "சுட்டி ஸ்டார்  பத்திரிக்கையாளராக" ஆக தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவி தனலெட்சுமிக்கு பாராட்டு விழா 

13)  "சுட்டி ஸ்டார்  பத்திரிக்கையாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டு அது தொடர்பான பயிற்சிக்கான  விழாவில்  சென்னைக்கு" பெற்றோர் செல்ல இயலாத சூழ் நிலையில் ( தாயார் வீட்டு வேலை பார்ப்பவர் ,தந்தை கூலி வேலை பார்ப்பவர் ) பள்ளி ஆசிரியை அரசு விடுமுறை நாளில்  மாணவியை சென்னை அழைத்து செல்லுதல் 

****( சிறப்பு விருந்தினர்கள் : நடமாடும் ஆய்வக அறிவியல் மனிதர் திரு.அறிவரசன் ,சக்தி விகடன் ஆசிரியர்,சுட்டி விகடன் பொறுப்பாசிரியர் திரு.கணேசன்,வேலூர் அறிவியல் அறிஞர் சிவக்குமார் )

14) "தமிழக அரசின் விளையாட்டு துறையின் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டி"களில் கலந்து கொள்ள  பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவ,மாணவியரை சிவகங்கை அழைத்து செல்லல் 

15) காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பான போட்டிகள் நடத்துதல்- பரிசுகள் வழங்குதல்

16) தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் "புத்தாக்க அறிவியல்
 ( INSPIRE AWARD) போட்டி"களில் கலந்து கொள்ள மாணவர்களை காரைக்குடிக்கு அழைத்து செல்லல்
 ( தலைமை : சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேலன் அவர்கள்  )



17) "தமிழக பள்ளி கல்வி  விளையாட்டு துறையின்  சார்பாக முப்பையூரில் நடைபெற்ற ஒன்றிய அளவில் மாணவர்"களுக்கான செஸ் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளல் 

18) முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவிற்கு பள்ளியில் ஆசிரியர்,மாணவர்கள் சார்பாக அஞ்சலி செலுத்துதல் 

19) "அகில இந்திய வானொலியான மதுரை வானொலியில் பல்சுவை நிகழ்ச்சிக்கு ஒலிபதிவு செய்வதற்கு மாணவர்களை" பெற்றோர் கூலி வேலை பார்ப்பதால் வர இயலாத சூழ்நிலையில் ஆசிரியர்களே மாணவர்களை காலை 5 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து மதுரை அழைத்து செல்லுதல்

20) "தேவகோட்டை சன்மார்க்க சங்கம்" நடத்திய ஒப்புவித்தல் போட்டியில் பங்கு கொள்ள மாணவர்களை  அரசு விடுமுறை நாளன்று அழைத்து செல்லல் 

21) "காரைக்குடி குறள்கழகத்தின் சார்பாக நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்குபெற" அரசு விடுமுறை நாளன்று பெற்றோர் கூலி வேலை பார்ப்பதால்  வர இயலாத சூழ்நிலையில் ஆசிரியர்களே காரைக்குடிக்கு மாணவர்களை அழைத்து செல்லல் 

22) "ஹிரோசிமா நாகசாகி தின ஓவிய போட்டி"யில் பங்கு பெற அரசு விடுமுறை நாளன்று மாணவர்களை ஆசிரியர்களே அழைத்து செல்லல் 

23)   புதிய தலைமுறையின் "வீட்டூக்கு ஒரு விஞ்ஞானி" அறிவியல் செயல் முறைகள் தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்ள சிவகங்கையில்  தேவகோட்டையில் இருந்து சிவகங்கைக்கு ஆசிரியரே அழைத்து செல்லல் 

24) "தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்றம்" நடத்திய ஓவியம்,ஒப்புவித்தல் மற்றும் பாட்டு போட்டிகளில் அரசு விடுமுறை நாளன்று ஆசிரியரே மாணவர்களை அழைத்து செல்லல் 

25)   CECRI மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்


  "மத்திய அரசின் காரைக்குடி  மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் ( CECRI) முதன்மை விஞ்ஞானி ( முனைவர் .ஜெயச்சந்திரன் ) மற்றும் 3 மத்திய அரசின் விஞ்ஞானிகள்"  மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவில் இப்பள்ளியில் குழுவாக  வருகை தந்து செயல் முறை விளக்கம் கொடுத்ததுடன் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடியதும் இதுதான் முதல் முறை

 (தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )


26) சுதந்திர தின விழாவில் "கலை நிகழ்ச்சி"களில்  சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி.மலர்விழி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு "பாராட்டு,விருது  மற்றும் சான்றிதள்  வழங்குதல்" 

27) "கோவிலூர் மடாலயத்தில்" நடைபெற்ற ஓவியம்,வண்ணபூச்சு போட்டிகளில் கலந்து கொள்ள தேவகோட்டையில் இருந்து காரைக்குடி அருகே உள்ள கோவிலூருக்கு மாணவர்களை ஆசிரியர்களே அழைத்து செல்லல் ( தலைமை : கோவிலூர் ஆதீனம் தவத்திரு.மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் )

28) தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக "அணு ஆயுதத்தால் அகதிகளாய் குழந்தைகள்" என்கிற தலைப்பில் பள்ளி அளவிலான ஓவிய போட்டி நடத்துதல்- பரிசு வழங்குதல் (தலைமை : திரு.ஜீவானந்தம் ,மாவட்ட செயலர் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,சிவகங்கை மாவட்டம்  )

29) "மத்திய அரசின் விஞ்ஞானிகள் தகவல் தொடர்புக்கு உதவியாக ஜி சாட் -6 செயற்கைக்கோள்" வெற்றிக்கு பலூன் விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டும் நிகழ்வு 

30)  "மத்திய அரசின் அஞ்சல் துறையின் தேசிய அளவிலான" குழந்தைகள் தினத்தை ஒட்டி"மழையில் ஒரு நாள்" தலைப்பில் ஓவிய போட்டி 

31)  "கோவிலூர் மடாலயத்தில் நடைபெற்ற திரு அருட்பா பாட்டு"  போட்டிகளில் கலந்து கொள்ள தேவகோட்டையில் இருந்து காரைக்குடி அருகே உள்ள கோவிலூருக்கு மாணவர்களை ஆசிரியர்களே அழைத்து செல்லல்

**** ( தலைமை : கோவிலூர் ஆதீனம் தவத்திரு.மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் )

32) "அறிவியல் பாடல் ஒப்புவித்தல் போட்டி" - பரிசளிப்பு விழா 
(தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )


33) "எல்.ஐ.சி.யின் 59வது காப்பீட்டு வார விழாவினையொட்டி" தேவகோட்டையில் நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ளல் - பரிசு வழங்கல்

34) "தேவகோட்டை AL.AR. சோமநாதன் செட்டியார் 109வது பிறந்த நாள் விழாவினையொட்டி நடைபெற்ற திருபல்லாண்டு ஒப்புவித்தல் போட்டி"களில் மாணவர்கள் பங்குபெற்று பரிசு பெறுதல்

*** ( திரு.ஜமீன்தார் நாராயணன் செட்டியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு - கலந்து கொண்ட அணைத்து மாணவர்களும் வெற்றி பெற்று ஜமின்தார் கைகளால் பரிசு பெற்றனர் )

35) "தி இந்து தமிழ் நாளிதழின் மாயாபஜார் பகுதி"யில் வெளியான மாணவர்களுக்கான "மனதில் நின்ற கலாம் "என்கிற தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் மாணவர்கள் பங்கு பெறுதல் 

36) "மத்திய அரசின் எரி சக்தி துறை"யின் தேசிய அளவிலான  ஓவிய போட்டி நடத்தி பரிசு வழங்குதல் விழா 

37) "சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரத்தில் உரையாற்றிய தின"த்தை முன்னிட்டு அவரது பெயரால் சேமிப்பும்,சேவையும் திட்ட துவக்க விழா சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நடைபெறுதல் 

****( தலைமை : திரு.இராமச்சந்திரன் ,தலைமை தபால் அதிகாரி ,தேவகோட்டை)

38)  "55ம் ஆண்டு  மகாகவி பாரதி விழாவில் ஓவியம்,ஒப்புவித்தல் மற்றும் பாட்டு போட்டி"களில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியரை அரசு விடுமுறை நாளன்று நடை பெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஆசிரியரே மாணவர்களை அழைத்து செல்லுதல் 

39) "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தேவகோட்டை  இறகுசேரி தொட்டிய நாயக்கர் சமுதாய" குடும்பங்களுக்கு  பள்ளி மாணவர்கள் உதவுதல் ( தலைமை : தேவகோட்டை இறகுசேரி தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர் முருகன் மற்றும் பாண்டியன் )

40)   "புதிய தலைமுறை தொலைக்காட்சியின் படப்பிடிப்பு இப்பள்ளியில் நடைபெறுதல்" 

****( தேவகோட்டை நகராட்சி தலைவர் திருமதி. சுமித்ரா ரவிக்குமார் , 
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் பேரா .முனைவர் சந்திரமோகன் , CECRI முதன்மை விஞ்ஞானி முனைவர் .ஜெயச்சந்திரன் ,
பாண்டியன் கிராம வங்கியின் மண்டல தலைவர் திரு.சபாரத்தினம் , 
முன்னாள் கனரா வங்கி மேலாளர் தேவகோட்டை அய்யப்பன், 
60 க்கும் மேற்பட்ட பெற்றோர்,முன்னாள் மாணவர்கள்,அனைத்து ஆசிரியர்கள் ஞாயிற்று கிழமையன்று பள்ளிக்கு வந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுத்தனர் )

41) "பள்ளியின் தலைமை ஆசிரியர் புதிய தலைமுறை குழுமத்தின் ஆசிரியர் விருது - 2015  சென்னை விழாவில் பெறுதல்" ( புதிய தலைமுறை CEO திரு .ஷ்யாம் சுந்தர் மற்றும் புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன் ஆகியோர் விருதினை வழங்கினார்கள் )

****( இந்நிகழ்வில் எனது அழைப்பை ஏற்று  சென்னை விழாவில்  தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரமோகன் , அவரது நண்பர் சென்னை விவேகானந்தா கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் சாமிநாதன்,  சுட்டி விகடன் பொறுப்பு  ஆசிரியர் திரு.கணேசன், தினத்தந்தி இணைப்பு பகுதிகள் உதவி ஆசிரியர் திரு.பழனியப்பன்,புதிய ஆசிரியன் என்கிற மாத இதழின் ஆசிரியரும்,ஓய்வு பெற்ற பேராசிரியருமான திரு.ராஜு, சென்னை இந்தியன் வங்கி அதிகாரியும் , பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுபவருமான திரு.எஸ்.வி.வேணுகோபாலன்,முகனூல் மூலம் புதிதாக சில நாட்களுக்கு முன்பு சந்தித்து முகனூல் வாயிலாகவே எனது அழைப்பை ஏற்று மதுரையில் இருந்து இந்த நிகழ்வுக்காக மட்டுமே வந்திருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.கோபாலகிருஷ்ணன்,சென்னை DPI கல்வி அலுவலர்  திரு.ஆனந்தன், HDFC வங்கி பெண் அதிகாரி திருமதி .மீனாள் ,சென்னை இந்தியன் வங்கியின் அதிகாரியும் , எனது மூத்த  மாமனாருமான திரு.முத்து கருப்பன்,  வணிக வரி துறையின் சென்னை அலுவலகத்தின் கண்கணிப்பாளர் திரு.நாகலிங்கம் , எங்கள் பள்ளி ஆசிரியர் திரு.சோமசுந்தரம்,ஆசிரியை முத்து மீனாள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் )

42) "தமிழ்நாடு அறிவியல் இயக்க"த்தின் சார்பாக முன்பு நடைபெற்ற மகளிர்தின போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 

43)  "கோவிலூர் ஆதினம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பரிசளிப்பு விழா"வில் பரிசு பெறுவதற்காக தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு ஆசிரியர் அழைத்து செல்லுதல் ( தலைமை : கோவிலூர் ஆதீனம் தவத்திரு.மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் )



44) தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் திட்டமான "பகிர்தலில் மனமகிழ்வு வாரவிழா ( JOY OF GIVING WEEK)"  தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துதல்  

***இப்பள்ளி   மாணவர்கள் தீயினால் பாதிக்கப்பட்ட  தேவகோட்டை இறகுசேரி தொட்டிய நாயக்கர் சமுதாய பகுதிக்கு சென்று தன்னம்பிக்கையுடன் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து நாடகம் , பாடல்,நாட்டியம்,பேச்சுகள் மூலமாக பகிர்தலில் மனமகிழ்வு வார விழா நிகழ்வினை நடத்துதல் 

45) "திருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் குழுவினர் மூலம்  கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை நடத்துதல்" 

***( இப்பயிற்சியில் ஒரு நாள் முழுவதும் கதை சொல்லுதல்,நாடகம் எவ்வாறு இயக்குவது,நடிப்பது,தன்னம்பிக்கையுடன் பேசுவது ஆகியவை குழுவாக பிரித்து மாணவர்களுக்கு கற்று தரப்பட்டது)  
(தலைமை : திருமதி லெட்சுமி தேவி,உதவி தொடக்க கல்வி அலுவலர் ,தேவகோட்டை)

46)  "தினமலர் பத்திரிக்கையின் சார்பாக அப்துல் கலாம் பிறந்த நாளை" முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம்,கட்டுரை போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டன 

47) பள்ளி தலைமை ஆசிரியருக்கு "தினமலர் லட்சிய ஆசிரியர் 2015  விருது" மதுரை தினமலர் அலுவலகத்தில் மதுரை முதன்மை கல்வி அலுவலர் திரு.அஞ்சேலோ இருதயசாமி மற்றும் தினமலர் மதுரை கிளையின் செய்தி ஆசிரியர் திரு.ரமேஷ்குமார் ஆகியோரால் வழங்குதல்


48)  "அகில இந்திய வானொலியான கோடை பண்பலை வானொலி"யில் அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பில்  மாணவர்கள் பங்கேற்பு 

49) "தபால் அலுவலக நடைமுறைகள் எப்படி?"  என்பதை தேவகோட்டை  தலைமை தபால் அலுவலகத்துக்கு மாணவர்களை  கலப்பயணமாக நேரடியாக அழைத்து சென்று விளக்குதல் 

****( தலைமை தபால் அதிகாரி திரு.ராமசந்திரன் மற்றும் அலுவலர் தன்ராஜ் ஆகியோர் தபால் அலுவலகத்தின் அனைத்து பிரிவுகளையும் தெளிவாக விளக்குதல் )

50) அப்துல் கலாம் பிறந்த நாளை "இளைஞர் எழுச்சி நாளாக" கொண்டாடுதல் விழா 

51)   "பகிர்தலில் மன மகிழ்வு வார விழாதொடர்ச்சி"
* கற்றலில் குறைபாடு உள்ள மாணவிக்கு மற்றொரு மாணவி வீட்டிற்கே சென்று எழுத்து கற்று கொடுத்து  உதவிய 5ம் வகுப்பு மாணவி காயத்ரி

*சந்தையில்  மன நிலை சரியில்லாமல் சுற்றி திரிந்த பெண்மணியின் ஆடை சரியில்லாமல் கிழிந்த நிலையில் இருந்ததை பார்த்து உடனடியாக வீட்டுக்கு சென்று மாற்று  உடை மற்றும் உணவு வழங்கிய 8ம் வகுப்பு மாணவி சௌமியா 

*வீட்டின் அருகே பொது நல ஆர்வலர் வைத்து உள்ள செடிகளுக்கு தண்ணீர் தொடர்ந்து ஊற்றி வரும் 7ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி 

ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கும் விழா ( தலைமை : திருமதி .லெட்சுமி தேவி ,உதவி தொடக்க கல்வி அலுவலர் ,தேவகோட்டை )

52) "கோவிலூர் ஆதினம் சார்பாக கோவிலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி"யில் அரசு விடுமுறை நாளன்று ஆசிரியர்களே அதிகாலையில் கிளம்பி மாணவர்களை தேவகோட்டையில் இருந்து காரைக்குடி அழைத்து சென்று பங்கேற்க வைத்தல் 

53)  "விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி?" தேவகோட்டை தீயணைப்பு  அதிகாரி நேரடி செயல் முறை விளக்கம் 

***(  தீயணைப்பு அதிகாரி திரு.கருப்பையா மற்றும் உதவியாளர்கள் உடன் பட்டாசு வெடித்து தீயணைப்பு தொடர்பாக நேரடி செயல் விளக்கம் )

54)  "JCI இன் சர்வதேச பயிற்சியாளர் பேரா .RM.ராமநாதன்
 ( முன்னாள் அரசு பொறியியல் கல்லூரியின் துறை தலைவர் )" அவர்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும்,சத்துணவு பணியாளர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்,பொதுமக்களுக்கும் -"கூட்டு முயற்சி மற்றும் நிதி நிலை மேம்பாடு தொடர்பான பயிற்சி" வழங்குதல்

**** ( தலைமை : திரு .அடைக்கலராஜ் ,உதவி தொடக்க கல்வி அலுவலர் ,கண்ணங்குடி )

 * பேரா .RM.ராமநாதன் அவர்களால் மாணவர்களுக்கும் ஆளுமை திறன் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது

55) "ஆனந்த விகடன் மற்றும் நடிகர் ராகவா லாரென்ஸ் இணைந்து ஏற்படுத்திய சமுதயாதுக்கு உதவி செய்யும் அறம் செய விரும்பு திட்ட"த்தில் தமிழ்நாடு அளவில் 100 பேருக்குள் ஒருவராக பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டதற்கு காரைக்கால் வானொலி சிறப்பு சொற்பொழிவாளர் சொக்கலிங்கம்  பள்ளியில் பாராட்டு தெரிவிக்கும் விழா 

56)  "நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சேனலில்" பள்ளி மாணவி தனலெட்சுமி தொடர்பாக ஒலிபதிவு செய்தல் நிகழ்வு 

57)  "தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின்  கோவிலான தேவகோட்டை சிலம்பனி சிதம்பர விநாயகர் கோவில் உண்டியல் என்னும் பணியில்" பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு சான்றிதழ் பெறுதல் 

****(சான்றிதழ் வழங்கியவர் : திரு.பாலதண்டாயுதம் , செயல் அலுவலர்,சிலம்பனி சிதம்பர விநாயகர் கோவில்,தேவகோட்டை)

58) "சென்னை அக்னி கல்வி நிறுவனங்களின்" சார்பாக காரைக்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில்  பங்குபெற்று ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ள இப்பள்ளி  6ம் வகுப்பு மாணவி காவியாவுக்கு  பாராட்டு விழா 

59)  "நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  1ம் ஆண்டு நிறைவு  பேச்சு போட்டியில் மதுரையில் " முதல் கட்ட தேர்வில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமிக்கு பாராட்டு விழா 
( அரசு விடுமுறை நாளன்று காலை 5.30 மணி அளவில் ஆசிரியர்களே மாணவ ,மாணவியரை மதுரைக்கு போட்டிக்கு அழைத்து செல்லல்)

60) "தேவகோட்டை எல் .ஐ.சி.சார்பில் பள்ளி"யில் சிறந்த மாணவர்களுக்கான "விருது வழங்கும் விழா" ( தலைமை : திரு.மோகன சுந்தரம் ,கிளை மேலாளர் ,தேவகோட்டை, முன்னிலை : திரு.தமிழரசு ,வளர்ச்சி அதிகாரி ,LIC,தேவகோட்டை )

61)  "விஜயதசமி விழா- மாணவர் சேர்க்கை விழா"
 நெல்மணிகளில்  மாணவர்களை "அ" கரம் எழுத வைத்தல்


62) "தஞ்சாவூர் மாவட்டம் திருகருகாவூரில்
அப்துல்  கலாம் அவர்களின் நினைவாக அக்னி சிறகுகள்  அறகட்டளை" என்ற அமைப்பின் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியதற்கு பள்ளியில் பாராட்டு விழா 

63) "தி இந்து தமிழ் வாசகர் திருவிழா" (இராண்டாம் ஆண்டு) காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களும் ,ஆசிரியரும் அரசு விடுமுறை நாளன்றும் கலந்து கொள்ளும் நிகழ்வு 

64)  மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு இறுதி சுற்றில் "வெற்றி  பரிசாக  ரூபாய் 5,000 பணமும்,சான்றிதழும் 7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி   பெறுதல்" 
 ( நியூஸ் 7 சேனலின்  தலைமை செய்தி ஆசிரியர் திரு. பகவான் சிங் , இந்தியா டுடே பத்திரிக்கையின் செய்தியாளர் கவிதா ,பத்திரிகையாளர் நூருதீன் ஆகியோர் பரிசினை வழங்குதல் )

65)  "தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடத்துதல்"
(தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )

66)  "தேசிய வருவாய் வழி மற்றும் திறன் போட்டி  தேர்விற்கான மனத்திறன் கணக்கிற்கான சிறப்பு பயிற்சி" நடத்துதல் - பயிற்சி வகுப்பு நடத்தியவர் திரு.ஈரோடு துரை பாண்டியன் , ரயில்வே பள்ளி,ஈரோடு .

67) a)தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் பள்ளி மாணவி தனம் அவர்கள் "பரம் பொருளின் வடிவம் என்கிற தலைப்பில்  சொற்பொழிவு நிகழ்த்துதல்"

b) தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவில் பள்ளி சார்பாக மாணவியர் "இறைவணக்க பாடல் பாடுதல்"

c)  தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவில் பள்ளி சார்பாக "பள்ளி மாணவர்களின் பல்சுவை  கலை நிகழ்ச்சிகள்"

 ( ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 1மணி நேர நிகழ்ச்சிகளை முழுவதும் 5ம் வகுப்பு மாணவியே தொகுத்து வழங்குதல்,ஆங்கில நாடகம்,பொம்மலாட்டம்,1ம் வகுப்பு ,2ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில,தமிழ் பேச்சு,நாட்டியங்கள் ,நடனங்கள் என கல்வி தொடர்பாகவும்,சமுதாயம் தொடர்பாகவும் நிகழ்ச்சிகள் ) 

d) தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் இந்த ஆண்டு புதியதாக நடத்தப்பட்ட குழந்தை தேவாரம் ஒப்புவித்தல் வினாடி வினா நிகழ்ச்சியில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெறுதல்
( பரிசு வழங்கியவர்கள் : திரு.நடேசன்,தலைவர்,மற்றும் திரு.ராகவேந்திரன் ,செயலர் ,கந்த சஷ்டி கழகம்,தேவகோட்டை) 
(இந்நிகழ்ச்சி ஏற்பாடு .திருமதி .சித்ரா ஆச்சி ,தேவகோட்டை)

68)  "பறவைகள்  அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயற்சி"  
(  பறவைகள் தொடர்பாக மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தொலைக்காட்சி படங்களின் வாயிலாக விளக்கங்களை எடுத்து கூறியவர் பறவைகள் ஆர்வலர் பிரசன்னா மணிவண்ணன் , காரைக்குடி )

69)  "கழிவிலிருந்து செல்வம் கண்காட்சி"- அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் வீனாவதிலிருந்து செலவு எதுவும் இல்லாமல் நல்ல பொருள்கள் தயாரித்து  பயன்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது.
( தலைமை :
திருமதி லெட்சுமி தேவி,உதவி தொடக்க கல்வி அலுவலர் ,தேவகோட்டை)

70) "மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை"யால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி


71)  வங்கி நடைமுறைகள் குறித்து படிவங்கள் பூர்த்தி செய்தல்,ATM இயக்குவது,இயந்திரத்தின் வழியாக பணம் போடுவது,வங்கியில் உள்ள கடன்கள் பெறுவது ,சேமிப்பு தொடர்பான தகவல்கள் , மாணவர்களின் கேள்வி பதில்கள்   என அனைத்தையும் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் வங்கி அலுவலர் திரு.முருகன் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறுதல் )
வங்கியில்  படிவம் இல்லாமல்  கிரீன் கார்டு மூலம் பணம் செலுத்துவது  எப்படி?
கிரீன் கார்டு என்றால் என்ன?
  வங்கி நடைமுறைகள் எப்படி? பாரத ஸ்டேட் வங்கியில் நேரடி களப்பயனமாக மாணவர்கள்  அறிந்து கொள்ளல்
( தலைமை : வங்கி மேலாளர் : திரு. இன்பசேகரன் ,SBI ,தேவகோட்டை )

72)  "சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் ( தலைமை  மற்றும் மாற்று திறனாளிகள் தொடர்பாக சிறப்பு பேச்சு : பேரா . வீரலட்சுமி ,துறை தலைவர் ,தாவரவியல் துறை, NSS  ஒருங்கிணைப்பாளர் ,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி ,தேவகோட்டை)



73)  "தமிழக அரசின் சுகாதார துறையின் தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்" ( தொழு நோய் தொடர்பாக விளக்கமாக கூறி மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில்கள் கூறி அனைத்து மாணவர்களையும் உடல் முழுவதும் சோதனை செய்தவர்கள் சுகாதார துறையின் சிவகங்கை மாவட்ட தொழுநோய் மேற்பார்வையாளர்கள் திரு.சாகுல் ஹமீது , திரு.சந்தான கிருஷ்ணன் )

74) "தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக" நடைபெற்ற வரைந்து வண்ணம் தீட்டுதல்,தனி நடனம்,குழு நடனம் போட்டிகளில் அரசு விடுமுறை நாளன்று ஆசிரியர்கள் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்ற  பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா 

75) "அகம் ஐந்து ,புறம் ஐந்து" என்ற தலைப்பில்
மாணவர்களுக்கான ஆளுமை பயற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான ஆளுமை பயிற்சி முகாம்  

( பயிற்சி அளித்தவர் : மதுரை மண்டல பயிற்சியாளர் JC.தயானந்தன் .நிகழ்ச்சி ஏற்பாடு : நிகில் பௌண்டேசன்,மதுரை. )

76) " பள்ளியில் படிக்கும்  வளர் இளம் பெண்கள்  எவ்வாறு தன் சுத்தம்,தன் உடலை சுகாதாரமாக வைத்து கொள்வது,நலம் பேண வேண்டும்? 

 "பள்ளி மாணவிகள் ,பெற்றோர்கள்,ஆசிரியைகள் ஆகியோருக்கு மருத்துவர் வீடியோ படங்கள் கொண்டு 3மணி நேரத்திற்கு மேலாக நேரடியாக மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல் (மருத்துவர் : காரைக்குடியை சார்ந்த டாக்டர் பார்கவி மணிவண்ணன் )

77)  "தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் 
செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ்.  அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல் "

( 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஐ.ஏ .எஸ்.  அவர்களுடன் நேரடியாக சுமார் 21/2 மணி நேரம் கேள்விகள் கேட்டு பதில்கள் பெறுதல் ) 

( ஐ.ஏ .எஸ்.  அவர்களுடன் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன்,மத்திய கிழக்கு பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகன்னநாதன் ,கோவில்பட்டி கல்வி நிறுவனங்களின் அதிபர் நாகஜோதி,சென்னை குணசேகரன் ,வேளாண்மை துறை அதிகாரிகள் மதுரை மண்டல அதிகாரி ஸ்ரீதரன் ,சிவகங்கை மாவட்ட அதிகரி இளங்கோ,திரு ரமேஷ்,காவல் ஆய்வாளர் ,நகர் காவல் நிலையம்,தேவகோட்டை ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்)

* இந்நிகழ்வின் தொடர்ச்சியாக ஐ.ஏ .எஸ்.  அவர்கள் பள்ளியில் நூலகத்தை திறந்து வைத்தார்கள்.

78) "சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்" மாணவர்களின் சேமிப்புடன் ஆசிரியர்களும் இணைந்து வெள்ள நிவாரணம் அனுப்புதல் நிகழ்வு 

79)  "FA செஞ்சாங்க ! ஜெயிச்சாங்க ! சுட்டி விகடன் சார்பாக நடைபெற்ற FA செயல் விளக்க மாதிரிகள் செய்து அசத்திய மாணவர்களுக்கு சுட்டி விகடன்" சார்பாக சான்றிதள்களும் , பள்ளிக்கு புத்தகங்கள்  பரிசாக வழங்கப்படும் விழா 

 (தலைமை : பேரா . முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )

80)  "ஜெர்மன் நாட்டை சார்ந்த பெண் தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரம்மர் மாணவர்களுக்கு வாழ்வியல் விழிப்புணர்வு பயிற்சி அளித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்

 ( சுமார் 3மணி நேரம் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தார் ) (  சிறப்பு பயற்சியாளர் :ஜெர்மன் நாட்டின் கணினி துறையின் பொறியாளர் , தமிழ் வழி மரபு அறகட்டளையின் தமிழ் மொழி கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரம்மர் மாணவர்களுடன் ஜெர்மன் நாட்டு கல்வி,கலாச்சாரம்,உணவு,சீதோசன நிலைகள்,வேளாண்மை ,கல்லூரிகள்,பள்ளிகள் தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.முன்னிலை : திருமதி யோக லெட்சுமி ,முதல்வர்,அழகு மலர் பள்ளி,சிவகங்கை ,மற்றும் LIC வளர்ச்சி அதிகாரி வினை தீர்த்தான் அவர்கள் )  

(தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )

81)  "ஓய்வறியா  கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா" 

 ( ஒரு ஆண்டு முழுவதும் எந்தவிதமான விடுமுறையும் எடுக்காமல்  பள்ளிக்கு வந்த ஆசிரியை திருமதி .முத்து மீனாள் ஆசிரியைக்கு  அவரது பணியை பாராட்டி விருது வழங்குதல் ) 

  ( தலைமை : திருமதி .லெட்சுமி தேவி ,உதவி தொடக்க கல்வி அலுவலர் ,தேவகோட்டை. முன்னிலை பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை ) 

82) "காந்திய கிராம சமூக சேவா சங்கம் சார்பாக "காந்தி இன்று தமிழகம் வந்தால்" என்ற தலைப்பில் தேவகோட்டை டி பிர்டோ பள்ளியில் நடைபெற்ற  கலை நிகழ்ச்சி போட்டிகளில்   பள்ளி மாணவர்கள் பங்கேற்பு 

83)  "தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் திருச்சி மண்டலம்"  சார்பில் திருச்சி தேசிய  அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓவிய போட்டியில் காலை 5 மணிக்கே ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் தேவகோட்டையில் இருந்து  திருச்சி  சென்று பங்கேற்றல் - மண்டல அளவில் வெற்றி பெற்று பரிசு பெறுதல் 
( பரிசு வழங்குபவர் : திருச்சி தேசிய  அண்ணா கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் : திரு.லெனின் தமிழ் கோவன் )

84தேவகோட்டை "சௌபாக்கிய துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டி"யில் அரசு விடுமுறை நாளன்று மாணவர்களை ஆசிரியர் அழைத்து சென்று பங்கேற்க வைத்து பரிசு பெறுதல் 

( பரிசு வழங்கியவர்கள் : திருமதி .சுமித்ரா ரவிகுமார், தலைவர் ,நகராட்சி,தேவகோட்டை. மற்றும் திரு. ரமேஷ் ,ஆய்வாளர்,நகர் காவல் நிலையம் ,தேவகோட்டை )

85) "தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறையின் சார்பாக  தேவகோட்டை வட்டார அளவில்" நடைபெற்ற  
( அரசு விடுமுறை நாளன்று)  பாவை விழா ஒப்புவித்தல் போட்டிகளில் ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் பங்கு கொண்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு வெற்றி  பெறுதல் 

( தலைமை : திரு.பாலதண்டாயுதம் , செயல் அலுவலர்,சிலம்பனி சிதம்பர விநாயகர் கோவில்,தேவகோட்டை.பரிசு வழங்கியவர் தினமலர் நிருபர் திரு.தெய்வசிகாமணி ,தேவகோட்டை) 

86) காரைக்குடியில் நடைபெற்ற "திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்வில் திருக்குறள் நாட்டியம் ஆடி  மாணவியர் பரிசுகள் பெறும் விழா" 
 ( தலைமை : திரு.சுப்பையா , துணை வேந்தர்,அழகப்பா பல்கலைகழகம், காரைக்குடி . பரிசு வழங்கியவர் ; திரு .தங்கமூர்த்தி , புலவர் ,புதுகோட்டை, மற்றும் பேரா . பாண்டி , துறை தலைவர்,தமிழ் துறை, அழகப்பா பல்கலைகழகம், காரைக்குடி )

87"திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி"களில் ஆசிரியர் உதவியுடன் தேவகோட்டையில் கிளம்பி திருச்சி சென்று மாணவர்கள் பங்கு பெற்று பரிசு பெறுதல் 
( பரிசு வழங்குபவர் : தமிழ்நாடு அறிவியல் மையத்தின் மாநில இயக்குனர் திரு.அய்யம் பெருமாள் மற்றும் தேசிய அருங்காட்சியக முன்னாள் தலைமை இயக்குனர் இந்திர குமார் முகர்ஜி ஆகியோர் இணைந்து பரிசு வழங்கினார்கள் ) 

88) "பேனா பிடிக்கலாம் ! பின்னி எடுக்கலாம் ! சுட்டி ஸ்டார் பத்திரிக்கையாளர் இப்பள்ளி மாணவி தனலெட்சுமிக்கு சுட்டி விகடன் வழங்கிய படத்துடன் கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் ) வெளியீடு மற்றும் தன் படத்துடன் கூடிய  கப்" ஆகியவற்றுடன் நல்ல பயிற்சியும் சென்னையில் வழங்கப்பட்டது .

( சிறப்பு பயிற்சி வழங்கியவர்கள் :சேலம் திரு.வேல் பாரி, ஆளுமை பயிற்சியாளர் மற்றும் மந்திரமா? ,தந்திரமா?  அறிவியல் செயல்முறைகள் செய்து காண்பித்தல் ) ( ஆசிரியை பள்ளி அரசு விடுமுறை நாளன்று மாணவியை தேவகோட்டையில் இருந்து சென்னை அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது )

89)  "தி ஹிந்து ஆங்கில நாளிதழ் சார்பாக மதுரையில்  நடைபெற்ற ஓவிய போட்டி"யில் இப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் காலை 5.45 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து மதுரை சென்று பங்கேற்று சான்றிதழ் பெறுதல்

 ( இபோட்டிகளில் பங்கேற்க இணைய தளம் (ONLINE ) வழியாக விண்ணபித்து அவர்களில் இருவரை தி இந்து ஆங்கில  நாளிதழ் தேர்வு செய்து அவர்கள்தான் மதுரை போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது )

90) "தேசிய வாக்காளர் தின விழாவில் மாணவர்களுடன் துணை ஆட்சியர் கலந்துரையாடல்"
  ( மாணவர்களுக்கும்,திரளான பெற்றோர்க்கும் பல்வேறு வாக்காளர் தினம் தகவல்களை எடுத்து கூறியதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில்கள் கூறியவர் திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் .IAS , தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக நடைபெற்ற ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியவர் திரு.பிச்சை மைதீன்,மேலாளர்,நகராட்சி,தேவகோட்டை.வாக்காளர் தினம் தொடர்பாக  இலவசம் எதுவும் பெறாமல் வாக்களிப்பதை வலியுறுத்தி நாடகம்,நாட்டியம்,பாடல்,கவிதை , உரை நிகழ்த்திய மாணவ,மாணவியர்க்கு துணை ஆட்சியர் பரிசுகள் வழங்கினார் )

91) "தமிழக அரசின் விளையாட்டு துறை"யின் சார்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக உடற்கல்வி மைதானத்தில் நடைபெற்ற உலக திறனாய்வு விளையாட்டு போட்டிகளில் எம்பள்ளி மாணவர்கள் பங்கு பெறுதல்

92) "தேவகோட்டை எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான பொது  மருத்துவ  முகாம்
( மருத்துவ முகாமில் அனைத்து மாணவர்களுக்கும் உடல் பரிசோதனை செய்தவர் .மருத்துவர் திரு.ஏழுமலை . தலைமை : தேவகோட்டை LIC கிளையின் மேலாளர் திரு.மோகன சுந்தரம்,முன்னிலை : திரு.தமிழரசு,திரு.பெரியசாமி , வளர்ச்சி அதிகாரிகள் ,தேவகோட்டை)

93) "தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறை"யின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற பாவை விழா ஒப்புவித்தல் போட்டியில் ஆசிரியர் உதவியுடன் தேவகோட்டையில் இருந்து சிவகங்கை சென்று "மாவட்ட அளவில் போட்டியில் கலந்து கொண்டு  1ம் வகுப்பு மாணவி ஜெய ஸ்ரீ முதலிடம் பெற்று பரிசு பெறுதல்
( பரிசு வழங்கியவர் : இந்து சமய அறநிலைய துறையின் உதவி இயக்குனர் )

94) "தேசிய இளைஞர் தின விழா" 
( பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் தொடர்பாக எடுத்துரைத்தல் , அவரது பொன் மொழிகளை மாணவர்கள் சொல்லுதல்)

95)  "குடியரசு தின விழா
( தலைமை : தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தமிழ் துறை தலைவர் பேரா . பழனி ராகுலதாசன் அவர்கள் நமது உரிமைகள் தொடர்பாகவும்,ஜனநயாகம் தொடர்பாகவும் பேசுதல் - போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் )

96)  "தமிழக அரசின் சுகதார துறை"யின் சார்பாக "தேசிய குடற்புழு நீக்க தினம்"- பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா

 

97) "விடுதலை போராட்ட வீரர்  தேவகோட்டை KM.சுப்பையா 98 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா" 

 ( பரிசு வழங்கியவர் : குன்றக்குடி ஆதினம் அவர்களின் உதவியாளர் திரு.பரமகுரு மற்றும் தேவகோட்டை மூத்த  நிருபர் சூறாவளி லெட்சுமணன் அவர்கள் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடு : திரு.தெய்வசிகாமணி,நிருபர்,தினமலர்,தேவகோட்டை)

 

98) "காரைக்குடி கம்பன் கழகம்" சார்பாக காரைக்குடி  கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கம்பராமாயண போட்டியில் அரசு விடுமுறை நாளன்று ஆசிரியரே மாணவர்களை காரைக்குடிக்கு அழைத்து செல்லல் 

( தலைமை : திரு.பழ .பழனியப்பன்,நிறுவனர் ,கம்பன் கழகம் ,காரைக்குடி )

 

99) "முத்தமிழ் வேத திருச்சபை" தேவகோட்டையில் நடத்திய "தேவாரம்   ஒப்புவித்தல் போட்டி"யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

 ( தலைமை :திரு.சோம வள்ளியப்பன்,பரிசு வழங்கியவர். கல்வியாளர்   ஜமீன்தார் திரு.ராமகிருசணன் ,தேவகோட்டை )

 

100)  மதுரையில் நடைபெற்ற "தி இந்து தமிழ் பத்திரிக்கை மகளிர் தின விழாவில்" பள்ளி மாணவியரின் திருக்குறள் , அபிராமி அந்தாதி நாட்டிய நடனம் 

( காலை 5மணிக்கு பெற்றோர் வர இயலாத நிலையில் ஆசிரியை அரசு விடுமுறை நாளன்று மாணவிகளை மதுரை அழைத்து சென்றார். மதுரை IG திரு.முருகன், மதுரை பாத்திமா கல்லூரி முதல்வர் உட்பட பார்வையாளர்கள்,பொதுமக்கள் ,பத்திரிக்கையாளர்கள் அனைவரும் திருக்குறள்  நாட்டியம் புதுமையாக இருந்தததாக வாழ்த்துதல்   )


101) "தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை  கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு  மாணவ,மாணவியரை ஆய்வகங்களை அறிந்து கொள்ள அழைத்து செல்லல்" 

( ஒரு நாள் முழுவதும் விலங்கியல்,தாவரவியல்,இயற்பியல்,வேதியியல்  ஆய்வகங்களையும் நேரடியாக சோதனைகளை செய்து பார்த்தும் ,மூலிகை தோட்டம்,கல்லூரி நூலகம் ஆகியவற்றை கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் ,மாணவர்கள் ஒத்துழைப்புடன் நன்றாக அறிந்து கொள்ளல் - தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அழைத்து செல்லல் ) 

 

102) "தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பாக" திருச்சியில் நடைபெற்ற ஓவிய போட்டி மற்றும் அறிவியல்  வினாடி வினா போட்டியில் ஆசிரியரே மாணவர்களை காலையில் 5.30 மணிக்கெல்லாம்  தேவகோட்டையில் இருந்து திருச்சிக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க வைத்தல்

 

103) "காரைக்குடி புத்தக திருவிழா"வினை முன்னிட்டு காரைக்குடி  கம்பன் மண்டபத்தில் நடைபெற்ற ஓவியம் ,கவிதை மற்றும் பேச்சு போட்டியில்  ஆசிரியரே அரசு விடுமுறை நாளன்று மாணவர்களை அழைத்து சென்று பங்கேற்க வைத்தல்- "இப்பள்ளி மாணவி தனலெட்சுமி வெற்றி பெற்று பரிசு பெறுதல்"  

(பரிசு வழங்கியவர் : பேரா .சுப்பையா , துணை வேந்தர் ,அழகப்பா பல்கலைகழகம் ,காரைக்குடி .முன்னிலை வகித்தவர் : திருமதி.வள்ளியம்மை ,நீதிபதி,கனடா .இப்போட்டிக்கான தகவல் கொடுத்தவர் : திருமதி .முனைவர் தேவி நாச்சியப்பன் , முதுகலை தமிழ் ஆசிரியை, SMS மேல்நிலைப் பள்ளி,கிழசெவல்பட்டி )


104) "காட்சி வழியாக தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களை   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா"

  (திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவை சார்ந்த அழகப்பா ராம் மோகன் 52 DVD யுடன் டிவி கொடுத்து அமெரிக்கா பல்கலைகழகத்தில் தயாரிக்கப்பட்ட இயற்பியல் ,கணிதம் ஆகியவற்றை எளிதாக கற்பது தொடர்பாக விளக்குதல் ) ( தலைமை : பள்ளி செயலர் : திரு.AR .சோமசுந்தரம் ,முன்னிலை : கல்வி முகவர் : திருமதி .மீனாட்சி ஆச்சி , திரு.அடைக்கலராஜ் ,உதவி தொடக்க அலுவலர் ,கண்ணங்குடி )

 

105)  "மத்திய அரசின்  சுகாதார துறையின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் "

( முகாமில் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.ஆலசோனை வழங்கியவர்கள் : கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி மற்றும் குழுவினர் )

 

106)  "தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்" ( தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு அறவியல் தொடர்பான செயல்முறைகள்,சோதனைகள்  நேரடியாக செய்து காண்பித்தல்)

 

107) 10 நாட்களில் ஹிந்தி சொல்லி தரக்கூடிய "பயிற்றுநர் மதுரை திரு.விஸ்வநாதன் தம்பியண்ணா ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை  பயிற்சி முகாம்" நடத்தினார்

 ( பயிற்சி முகாமில் ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் குறித்தும்,ஆசிரியர்கள் பணி பற்றியும் அழகாக எடுத்து சொல்லப்பட்டது ) ( தலைமை : திரு.அடைக்கலராஜ் ,உதவி தொடக்க அலுவலர் ,கண்ணங்குடி)

 

108)  "காரைக்குடி   தமிழ்ச் சங்கம்" சார்பாக (பேரா .ராஜாராமன் பேராசிரியர் ,தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைகழகம்,காரைக்குடி அவர்கள் ஏற்பாட்டில் ) நடைபெற்ற "அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டி"களில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி ஆகியவற்றை ஒப்புவிப்பதற்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் அரசு விடுமுறை நாளன்று காரைக்குடி சென்று கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசு பெறுதல் 

( தலைமை தாங்கி பரிசுகள் வழங்கியவர் :  கோவிலூர் ஆதீனம் தவத்திரு.மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் )


109) "தேவகோட்டை  ஜமீன்தார் திரு.சோம.நாராயணன் செட்டியார் தலைமையில்  நகர சிவன் கோவிலில் நடைபெறும் வார வழிப்பாட்டில்"  தொடர்ந்து 40 வாரங்களுக்கு மேல் வாரா,வாரம் வெள்ளிகிழமை தோறும் மாலை வேளையில் நடைபெறும் பாடல்களை பாடுவதில் தொடர்ந்து செல்லும் மாணவர்களுக்கு முதல் மூன்று மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற இப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா 

( பரிசுகள் வழங்கியவர்கள் ஜமீன்தார் அய்யா மற்றும் தேவகோட்டை டாக்டர் சிவக்குமார் )


110) "1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவியர் களப்பயனமாக விசலாயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு அழைத்து செல்லல்"

* பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்கள் ,அவர்களது நண்பர்கள் ,100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்,அனைத்து ஆசிரியர்கள்,சத்துணவு பணியாளர்கள் என அனைவரும் இரண்டு A.C.பேருந்துகளில் ( சென்னை செல்லும் ஓம்னி பேருந்து ) கல்லூரிக்கு அழைத்து செல்லல் 

* கல்லூரியில் ஆட்டு பண்ணை,மாட்டு பண்ணை,பன்றி பண்ணை,கோழி,முயல்,வாத்து பண்ணை ஆகியவற்றை பார்த்து கல்லூரி டீன் பேரா. முனைவர் பேபி ராணி அவர்களிடம் சந்தேகங்கள் கேட்டு மாணவர்கள் தெளிவடைதல்

* வெண்டிக்காய்,மல்லிகை பூ போன்ற பயிர்கள் நடுதல் ,அது தொடர்பான கேள்விகள் மாணவர்களால்  கல்லூரி பேராசிரியர்களிடம் கேட்டு தெளிவடைதல் 

* அனைத்து மாணவர்களும் கல்லூரி தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுதல் 

* அனைவருக்கும் கல்லூரி தாளாளர் திரு.சேது குமணன் அவர்கள் நல்ல ஏற்பாடுகள் செய்து கொடுத்ததுடன் நல்ல மதிய உணவும் வழங்குதல் - நன்றி கூறுதல்

111) புதுகோட்டையில் நடைபெற்ற "வேந்தர் டிவி இது உங்க மேடை நிகழ்ச்சிக்கான போட்டி" தேர்வில்  ஆசிரியர் உதவியுடன் அரசு விடுமுறை நாளன்று பள்ளி மாணவியர் பங்கேற்பு 




112 "மந்திரமா ,தந்திரமா ?" அறிவியல் நிகழ்ச்சி.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திரு.சேதுராமன் நேரடி  செயல் முறைகளின் மூலம் விளக்கம் 

* ஏராளமான பெற்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் 


பந்தினை மறையவைத்து மீண்டும் வரவைத்தல், காதில் குளிர்பானம் குடித்தல்,  திருநீறு வருவித்துக் காட்டுதல்,உடம்பின் மீது தீயை இழுத்தல் அதனால் தீக்காயம் ஏற்படுவதில்லைவாயில் எறியும் கற்புரம் போடுதல் ,தண்ணிரில் விளக்கு ஏற்றுதல்,கண்ணாடி துண்டுகளை தின்னுதல், நீரை வானத்துக்கு அனுப்புதல்,வெற்றுப் பையில் இருந்து பொருட்களை எடுத்தல்,தேங்காயை உடைத்தால் பூக்கள் வெளிப்படுதல்,காதுகள் வழியாக கேள்விகளை அனுமானித்தல்,உடல்மேல் சாம்பல் பூசியதும் பெயர் தொன்றுதல்,மாய எழுத்துக்கள்,கைப்பாவையே கடவுள்,மூவர்ண ரிப்பன்களை இணைத்தல்,மந்திரத் தீ,குறிசொல்லுதல்,துண்டுகளை இணைத்தல் ( பிதாகரஸ் தத்துவம் ) , காசு உள்ள முட்டையை எடுத்தல் ,கைக்குட்டையை காண்பித்து மறைய வைத்து கூடு விட்டு கூடு மாற வைத்தல் ,பந்தை  இருப்பதை போலவே காண்பித்து இல்லமால் செய்து மீண்டும் பந்தை வரவைத்தல் ,ஜாதக முறையில் பெயரில் உள்ள பிரச்சினையை தீர்மானித்தல் உட்பட பல அறிவியல் அற்புதங்களை தந்திரங்களோடு சொல்லி கொடுத்தல்
 (தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை ) ( முன்னிலை : திருமதி .லெட்சுமி தேவி ,உதவி தொடக்க கல்வி அலுவலர் ,தேவகோட்டை, திரைப் பட  உதவி இயக்குனர் திரு.கரு.அண்ணாமலை ,சென்னை )

113) காரைக்குடியில் நடைபெற்ற "மத்திய அரசின் அஞ்சல் துறையின் கடிதம் எழுதுதல் போட்டி"யில் ஆசிரியரே மாணவர்களை காரைக்குடிக்கு அழைத்து வந்து பங்கேற்க வைத்தல் 
( இதனில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் இப்பள்ளி மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது) 

114)  "இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 சதவிகித வாக்களிப்பதர்க்கான விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டி" பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காக நடைபெறுதல்

 ( சிறப்புரையாற்றி பரிசு வழங்கியவர் திருமதி .மங்களேஸ்வரி , வட்டாட்சியர்,தேவகோட்டை.VAO  சந்திர சேகர், RI மயில்வாகனன் ,திருமதி .மங்களேஸ்வரி

115) "பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்" -
( தலைமை : திரு.அ .லெ .அண்ணாமலை செட்டியார்,தலைவர்,பெற்றோர் ஆசிரியர் கழகம்,தேவகோட்டை)  
(சிறப்புரை : திரு. தாமோதரன் , ஓய்வு பெற்ற ஆசிரியர்,ஈத்தாமொழி ,கன்னியாகுமரி மாவட்டம்)

116) "பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா"
*** 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவியர் களப்பயனமாக விசலாயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு அழைத்து சென்றபோது மரக்கன்றுகள் நட்டதை பாராட்டி அனைத்து மாணவர்களுக்கும் விருது வழங்கப்படுதல் ( விருது வழங்கியவர்கள் : திரு.சேது குமணன் ,தாளாளர் , சேது பாஸ்கரா விவசாய கல்லூரி,விசலாயன்கோட்டை. மற்றும் திரு.அகமது யாசின்,தாளாளர்,நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி ,கமுதி )

117)  "இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 சதவிகித வாக்களிப்பதர்க்கான விழிப்புணர்வு"  - நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பாக 100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு வலியுறுத்தி பொது மக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் - பாடல்,நடனம்,கவிதை,நாடகம்,உரை ஆகியவற்றின் மூலமாக லஞ்சம் வாங்கமால் ஒட்டு அளிப்பது , அனைவரும் 100 சதவிகிதம் வாக்களித்து ஜனநாயகத்தை வலுபடுத்துதல் போன்ற தகவல்களை எடுத்துரைத்தல் ) 

(தலைமை : திரு.ஜெயபால் ,ஆணையாளர் (பொறுப்பு),நகராட்சி,தேவகோட்டை)

118 ) "விளையாட்டு விழா" 
( ஆசிரியர்,மாணவர்கள் அனைவருக்கும் போட்டி வைத்து விருது வழங்குதல் )

( பரிசு மற்றும் விருதுகளை வழங்கியவர்கள் : "திரு.ரமேஷ்,ஆய்வாளர்,நகர் காவல் நிலையம்" ,தேவகோட்டை  மற்றும் திரு.சேது குமணன் ,தாளாளர் , சேது பாஸ்கரா விவசாய கல்லூரி,விசலாயன்கோட்டை.)

119)  "எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா"-நடுநிலைப் பள்ளி அளவில் பள்ளி நிறைவு வகுப்பை அடையும் மாணவர்களை வாழ்த்தி ஒளி ஏற்றும் விளைவாக கொண்டாடுதல் 

( தலைமை : திரு.சென்னை வேல்ஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதன்மை முதல்வர் பூர்ண சந்திரன்)


120)  "மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா"
"மத்திய அரசின் மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை" சார்பாக "தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" மற்றும் மத்திய நீர்வாரியம் சார்பாக நடைபெற்ற "நீரை   சேமிப்போம்   வரும்காலம் காப்போம்"என்ற போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி பெற்றோர்கள் சான்றிதழ் வழங்கும் விழா
( பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இப்போட்டிகளில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)

121)  "துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் ஹிதயதுல்லா" உடன் துபாய் குறித்து பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

 ( துபாய் தொடர்பாக எண்ணற்ற புதிய தகவல்களை மாணவர்கள் நேரடியாக கேள்விகள் கேட்டு பதிலாக பெற்றனர் )

122) "இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 சதவிகித வாக்களிப்பதர்க்கான விழிப்புணர்வு-பிஞ்சுகள் செய்த தேர்தல் விழிப்புணர்வு "

* "புதிய முறையில் தபால் அட்டை மூலம்", விலை மதிப்பில்லா வாக்கினை மறவாதீர் , அனைவரும் 100 சதவிகிதம் வாக்களியுங்கள்,இந்திய ஜனநாயகத்தை வலுபடுத்துங்கள் என்கிற வாசகத்துடன் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அணைத்து மாணவர்களும் அவர்களுடைய பள்ளி வகுப்பு தோழர்களின் பெற்றோர்க்கும்,நண்பர்களுக்கும் தபால் அட்டை எழுதுதல் 

* தபால் அட்டை பார்த்த பொதுமக்கள் திகைப்பு  ( தலைமை : திருமதி.மங்களேஸ்வரி,வட்டாட்சியர்,தேவகோட்டை.மற்றும் VAO சந்திரசேகர் ,பெருமாள் )

123) "முதலாம் ஆண்டு ஓவிய போட்டி" 
( பிற பள்ளிகளுக்கான ஓவியம் வரையும் போட்டி எம் பள்ளியில் நடத்தப்பட்டு  பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதல் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது)



124)  "அகில இந்திய வானொலியான கோடை FM 100.5" இல் மாணவர்களுக்கான பாட்டுக்கு பாட்டு பங்கேற்கும் நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்பு 

125) "தனியார் சர்வதேச பள்ளி"யில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று காரைக்குடியில்  கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடந்த விழாவில் "துணை ஆட்சியரிடம் பரிசு பெறுதல் விழா"

126)  "தேசிய அளவிலான மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் போட்டி"களில் சிறந்த படைப்புக்கு பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா 

( போட்டிக்கான அனைத்து பதிவுகளும் இணையதளத்தின் வழியாகவே அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)

127) "மத்திய  அரசின் காற்று சக்தி நிறுவனத்தின் மாநில அளவிலான காற்றலை ஆற்றல் போட்டி"களில் 
( கட்டுரை,கவிதை  ) மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் பெறுதல் விழா 

128) "அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு உரை"

 ( சிறப்பு பேச்சாளர் : திரு .சீ .பழமலைநாதன்,அறிவியல் ஆசிரியர் ,ஊ.ஒ.ந.நி.பள்ளி,கீழ்கதிர்பூர்,காஞ்சிபுரம் மாவட்டம் .)



129)  "பள்ளியில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனைத்து நாட்களும் வருகை புரிந்த மாணவி உட்பட மன்றத்தில் பல்வேறு செயல்பாடுகள் செய்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா"

130) "சுட்டி விகடன் இதழின் கனவு ஆசிரியர்" சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்க்கு வழங்கி பாராட்டும் விழா 

(தலைமை : பேரா : முனைவர் சந்திரமோகன் ,முதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தேவகோட்டை )

131) அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு உரை ( சிறப்பு பேச்சாளர் : திரு .சீ .பழமலைநாதன்,அறிவியல் ஆசிரியர் ,ஊ.ஒ.ந.நி.பள்ளி,கீழ்கதிர்பூர்,காஞ்சிபுரம் மாவட்டம் .

                               
வார,வாரம் மற்றும் மாத திருவிழாக்கள் 

                       இப்பள்ளியில் வாரா,வாரம் மாணவர்களுக்கு பேச்சு,கவிதை,ஓவியம்,மனக்கணக்கு ,புதிர்கணக்கு,வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை மாதம் ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதனை வாரம்தோறும் போட்டியாக நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.  மேலும் மாதா,மாதம் பாடங்கள் சார்ந்த வினாடி வினா மாதம் ஒரு பாடம் என எடுத்துக் கொண்டு மாத கடைசியில் போட்டிகள் நடத்தி வருகிறோம்.இதனில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு வெற்றி பெற்று பரிசு பெறுகின்றனர்.ஒரு முறை பரிசு பெற்ற மாணவர் அடுத்த முறை பார்வையாளராக  மட்டுமே இருக்க முடியும் என தெரிவித்துள்ளதால் அனைத்து மாணவர்களும் போட்டிகளில் கண்டிப்பாக பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களின் இளம் வயது மனதில் விதைத் துள்ளோம்.இத்திருவிழாக்கள் மாணவர்கள்  மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


                                    இந்த கல்வி ஆண்டு 2015-2016 முழுவதும்  சதத்தைத்  தாண்டியும் தொடரும் சாதனைகள் செய்வதற்கு உதவியாக இருந்த பள்ளி செயலர் திரு.AR.சோமசுந்தரம் அவர்கள்,கல்வி முகவர் .மீனாட்சி ஆச்சி அவர்களுக்கும்,ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள்,கல்வி துறை அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள்,தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.பேரா .முனைவர் சந்திரமோகன் , பத்திரிக்கை நிருபர்கள்,அனைத்து பத்திரிக்கைகள் , தொலைகாட்சி நிறுவனங்கள்,முக நூல் நண்பர்கள்,தொடர்ந்து என்னுடைய மெயில் பார்த்த உடன் எனக்கு ஊக்கபடுத்தி  எழுதி வரும் இந்தியன் வங்கியின் அதிகாரியும்,பத்திரிக்கை எழுத்தாளாருமான திரு.வேணுகோபாலன்,சிறப்பு விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.



                  பள்ளி பற்றிய சிறு தொகுப்பு



                  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இப்பள்ளி துவங்கப்பட்டது.                              

                               இப்பள்ளியில்  பின்தங்கிய சமுதாய   மாணவர்களின் கல்வி  மீது அக்கறை கொண்டு அவர்களை ஊக்கபடுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயில வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும்.   பள்ளி செயலர் திரு.AR.சோமசுந்தரம் அவர்கள்,கல்வி முகவர் .மீனாட்சி ஆச்சி அவர்கள் ஆவார்கள் .

நேரடியாக மாணவர்களை தேடி செல்லல்

                   எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அமைக்கப்பட்டது தான் பள்ளிக் கூடம்.தமிழக அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக சமுதயாத்தில்  மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிகுறவ சமுதாய இன மக்கள்,ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் ( ஊர்,ஊராய் சென்று குறி சொல்பவர்கள் ) சமுதாய மாணவர்கள் ,இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும்   அவர்களின் இருப்பிடம் தேடி சென்று கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கல்வியின்  புதிய அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி  அவர்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள்  என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்.

  தினம்தோறும் அனுபவ கற்றல் 

                            இப்பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்த சுழலிலும் மறக்காது.வாழ்க்கையின் என்றுமே மறக்க கூடாது என்ற நோக்கில் தான் கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளை பள்ளியிலும் ,களப்பயணமாக புத்தக திருவிழா,அஞ்சலகம்,வங்கி,நூலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தை புதுமையாக்கி வருகின்றார்கள் .மாணவர்களுக்கு புதிய ,புதிய அனுபவங்களை தினம்தோறும் கற்று கொடுத்து வருகிறார்கள் . 




இசை ,நடனம் மூலம் புதுமை  கற்பித்தல்

                             இப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள்,அபிராமி அந்தாதி போன்றவற்றை இசையோடு நடனம் மூலம் புதிய முறையில் பல்வேறு கலைகளை கற்பித்து வருகிறார்கள்.கலைகளின் மூலம்  கற்கும் இளம் வயது மாணவர்கள் இது தொடர்பான வல்லுனர்கள் வரும்போது ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு  மாணவ,மாணவியர் கூட அவர்களிடம் மிக எளிதாக கேள்விகள் கேட்டு பதில் பெறுவதை பார்த்து,இது தங்கள் அனுபவத்தில் புதுமையாக உள்ளது எனக் கூறி வல்லுனர்கள்  வியப்பில் செல்கின்றனர். மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள நிபுணர்களை பள்ளிக்கே வரவழைத்து குறிப்பாக தமிழக புள்ளியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப.,தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம்,கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர்,பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி ,திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம்,தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ் கோவன் , மத்திய அரசின் கல்பாக்கம்  முதன்மை அணு விஞ்ஞானி ஜலஜா மதன் மோகன், தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ். ,தேவகோட்டை துணை ஆட்சியர் திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் .IAS,தேவகோட்டை நகராட்சி தலைவர் திருமதி.சுமித்ரா ரவிகுமார்,அயர்லாந்தின் டுப்ளிங் மாகாண பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆராய்ச்சியாளர் குமார்,நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர்"  சென்னையை சார்ந்த அறிவரசன்,மத்திய அரசின் காரைக்குடி  மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தின்
 ( CECRI) முதன்மை விஞ்ஞானி ( முனைவர் .ஜெயச்சந்திரன் ) மற்றும் 3 மத்திய அரசின் விஞ்ஞானிகள்,கலை வழி கற்றல் பயிற்சி அளிக்கும் திருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் குழுவினர்,தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி திரு.ராமசந்திரன் ,தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி திரு.கருப்பையா,JCI இன் சர்வதேச பயிற்சியாளர் பேரா .RM.ராமநாதன்,தேசிய வருவாய் வழி மற்றும் திறன் போட்டி  தேர்விற்கான மனத்திறன் கணக்கிற்கான சிறப்பு பயிற்சி" நடத்தும்திரு.ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரை பாண்டியன்,காரைக்குடி பறவைகள் ஆர்வலர் பிரசன்னா மணிவண்ணன்,மதுரை மண்டல பயிற்சியாளர் JC.தயானந்தன்,காரைக்குடியை சார்ந்த டாக்டர் பார்கவி மணிவண்ணன்,சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன்,மத்திய கிழக்கு பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகன்னநாதன் ,கோவில்பட்டி கல்வி நிறுவனங்களின் அதிபர் நாகஜோதி,சென்னை குணசேகரன் ,வேளாண்மை துறை அதிகாரிகள் மதுரை மண்டல அதிகாரி ஸ்ரீதரன் ,சிவகங்கை மாவட்ட அதிகரி இளங்கோ,திரு ரமேஷ்,காவல் ஆய்வாளர்,தேவகோட்டைமுதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேரா . முனைவர் சந்திரமோகன் ,ஜெர்மன் நாட்டை சார்ந்த பெண் தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரம்மர் ,திருமதி யோக லெட்சுமி ,முதல்வர்,அழகு மலர் பள்ளி,சிவகங்கை , LIC வளர்ச்சி அதிகாரி வினை தீர்த்தான் ,தேவகோட்டை நகராட்சி மேலாளர் திரு.பிச்சை மைதீன்,தேவகோட்டை LIC கிளையின் மேலாளர் திரு.மோகன சுந்தரம், வளர்ச்சி அதிகாரிகள் திரு.தமிழரசு,திரு.பெரியசாமி, தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தமிழ் துறை தலைவர் பேரா . பழனி ராகுலதாசன்,திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவை சார்ந்த அழகப்பா ராம் மோகன்,சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.அடைக்கலராஜ்,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  உதவி தொடக்க கல்வி அலுவலர்திருமதி.லெட்சுமி தேவி, கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி,10 நாட்களில் ஹிந்தி சொல்லி தரக்கூடிய "பயிற்றுநர் மதுரை திரு.விஸ்வநாதன் தம்பியண்ணா ,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திரு.சேதுராமன்,திரைப் பட  உதவி இயக்குனர் திரு.கரு.அண்ணாமலை,தேவகோட்டை வட்டாட்சியர் திருமதி .மங்களேஸ்வரி, வருவாய் உதவியாளர் திரு.ரமேஷ்,திருமதி .மங்களேஸ்வரி,VAO சந்திர சேகர்,வருவாய் ஆய்வாளர் திரு.மயில்வாகனன், கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழி ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தாமோதரன்,கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி தாளாளர் திரு. அகமது யாசின்,தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திரு.ஜெயபால் ,சென்னை வேல்ஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதன்மை முதல்வர் பூர்ண சந்திரன்,துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் ஹிதயதுல்லா,தமிழக அரசின் சுகாதார துறையின் சிவகங்கை மாவட்ட தொழுநோய் மேற்பார்வையாளர்கள் திரு.சாகுல் ஹமீது , திரு.சந்தான கிருஷ்ணன்,தேவகோட்டை மருத்துவர் திரு.ஏழுமலை, திருமதி.பேரா . வீரலட்சுமி ,துறை தலைவர் ,தாவரவியல் துறை, NSS  ஒருங்கிணைப்பாளர் ,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி ,தேவகோட்டை,உட்பட பல்வேறு நிபுணர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி  புதிய அனுபவத்தை வழங்கியதுடன் அவர்களிடம் பேசியவர்களுக்கும் புதிய அனுபவம் கிடைத்ததாக கூறி செல்கின்றனர். 




மாணவர்களின் திறமைகளை ஊடகங்களின் வாயிலாக வெளிபடுத்துதல் 
                        இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை நாளிதழ்களில்,வார இதழ்களில் ,மாத இதழ்களில்,வானொலி,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக கட்டுரைகளாக ,கவிதைகளாக,ஓவியமாக ,கதைகளாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கி விடமால் முழுமையான அறிவு பெற்றவர்களாக வளரவேண்டும் என்ற நோக்கில்தான் நடுநிலைப் பள்ளி அளவில் பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறோம் .இது தொடரும்.

    லெ .சொக்கலிங்கம்,
    தலைமை ஆசிரியர்,
    சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
    தேவகோட்டை.
    சிவகங்கை மாவட்டம்,
    09786113160.
 
    E-Mail : jeyamchok@gmail.com

      http://www.kalviyeselvam.blogspot.in/

    FACE BOOK ID: https://www.facebook.com/chokka.lingam.5815

    WHATSAP NUMBER : 08056240653 


பட விளக்கம் : IMG- 5501 தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ்.  அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல் 

பட விளக்கம் : IMG- 0294 தேசிய வாக்காளர் தின விழாவில் மாணவர்களுடன் துணை ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ் IAS அவர்கள் கலந்துரையாடல்

 பட விளக்கம் : IMG-2667 CECRI மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

  பட விளக்கம் : IMG-2392 நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர்  சென்னையை சார்ந்த அறிவரசன் ஒரு  நாள் முழுவதும் எளிய  சோதனைகள் மூலம்   வாழ்வியல் அறிவியலை பள்ளிகளில் கற்பிக்கும் நிகழ்ச்சி

பட விளக்கம் : IMG- 6201  காட்சி வழியாக தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களை   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழாவில் திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவை சார்ந்த அழகப்பா ராம் மோகன் அறிவியல் விளக்கம் வழங்குகிறார் 

 பட விளக்கம் : IMG-5071 ஜெர்மன் நாட்டை சார்ந்த பெண் தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரம்மர் மாணவர்களுக்கு வாழ்வியல் விழிப்புணர்வு பயிற்சி அளித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்

 பட விளக்கம் : IMG-6823 மந்திரமா ,தந்திரமா ?" அறிவியல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திரு.சேதுராமன் நேரடி  செயல் முறைகளின் மூலம் விளக்கம்






 




No comments:

Post a Comment