Thursday, 24 March 2016

                                                              மாணவிக்கு பாராட்டு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றார்.



                                      காரைக்குடி புத்தக திருவிழா 2016 சார்பாக நடைபெற்ற பேச்சு போட்டியில் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர்.இதனில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி தனலெட்சுமி வெற்றி பெற்று பரிசு வாங்கினார்.வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் புத்தகங்களை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவிக்கு வழங்கியதுடன்,  பயற்சி அளித்த ஸ்ரீதர் ஆசிரியருக்கும் பாராட்டு தெரிவித்தார்.அனைத்து ஆசிரியர்களும்,மாணவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி விடுமுறை நாளன்று  ஆசிரியர் மாணவியை போட்டிக்கு தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு அழைத்து சென்றார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றார்.பரிசு மற்றும் சான்றிதழுடன் மாணவி உள்ளார்.

No comments:

Post a Comment