மாநில அளவில் நடைபெற்ற கணித போட்டிகளில்
தேவகோட்டை - திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கணிதத்திறன் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசு பெற்றார் .
இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி
கார்த்திகா வெற்றி பெற்று பரிசினை தட்டி சென்றார்.மாணவி கார்த்திகா
கணித திறன் தேர்வில் வெற்றி பெற்று சிறப்பு
பரிசான அண்ணா அறிவியல் மையத்தின் மெடலையும் ,ரொக்கமாக பணமும் , சான்றிதழும்
பெற்றார்.இப்போட்டிகளுக்கு மாணவிகளை
தயார்செய்த ஆசிரியை முத்துமீனாள்,ஊக்க படுத்தி அழைத்து சென்ற பெற்றோரையும்,பரிசு பெற்ற மாணவியையும் ,
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.தேவகோட்டையில் இருந்து காலையில் 6 மணிக்கெல்லாம் கிளம்பி சுமார் 2 .30 மணி நேரம் பயணம் செய்து திருச்சி சென்று மாணவியும் ,ஆசிரியரும் இபோட்டியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment