Sunday, 8 May 2016

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தனியார்  சர்வதேச பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று சப் கலெக்டரிடம் பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.




                              விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் யோகேஸ்வரன்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.காரைக்குடியில் உள்ள தனியார் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற அனைவருக்கமான ஓவிய போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் திவ்ய ஸ்ரீ,புகழேந்தி,கிஷோர் குமார்,தனுதர்ஷினி,காயத்ரி,ஜீவா,பரத்குமார்,தனம்,வீரன்முகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.இவர்களில் பரத்குமார்,தனம் ஆகியோர் என் கனவு தேசம் என்கிற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்று பரிசு பெற்றனர்.அரசு விடுமுறை நாளன்று பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற ஆசிரியை கலாவல்லிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.இப்போட்டிகளில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று சப் கலெக்டரிடம் பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.




No comments:

Post a Comment