Sunday, 29 May 2016

 பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி!

கோடை விடுமுறையில்   சுட்டி விகடன் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டிகளில்  பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ( தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இபோட்டிகளில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது )





             கோடை விடுமுறையில்     சுட்டி விகடன் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி புதுகோட்டை  மையத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக 8 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

                    கோடை விடுமுறையில் அரசு விடுமுறை நாளன்று பெற்றோர் செல்ல இயலாத நிலையில்    காலை  6.30 மணிக்கெல்லாம் 8 மாணவர்களையும் ஆசிரியர் தேவகோட்டையில் இருந்து புதுகோட்டைக்கு அழைத்து சென்றார்.அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி அளவில் சிவகங்கை,புதுகோட்டை மாவட்ட அளவில் இப்பள்ளி மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment