71 வயதில் கண் பார்வை சரியில்லாத நிலையிலும் திரு.சண்முக சுந்தரம் என்பவர் திரு.பாலா சுப்பிரமணியம் (அவருக்கும் வயது 70 ) உதவியுடன்
தி இந்து தமிழ் நாளிதழில் மாயா பஜார் பகுதியில் (03/02/2016) எனது பேட்டியை படித்து விட்டு பள்ளிக்கு தபால் அட்டையில் வாழ்த்து தெரிவித்து எழுதி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு போன் செய்து பேசும்போது இன்றைய கல்வி தொடர்பாகவும் ,அவரது ஆதங்கத்தையும் என்னிடம் தெரிவித்து எங்கள் பள்ளியை பாராட்டினார். மேலும் 71 வயதிலும் கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் ,நண்பர் உதவியுடன் பள்ளியை பற்றி படித்த உடன் அவரிடம் சொல்லி உடனடியாக ( தனக்கு கண் பார்வை குறைவான நிலையில் ) கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார். நேரம் கிடைக்கும்போது என்னிடம் பேசுவதாகவும் தொலை பேசியில் தெரிவித்தார்.தனக்கு சரியான வருமானம் இல்லாத நிலையிலும் சில பள்ளிகளுக்கு சென்று நல்ல கல்வி கொடுக்க சில முயற்சிகள் செய்வதாகவும் தெரவித்தார்.அவரது முயற்சிகளுக்கும்,அவரது இந்த நிலையிலும் ஒரு தபால் அட்டை வாயிலாக வாழ்த்து தெரிவித்ததற்கும் நன்றிகள் பல.
No comments:
Post a Comment